முடிவில்லா ஆரி - பாலா மோதல் - பிக் பாஸ் விமர்சனம்

Bigg Boss 4 Tamil Day 92 அதற்கு ஷிவானி கொடுத்த 'விக்ரம் வேதா' திரைப்பட தீம் மியூசிக் பக்கா மேட்ச்.

Bigg Boss 4 Tamil Day 92 அதற்கு ஷிவானி கொடுத்த 'விக்ரம் வேதா' திரைப்பட தீம் மியூசிக் பக்கா மேட்ச்.

author-image
priya ghana
New Update
Bigg Boss 4 Tamil Vijay Tv Aari Bala Rio Gaby Ramya review Day 82

Bigg Boss 4 Tamil Vijay Tv Aari Bala

Bigg Boss 4 Tamil Review : ஆரிக்கும் பாலாவுக்கு வேற வேலையே இல்லை போல. சண்டை போடுறாங்க சேர்ந்துக்குறாங்க மறுபடியும் சண்டை, இணைவது என நீண்டுகொண்டே போகிறது. இவங்க பிரச்சனை எப்போதுதான் ஒரு முடிவுக்கு வரும் என்கிற எண்ணம் தினமும் தோன்றுகிறது. அட போங்கப்பா! எப்படியோ ஒருவழியா 'டிக்கெட் டு ஃபினாலே' டாஸ்க் வாரம் வந்துடுச்சு. இப்போவாச்சு சண்டையில்லாம விளையாட்டைப் பார்க்கலாம் எனத் தப்புக் கணக்கு போட்டுறாதீங்க. இப்போதான் மெயின் பிக்ச்சரே இருக்கு.

Advertisment

காலையிலேயே டீ கடையில் (அதான் ஸ்மோக்கிங் ஏரியா), ரியோ பாலாவை அழைத்து, 'கமல் சார் எபிசோடில் பார்த்து பக்குவமா பேசு' என அட்வைஸ் கொடுத்தார். அப்படியே கட் செய்து ஓபன் செய்தால் ரியோ மற்றும் ரம்யாவின் வாக்குவாதங்கள். கமல் எபிசோடில் தன்னை பற்றி ரம்யா கூறியதை பற்றி விரிவாக விளக்கவும் என கேட்டுக்கொண்டிருந்தார் ரியோ. 'மனசுல இருக்கிறதா வெளிப்படையா சொல்லுங்க ரியோ' என்கிற ரம்யாவின் பதிலில் உடன்பாடு இல்லாத ரியோ அதனை கேபியிடம் பகிர்ந்துகொண்டார். அப்போது கேபி முன்வைத்த பாயின்ட்டுகள் அனைத்தும் மிகச் சரியானதாகவே இருந்தன. வரவர கேபிக்கு ரசிகர்கள் பட்டாளம் கூடிக்கொண்டே போகிறது. ஆனால், டாஸ்க்குகளில் மட்டும் கோட்டைவிடுகிறார். கேர்ஃப்புல் கேபி!

Bigg Boss 4 Tamil Vijay Tv Aari Bala Rio Gaby Ramya review Day 82 Bigg Boss 4 Tamil Vijay Tv Gaby

நம்ம பாலா கிடைக்கிற சந்துகளில் எல்லாம் புகுந்து விளையாடுகிறார். ஆரிக்கும் பாலாவுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சம்பந்தமே இல்லாமல் கேபியை இழுத்து, வாக்குவாதத்தை வேற லெவலுக்கு கொண்டுசென்றார். ஆனால், வரவர கேபியின் கவுன்ட்டர்களெல்லாம் கைதட்டவைக்கின்றன. 90 நாள்களைத் தாண்டிதான் ஆஜீத், கேபி மற்றும் ஷிவானியின் விஸ்வரூபங்களெல்லாம் வெளிப்படுகின்றன. வெரி லேட்!

Advertisment
Advertisements

அடுத்ததாக வீட்டில் சண்டைக்குப் பஞ்சமாக இருப்பதுபோல், ஓபன் நாமினேஷனை ஒப்புக்கு வைத்து, அனைவரும் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டனர். தப்பித்துவிட்டோம் என்கிற நிம்மதியில் இருந்த கேப்டன் ரியோவின் முகம் வாடிப்போனதைப் பார்க்கமுடிந்தது. இந்த வாரம் ஷிவானிதான் வீட்டைவிட்டு வெளியேறுவார் என்பது சென்ற வாரமே முடிவானது. ஆனால், டிக்கெட் டு ஃபினாலேவை தன் வசமாக்கிக்கொண்டால் தப்பித்து விடுவார். பொறுத்திருந்து பார்ப்போம்!

Bigg Boss 4 Tamil Vijay Tv Aari Bala Rio Gaby Ramya review Day 82 Bigg Boss 4 Tamil Vijay Tv Som

என்னதான் ஆகட்டும், ஆரி மீதான ரியோவின் பார்வை மாறுபடவே இல்லை. ரியோவிற்கு ஆரியின் வார்த்தைகள் பயத்தைக் கொடுக்கிறதாம். என்னவோ போங்க பாஸ். இது கன்னித் தீவு கதையைவிட பெருசு. சரி அதைவிடுங்க. டிக்கெட் டு ஃபினாலேவின் முதலாம் டாஸ்க் ஆரிக்கும் சோமிற்கும் வாக்குவாதத்தை ஏற்படுத்தியது. உண்மை மற்றும் சரியானதென்றால் ஒத்துக்கொள்ளலாம், பொய்யை ஏன் ஒத்துக்கொள்ளவேண்டும்! ஆரி நூறு சதவிகிதம் அவர் என்ன செய்தார் என்பதில் உறுதியாக இருந்தார். டைலமாவில் இருந்த சோம், சரியாகப் பார்த்துத் திருத்திக்கொண்ட விதம் பாராட்டுக்குரியது. வெல் டன் சோம்! முதல் நாள் முடிவில், ரியோ முதலிடத்திலும், இரண்டாம் இடத்தில் ரம்யாவும் இருக்கின்றனர். ஆரியும் பாலாவும் சமநிலையில் இருக்கின்றனர். அதற்கு ஷிவானி கொடுத்த 'விக்ரம் வேதா' திரைப்பட தீம் மியூசிக் பக்கா மேட்ச். சரி இன்று எப்படி இந்த நிலை மாறப்போகிறது என்பதைப் பெருத்திருந்தது பார்ப்போம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"

Bigg Boss Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: