/tamil-ie/media/media_files/uploads/2020/10/Bigg-Boss-Raiza-and-Ramya-resized.jpg)
Bigg Boss 4 Tamil Review Day 16
Bigg Boss 4 Tamil review Day 16: 'திரும்ப சன் டிவி பக்கமே போய்டலாமா' என தோன்றும் அளவுக்கு இருந்தது நேற்றைய எபிசோட். விஜய் டிவியின் 'அது இது எது' நிகழ்ச்சியில் வரும் 'சிரிச்சா போச்சு' சுற்றின் விரிவான வெர்ஷனைப்போன்று இருந்தது இவர்களுடைய 'லக்ஜூரி பட்ஜெட் டாஸ்க்'. இந்த சீசன் பயபுள்ளைகளுக்கு ஏன்தான் 'ரூல்ஸ்' புரிந்துகொள்வதில் அவ்வளவு குழப்பமோ தெரியவில்லை. இதுவரை விளையாடிய ஒரு விளையாட்டில்கூட முழுமையான விதிமுறைகளைப் பின்பற்றவில்லை. சரி இருக்கட்டும் வாருங்கள் நாம் சொர்க்கபுரிக்கு செல்வோம்!
'மாரி..' படப் பாடலோடு தொடங்கிய பதினாறாவது நாள், ஆரிக்கும் சுரேஷுக்குமான வாக்குவாதத்துடன் நகர்ந்தது. 'அது என்ன சின்னப்புள்ளைத்தனமா கமல் சார் முன்னாடி கம்ப்லைன்ட் பண்ணுறது? மூஞ்சுமேல சொல்லு மேன்' என்றபடி 'அட்வைஸ்' ஆரி கோபமாகப் பேசிக்கொண்டிருந்தார். அதிகம் டைம் வேஸ்ட் செய்யாமல், சொர்க்கபுரி குடும்பம் Vs அரக்க குடும்பம் டாஸ்க்குக்கு நம்மைகூட்டிச்சென்றார் பிக் பாஸ். ப்ரோமவை எல்லாம் பார்த்துவிட்டு வேற லெவல் எபிசோடாக இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பில் பார்த்துக்கொண்டிருந்த நமக்கு முழு ஏமாற்றம்தான். இதெல்லாம் சரியில்ல பிக் பாஸ்!
/tamil-ie/media/media_files/uploads/2020/10/Bigg-Boss-Tamil-Vijay-TV-Bigg-Boss-Promo-Rio-Suresh-Chakravarthy-300x167.jpg)
அமைதியாகச் சிலைபோல் அமர்ந்திருக்கும் ராஜகுடும்ப உறுப்பினர்களை தொந்தரவு செய்து, அவர்களை அசைத்து அடிமையாக்கிக்கொள்ளவேண்டும் என்பதே டாஸ்க். பாஹுபலி, தேவசேனா, அவந்திகா, பல்லாலதேவா, ராஜமாதா சிவகாமி, 'முத்து' பட மீனா, புலிகேசி காஸ்டியூம் எனக் கதாபாத்திரங்களின் தேர்வு அருமையாகவே இருந்தது. மறுபுறம் அரக்கர்களின் ஒப்பனைகள் மற்றும் உடைகளும் ஃபர்ஸ்ட் க்ளாஸ். ஆனால், விளையாட்டுதான் சொதப்பல்.
இந்த ஒட்டுமொத்த நாடகத்துலேயே அதிக கவனம் ஈர்த்தவர் சுரேஷ் மட்டும்தான். பாலாவிற்கு என்னதான் பிரச்சனை என்பது புரியவில்லை. முதல் நாளிலிருந்து 'தன்னை இதுவரைக்கும் யாருக்குமே தெரியாது, அதனால் நற்பெயர் வாங்குவதற்கே வந்திருக்கிறேன்' என்று கூறுபவர், அதிகப்படியான கவனத்தைப் பெறுவதற்கு என்னவெல்லாமோ செய்துகொண்டிருக்கிறார் போல. இந்த 'டுபாக்கூர்' என்ற வார்த்தையை பாலா விட்டுக்கொடுப்பதாகத் தெரியவில்லை. அதிகம் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார். இதுக்கு ஒரு எண்டு கார்டு போடமாட்டீங்குறீங்களே. கொஞ்சம் பார்த்து பண்ணுங்க பாஸ்!
