/tamil-ie/media/media_files/uploads/2020/10/BB-Resized.jpg)
Bigg Boss 4 Tamil Vijay tv Review
Bigg Boss 4 Tamil Review day 21 : வாரம் முழுக்க விளையாடுற விளையாட்டை கமலோடும் இணைந்து விளையாடுறது, சரி அப்போதான் போட்டியின் விதிமுறைகளில் குழப்பம் வருதுன்னு பார்த்தா, கமல் எபிசோடுலையும் அவ்வளவும் குழப்பம். இதுதான் இந்த சீசன் பிக் பாஸ். இம்முறை, போட்டியாளர்கள் தங்களின் 'இமேஜ்' பற்றிய கவலையில்தான் இருக்கிறார்களே தவிர போட்டியில் அல்ல. அதனால், சுவாரசியம் இல்லாமல் நகர்ந்துகொண்டிருக்கிறது. அதே அரைத்த மாவை எத்தனை முறைதான் அரைப்பது! என்ன பண்ணுறது.. வாங்க நாமளும் அரைப்போம்.
'அட்வைஸ்' பண்ணுனா தப்பு, 'சரியா பேசுனா' ஒதுக்கிடுவாங்க என ஆரியும், அனிதாவும் தீவிரமாக டிஸ்கஸ் செய்துகொண்டிருக்க (எவிக்ஷன் பயம் இருக்குமா இல்லையா!), அகம் டிவியை திறந்தார் பிக் பாஸ். ஆயுத பூஜை வாழ்த்தோடு தன் பாணியில் நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார் கமல். இதற்கிடையில் அர்ச்சனா, அனிதாவின் கட்டிப்பிடி வைத்தியத்தை வேறு காட்டினார் பிபி.
Bigg Boss 4 Tamil Kamalஇடத்தை மாற்றி உக்கார வைத்து, ஆரம்பத்திலேயே அனிதாவின் 'ஸ்பேஸ்' பிரச்சினையைத் தீர்த்து வைத்தார். அதிலும் ஹிட்லரோடு ஒப்பிட்டுப் பேசியதுதான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சரி விடுங்க. ஹிட்லரே வந்தாலும் ஒழுங்கா ஒரு சண்டை போடக்கூடத் தெரியல என இந்த சீசன் கன்டெஸ்டன்ட்ஸ் பார்த்து கொந்தளித்திருப்பர் ஆகியிருப்பார். (நாங்களும் ஒப்பிடுவோம்!)
தன்னை 'கார்னர்' செய்வதாக நினைப்பவர்களை கார்னரில் உக்கார வைத்து விசாரித்துக்கொண்டிருந்தார் கமல். அதற்கு சனம் சொன்ன விளக்கம் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை. 'எவிக்ஷன் ஃப்ரீ பாஸ்' மற்றும் 'பொசிஷனிங்' டாஸ்க்கில் அனைவரும் தன்னை ஒதுக்குவதாகக் கூறினார். ஏம்மா! போட்டின்னு வந்துட்டா அதுதானே நியாயம், தருமம் எல்லாம். தன் மீது நம்பிக்கையில்லாமல், அந்தந்த இடத்தில் வாதாடுவதை விட்டுவிட்டு, வேறு மேடையில் மற்றவர்களைக் குறை கூறுவது சரியானதல்ல. இந்த தவற்றை நாம் அனைவரும் அன்றாட வாழ்விலும் செய்துகொண்டுதான் இருக்கிறோம். வாழ்க்கையில் நமக்காக நாம்தான் முன்னிலையிலிருந்து போராட வேண்டும். மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக எந்த தருணத்திலும் நம்மை நாம் விட்டுக்கொடுக்கக் கூடாது. இது அனைவருக்குமான பாடமும்கூட.
