Bigg Boss 4 Tamil Review : அனிதாவின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து என்னவாகுமோ என்கிற கேள்விக்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் கன்டென்ட்டுகளை அடுக்குகின்றனர் ஹவுஸ்மேட்ஸ். இந்நாள்வரை ஒட்டிக்கொண்டே சுற்றிய ஆஜீத் மற்றும் கேபிக்கு இடையே மோதல். அதிலும் தன் கைகளைக் காயப்படுத்திக்கொள்ளும் அளவிற்குக் கோபத்தின் உச்சிக்கே சென்றிருக்கிறார் ஆஜீத். எல்லாம் இந்த நாமினேஷனால்தான். அப்படி என்னதான் நடந்தது என்பதை அலசுவோமா?
'நங்கை நிலாவின் தங்கை..' பாடலோடு ஆரம்பமான 85-ம் நாள், நேரடியாக நாமினேஷனுக்கு சென்றது. அதிலும் இம்முறையும் ஓபன் நாமினேஷன். சொல்லவே வேண்டாம்! என்ன காரணம் சொல்வது என்பது தெரியாமல் ஒருவர் சொன்ன காரணத்தையே பிடித்துக்கொண்டு பின்னால் வருபவர்களும் அதையே கூறினார்கள். எவ்வளவு சொன்னாலும் இவர்கள் மாறவே மாட்டார்கள்போல.
ஆரம்பத்திலிருந்து இணைபிரியா தோழர்களாகப் பழகி வந்த ஆஜீத் மற்றும் கேபிக்கு இடையே நேற்று சண்டை. அர்ச்சனா என்ட்ரிக்கு பிறகு பிக் பாஸ் வீடே மூன்று பகுதிகளாகப் பிரிந்தது. அப்போது வரை பெஸ்ட் ஃபிரண்ட்ஸாக இருந்த ஆஜீத் கேபியும் ஒருகட்டத்தில் பிரிந்தனர். அர்ச்சனாவின் லவ் பெட் கேங்கோடு கேபி செல்ல, பாலாவின் நிழலில் ஆஜீத் இருந்தார். இதனைத் தொடர்ந்து நேற்று ஓபன் நாமினேஷனில் ஆஜீத்தை முதல்முறையாக நாமினேட் செய்தார் கேபி. இதனை ஆஜீத்தால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஆனால், ஏற்கெனவே ஆஜீத் கேபியை நாமினேட் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது! ஒருவேளை தன்னை தனியே விட்டுவிட்டு லவ் பெட்டில் இணைந்தது பிடிக்காமல் கேபியை நாமினேட் செய்தாரோ! ஆனால், அதற்காக கைகளைக் காயப்படுத்திக்கொள்வதெல்லாம் கொஞ்சம் அதிகம்தான். அதற்கு ஆரி சொன்னதுபோல், சம்பந்தப்பட்ட நபரிடமே பிரச்சினையைப் பேசி தீர்த்துக்கொள்ளலாம். என்னப்பா நீ!
Bigg Boss 4 Tamil Vijay Tv Gaby
அடுத்ததாக சோம் சேகரை நாமினேட் செய்ய ஆரி கூறிய காரணத்தை ஏற்க மறுத்து, ஆரியை கரித்துக்கொண்டிருந்தார் சோம். ஆனால், அதற்கான சரியான விளக்கத்தைப் பெற்றபிறகு ஆரியிடம் மன்னிப்பு கேட்ட விதம் அருமை. அதற்காக சோமுக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.
இத்தனைநாள் சேஃப் கேம் ஆடிக்கொண்டிருந்த ரம்யாவின் முகத்திரை கொஞ்சம் கொஞ்சமாகக் கிழியத் தொடங்கியிருக்கிறது. வாயைத் திறந்தால் ஆரியை குறைகூறுவதைத் தவிர வேறு எந்தவித வேலையும் இல்லை என்கிற அளவிற்கு அனைவரிடமும் ஆரியை பற்றி தவறாகப் பேசி அவர்களின் மனதில் விஷத்தை ஏற்றிக்கொண்டிருக்கிறார் ரம்யா. மக்கள் அனைவரும் ஆஜீத்தை வெளியேற்றுவதைவிட ரம்யாவை வெளியேற்றவேண்டும் என்கிற நோக்கில் தற்போது உள்ளனர். என்றாலும் இந்த வாரம் ஆஜீத் வெளியேறுவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளன.
ஆஜீத், கேபி, ஷிவானி, சோம் மற்றும் ரம்யா இந்த வாரம் நாமினேட் ஆகியிருக்கிறார்கள். உங்களுடைய வோட் யாருக்கு?
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"