'அடுத்தவர்களின் பிரச்சனைகளில் மூக்கை நுழைத்து மூக்கை வளர்த்தவளே', 'வேண்டாத விஷயங்களுக்கு வாயைத் திறப்பவளே இப்போது திற' என சனம் ஷெட்டி மீது தன் மனதிலிருந்த ஆதங்கத்தையெல்லாம் அரக்கன் வேடத்தில் கொட்டித் தீர்த்துவிட்டார் சுரேஷ். யாரிடமும் ஒட்டாமல் இருக்கும் சனம் ஷெட்டியை அவ்வளவு எளிதில் சிரிக்க வைத்துவிடமுடியுமா என்ன? முதல் நபராக வந்து போட்டியில் வெற்றிபெற்றார் சனம். அதனைத் தொடர்ந்து, 'என்ன ஒரு அழுத்தக்காரி' என்று சனம் பற்றி டிஸ்கஸ் செய்தனர் அரக்கர்கள். இதுபோன்ற சில டாஸ்க்குகள்தான் சனம் ஷெட்டியை காப்பாற்றிக்கொண்டிருக்கின்றன. பாவம்!
/tamil-ie/media/media_files/uploads/2020/10/Bigg-Boss-Tamil-4-Sanam-Shetty-300x167.jpg)
'நம்மள ரொம்ப சீண்டுவாங்க. மனசு கஷ்டப்படுகிற மாதிரி பேசுவாங்க. எதுக்கும் அசையாம இருக்கனும்' என்று அடுத்துச் செல்லும் ராஜ குடும்ப வாரிசான சோம் சேகரை எச்சரித்துக்கொண்டிருந்தார் சனம். என்றாலும், சோம் சேகரிடம் அதுபோன்று நடந்துகொள்ளவில்லை அரக்கர்கள். மிகவும் சாஃப்ட்டாகவே டீல் செய்தனர். அவரும் எளிதில் அவுட்டாகி அரக்கனாக மாறினார்.
அடுத்ததாக பாலாவின் தடாலடி என்ட்ரி. படுமொக்கை வாங்கி, ஆட்டத்தை முதலிலிருந்து ஆரம்பித்தனர். சுரேஷ் அலப்பறை வேற லெவல். பாலாவும் அவுட்டாகிவிட, ரியோ களத்திற்குள் குதித்தார். இம்முறை அரக்கர்கள்தான் தோல்வியடைந்தனர். நம்மை ப்ரோமோ போட்டு ஏமாற்றிவிட்டனர் என்ற மைண்ட் வாய்ஸ் எழாமலில்லை. சம்யுக்தா அடுத்து வர, அனைவரும் தங்களின் உத்திகளைப் பயன்படுத்தினர். இந்த விளையாட்டைச் சரியாக விளையாடியவர் சம்யுக்தா மட்டுமே எனலாம். சம்யுக்தாவைக் குறி வைப்பதுபோல, 'பாம்பை ஏன் பக்கத்தில் படுக்க வெச்சிருக்க' என்று சனம் ஷெட்டி பற்றிப் பற்ற வைக்கும் கலையெல்லாம் சுரேஷுக்கு மட்டுமே அத்துப்படி. இந்த வார்த்தைகளால் வெகுண்டெழுந்தார் அனிதா. ஆனால், அனிதா சொல்லவில்லையென்றால் சுரேஷ் சொன்னது பெரிய விஷயமாகவே வெடித்திருக்காது. என்னவோ, கன்டென்ட் கிடைத்தால் போதும்பா!
/tamil-ie/media/media_files/uploads/2020/10/Ramya-1-231x300.jpg)
இவ்வளவு ரணகளத்துல ரம்யா மற்றும் சம்யுக்தா உறங்கிக்கொண்டிருக்கிறார்கள். பாரபட்சம் பாக்குறீங்களே பிக் பாஸ். முதல் சீசனில் ரைசா கொஞ்சம் கண் அசந்தாலும், நாயை அவிழ்த்துவிடுவீங்களே. இவர்களுக்கு மட்டும் ஏன் பிக் பாஸ் சாஃப்ட் கார்னர்! அதெல்லாம் சரி.. இந்த 4 மணி ஷிவானி எங்கே போனாங்கனு தெரியல. அரக்கர்கள் சீரியஸாக விளையாடிக் கொண்டிருக்கும்போதும் கூட, மேக் அப் சரிபண்ணுவதில்தான் மேடமுக்கு டைம் சரியா இருக்கு. 'நல்ல கன்டென்ட் இந்த பொண்ணு கொடுக்கும் என்று நம்பி வீட்டிற்குள் விட்டது தப்பா போச்சு' என பிக் பாஸ் ஃபீல் பண்ணாம இருந்தால் சரி.
கேஸ், தண்ணீர் மற்றும் இதர பொருள்களில் கட்டுப்பாடுகள் உண்டு என்ற பிக் பாஸின் புதிய அறிக்கையிலும் அனைவர்க்கும் குழப்பம். 'வயிறு நிறைய சோறு போட முடியவில்லையே' என்ற அர்ச்சனாவின் கண்ணீரோடு நேற்றைய நாள் நிறைவடைந்தது. கன்டென்ட் எதுவும் கிடைக்காமல் பிக் பாஸ் நிகழ்ச்சி சுவாரஸ்யமில்லாமல் நகர்ந்துகொண்டிருக்கிறது, பார்ப்போம், இன்றைக்கு அரக்கர்களா அரசர்களா என்று!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.