Bigg Boss 4 Tamil Sanam Shettyரம்யாவை 'குழந்தைகள் மருத்துவர்' என்று சொன்னது நூறு சதவிகிதம் உண்மையே. எதை வைத்து ரம்யாவை முதல் இடத்திற்குத் தேர்வு செய்தனர் என்பது நமக்கும் தெரியவில்லை. சரி ரம்யாவை விடுங்கள், இந்த வாரம் வீட்டைவிட்டு வெளியேற அனைத்துத் தகுதிகளும் பொருந்திய ஷிவானியை எப்படி இரண்டாவது இடத்திற்குத் தள்ளுகிறார்கள் என்பதும் புரியவில்லை. அதுமட்டுமின்றி கடந்த சீசன்களில், முதல் இடத்திற்கு வலுவான போட்டி இருந்தது, கடைசி இடத்திற்குப் போக முடியாது என்ற சண்டையும் வந்தது. ஆனால், இம்முறை கடைசி இடம் என்றதும் துள்ளிக்குதித்து ஓடுகிறார்கள். லாக்டவுன் காரணத்தினால் அனைவரும் ஸ்ட்ரெஸ்ஸில் இருக்கிறார்களோ!
நேர்மை எப்போதும் வெல்லும் என்றுகூறி, எவிக்ஷனிலிருந்து ஆரி காப்பாற்றப்பட்ட செய்தியைப் பகிர்ந்துகொண்டார் கமல். போன வாரம் 'மாஸ்க் கேம்' போல இந்த வாரம் 'தேவர், டெவில் கேம்'. அதாவது, வீட்டிலேயே ராஜ தோற்றம் உடையவர்களுக்குக் கிரீடமும், சகுனி வேலை பார்ப்பவர்களுக்குக் கொம்பும் கொடுக்கவேண்டும் என்று சொன்னால், அனைவரும் தங்களுக்குப் பிடித்தவர்களுக்குக் கிரீடமும், மனக்கசப்பு உள்ளவர்களுக்குக் கொம்பும் கொடுத்தனர். அதைக்கூட மன்னித்து விடலாம், அதற்கு அவர்கள் கூறிய காரணம்தான் சுத்தமாகப் புரியவில்லை.
கிரீடம் கொடுத்து 'இன்னும் இம்ப்ரூவ்' பண்ணனும் எனவும், கொம்பு அணிவித்து 'எனக்குப் பிடிக்கும் ஆனாலும்,..' என்று ஏதோ ஒரு காரணத்தையும் கூறி அணிவித்தனர். என்னதான் ஆச்சு இந்த போட்டியாளர்களுக்கு. எதுவும் சரியில்லை பிக் பாஸ்.
Bigg Boss 4 Tamil Aari and Balaஅதிகப்படியான கொம்புகளை பாலாவும் சுரேஷும் பகிர்ந்துகொண்டனர். ஆனால், கிரீடம் பரவலாக அனைவருக்குமே கொடுக்கப்பட்டது. சென்ற வாரம் அதிகமான பாசிட்டிவ் பேட்ஜ் வாங்கிய அர்ச்சனாவுக்கு இம்முறை குறைந்தளவு கிரீடமே கிடைத்தன. போட்டியில்லாமல் தலைவர்களைத் தேர்வு செய்யக் கூடாது என்றுகூறிவிட்டு, 'சாபூத்ரீ', 'இன்க்கி பிங்க்கி..' ரேஞ்சுக்கு இறங்கி வந்துடீங்களே கமல்ஜி. அதிகப்படியான வாக்குகள் அடிப்படையில் அர்ச்சனா இந்த வாரத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பாலாவுக்கு கைதூக்காமல், அனைவரும் இவருக்குக் கைதூக்கியுள்ளார்களா என்று பார்த்துவிட்டு அர்ச்சனாவுக்குக் கைதூக்கிய ஆஜீத்தை கவனிக்க நாங்கள் தவறவில்லை! தனித்தன்மையோ, போட்டியோ, தன்னம்பிக்கையோ எதுவும் யாரிடமும் இந்த சீசனில் இல்லை என்பதுதான் நிதர்சனம். எவிக்ஷன் பாஸ் ஆஜீத்திடமிருந்து எடுப்பதற்கு யாரும் முயற்சி செய்யவில்லை என்று ஏமாற்றமடைந்த பிக் பாஸ், இந்த வாரம் அதைப் பயன்படுத்தி விடலாம் என்று நினைத்தாரோ என்னவோ, ஆஜீத் காப்பாற்றப்பட்டார். இந்த வாரம் மீண்டும் எவிக்ஷன் இருக்கிறது. யாரெல்லாம் நாமினேட் ஆகப்போகிறார்கள் என்பதை நாளை பார்க்கலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us