கோபமடைந்த அனிதா, ஒதுக்கப்படும் ஆரி.. யார்மீது தவறு?

Bigg Boss Review மற்ற எந்த சீசனிலும் இல்லாமல், இந்த சீசனில் அனைத்து போட்டியாளர்களும் கேமராவுக்காகவே விளையாடுவதுபோல் இருக்கிறது.

Bigg Boss 4 Tamil Vijay Tv Aari Anita Bala Shivani Ramya review Day 78
Bigg Boss 4 Tamil Vijay Tv Aari Anita

Bigg Boss 4 Tamil Review Day 78 : பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே ஆரியை கார்னர் செய்ததுபோல் வேறு யாரையும் ஒதுக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், கார்னர் செய்யப்படுவதை ஏற்றுக்கொண்டு தன்னிச்சையாக விளையாடிக்கொண்டிருக்கிறார் ஆரி. நாளுக்கு நாள் ஆரியின் ஆர்மி வலுபெற்றுக்கொண்டே வருகிறது என்பதில் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இல்லை.

எந்த நேரத்தில் அனிதா முழு சந்திரமுகியாக மாறுவார் என்பது யாரும் அறியாத புதிராகவே இருக்கிறது. தன் குடும்பத்தைப் பற்றிப் பேச எந்த உரிமையும் இல்லை என்று நேற்றைய எபிசோடில் கோபத்தின் உச்சத்திற்குச் சென்ற அனிதா, இதற்குமுன் யாருடைய குடும்பத்தையும் கலாய்க்கவில்லையா என்ன? செய்தி வாசிப்பதுபோல் ரியோவின் குடும்பத்தை வெளிப்படையாகக் கிண்டல் செய்தது யாருக்கும் நினைவில்லை போல. நினைவிருந்தாலும், வீட்டினுள் ஆரிக்கு சப்போர்ட் கிடைக்காது. அதெல்லாம்கூட ஒருபக்கம் இருக்கட்டும். சென்ற வாரம்தான் கேமராவைப் பார்த்து அனிதாவின் கணவரிடம் அனிதாவைப் பற்றி ஏராளமான விஷயங்களைச் சிரித்துக்கொண்டே புகார் அளித்தார் அர்ச்சனா. ஆக, தன் குடும்பத்தைப் பற்றிப் பேசியது அனிதாவுக்குப் பிரச்சனை இல்லை. ஆரி பேசியதுதான் அனிதாவின் ஒரே பிரச்சனை. மேலும் ஆரி அனிதாவின் குடும்பத்தைப் பற்றி தவறாக எதையும் கூறவில்லை. அனிதா கூறியதை முன்னிலைபடுத்த மட்டுமே முயற்சி செய்தார். என்னவோ போங்க! இந்த சம்பவத்தினால் இந்த வார எலிமினேஷனில் மிகவும் வலுவாக அமர்ந்திருக்கிறார் அனிதா.

Bigg Boss 4 Tamil Vijay Tv Aari Anita Bala Shivani Ramya review Day 78
Bigg Boss 4 Tamil Vijay Tv Anita

இப்படி மக்களை வெறுப்பேற்றும் சில சீரியஸ் பிரச்சனைகளுக்கு நடுவில், சாக்லேட் மற்றும் பாலுக்கான மிகத் தீவிரமான சண்டைகளும் பிக் பாஸ் வீட்டில் நிகழ்ந்தன. விளையாட்டாக ஷிவானி கத்தியதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துவந்து இந்த வார வீட்டின் கேப்டனான பாலாவிடம் புகார் செய்துகொண்டிருந்தார் அனிதா (வேறு வேலை என்ன இருக்கு!). இதைவிடக் கொடுமை இந்தச் சின்ன விஷயத்துக்காக தன்னிடம் மன்னிப்புக் கேட்கவும் வைத்தார் அனிதா (வேற லெவல் வில்லிஸம்!)

என்னதான் சொல்லுங்க, லவ் பெட் கேங்குக்கு தங்களின் தவறுகளைப் புரிந்துகொள்ளவும் தெரியாது மற்றவர்களைக் கலாய்ப்பதைத் தவிர எந்த வேலையும் கிடையாது. ரமேஷ், நிஷா, அர்ச்சனா எனத் தொடர்ந்து தங்கள் கேங்க் காலிசெய்யப்படுவதை எந்த அளவிற்குத் தவறாக கேல்குலேட் பண்ண முடியுமோ அந்த அளவிற்குத் தப்புக்கணக்கு போடுகிறார்கள். அர்ச்சனாவை நாமினேட் செய்தது ஹவுஸ்மேட்ஸ், வோட் போட்டது மக்கள், இதில் ஆரியை ஏன் காரணம் காட்டுகிறார்கள் ? எதற்காகக் கழுவி ஊற்றுகிறார்கள்? (எல்லாம் ஒருவித பொறாமைதான் போல). இனி தங்களுக்குத் தும்மல் வந்தால்கூட ஆரிதான் காரணம் என்று போட்டியாளர்கள் சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Bigg Boss 4 Tamil Vijay Tv Aari Anita Bala Shivani Ramya review Day 78
Bigg Boss 4 Tamil Vijay Tv Ramya Pandian

அதிலும் ரம்யா பாண்டியன் இருப்பதிலேயே வெரி டேஞ்சரஸ் விஷம். இதுநாள் வரை யாரையும் பேக்பைட் பண்ணாத ஒரே ஆள் ஆரி ப்ரோ மட்டுமே. மற்றவர்களை மட்டமாகவும் கேவலமாகவும் கலாய்ப்பது நீங்கள்தான் ரம்யா மேடம். போட்டியாளர்கள் அனைவரிடமும் பற்றவைத்தது போதாதென்று வீட்டில் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்த பொம்மை சான்ட்டாவிடம் சென்றும் ஆரியை பற்றி புகார் கொடுத்ததெல்லாம் என்ன ரகம்னே தெரில.

மற்ற எந்த சீசனிலும் இல்லாமல், இந்த சீசனில் அனைத்து போட்டியாளர்களும் கேமராவுக்காகவே விளையாடுவதுபோல் இருக்கிறது. வாயைத் திறந்தாலே கன்டென்ட், ப்ரோமோ என எந்நேரமும் அதே நினைப்பு. இதைவிட்டு வெளியே வராமல் இருப்பதால்தான் இந்த சீசன் பார்ப்பதற்கு சலிப்பைத் தட்டுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss 4 tamil vijay tv aari anita bala shivani ramya review day 78

Next Story
சித்ரா பற்றி கதைகளை கட்டுவதா? சீரியல் பிரபலம் ஆவேச வீடியோ
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com