Advertisment

பாலா நிழலில் இருக்கும் ஷிவானி இந்த வாரம் வெளியேற்றப்படுவாரா?

Bigg Boss 4 Tamil review அனிதா மீதான கோபத்தைத் தீர்த்துக்கொண்டார் போல ரமேஷ். (மக்கள் எத்தனைபேர் சந்தோசப்பட்டார்களோ!) என்னா அடி!

author-image
priya ghana
Dec 01, 2020 12:21 IST
Bigg Boss 4 Tamil Vijay Tv Aari Bala Rio Shivani Aajeeth review Day 57

Bigg Boss 4 Tamil Vijay Tv Bala Shivani

Bigg Boss 4 Tamil review Day 57 : 'தனக்கு வந்தா ரத்தம் மத்தவங்களுக்குன்னா தக்காளி சட்னியா' மொமென்ட்ஸ் ஏராளமானது பிக் பாஸ் வீட்டில் நடந்துகொண்டிருக்கிறது. அதிலும் நேற்றைய எபிசோட் முழுக்கவே அப்படிதான் இருந்தது. விளம்பரங்களுக்கு நடுவில் விளம்பரங்களை அதிகம் காண முடிந்தது. இந்த வார நாமினேஷன் லிஸ்ட் கொஞ்சம் டஃப்தான். சரி வாங்க ஐம்பத்து ஏழாம் நாளின் கலவரங்களை விவாதிப்போம்.

Advertisment

2K கிட்ஸ்களான பாலா-ஷிவானி லவ் டிராக்கே படுஸ்லோவாக நகரும்போது, 90-ஸ் கிட்ஸ் சோம்-ரம்யா காதல் எப்படி வேகமெடுக்கும்! இன்னும்மா அந்த சாக்லேட் உருகல! ஹ்ம்ம்... வேகம் வேண்டும் சோமு என்று சொல்லாத குறையாக கலாய்த்துக்கொண்டிருந்தனர் கேபி கேங். இந்த வாரத்தின் கேப்டன்சி டாஸ்க்கான 'தட்றோம் தூக்குறோம்' போட்டியில் நூறு முறை ரீவைண்டு செய்தும், ஆயிரம் முறை ஸ்லோ மோஷனிலும் பார்த்த நமக்கே ஏகப்பட்ட கன்ஃபியூஷன்ஸ் இருக்கும்போது, வீட்டிற்குள் இருப்பவர்கள் கண்டுபிடிப்பது கொஞ்சம் கடினம்தான். நீங்கக் கொஞ்சம் ஹெல்ப் பண்ணிருக்கலாமே பிபி. எப்படி எண்ணினாலும் ரமேஷ்தான் உண்மையான வெற்றியாளர் என்பதில் மாற்றுக கருத்து இல்லை.

Bigg Boss Tamil 4 Promo aari, balaji murugadoss Bigg Boss 4 Tamil Vijay Tv Aari Bala

பாலாவுக்கு யார் கூடத்தான் 'பேகேஜ்' இல்ல! ரியோவும் பிரச்சனை, ஆரியும் பிரச்சனை. யார் எப்படிதான் நடுநிலையாகக் கூறினாலும், பாலாவின் கண்களுக்கு எல்லாமே தவறுதான். பாலா மாயை உலகில் வாழ்கிறார் போல. எதையாவது சொல்லிவிட்டு இல்லை என்பதும், நடக்காததை நடந்ததாகவும் சொல்லிக்கொண்டே சுற்றுகிறார். இதுக்குலாம் ஒரு எண்டு கார்டு இல்லையா பிபி. வார்த்தைக்கு வார்த்தை ஆரி பேகேஜை லக்கேஜ் போல் வைத்துச் சுற்றிக்கொண்டிருக்கிறார் என்று குறை கூறும் பாலாதான் உண்மையில் பேக்கேஜை கட்டிக்கொண்டிருக்கிறார். பாவம். அதனால் கற்பனை உலகில் சிக்கிக்கொண்டிருக்கிறார்.

'ஆள விடுங்கடா சாமி' என்று ஆரி புத்திசாலித்தனமாக இம்முறை எஸ்கேப் ஆகிவிட்டார். ரியோ வழக்கம்போல தன் நிலைப்பாட்டை பாலாவிடம் புரிய வைக்க முயற்சி செய்துகொண்டிருந்தார். ஆனா, எதுவும் ஒர்க் அவுட் ஆகல! ஆரி, ரியோ அல்லாமல் மற்ற ஹவுஸ்மேட்ஸ் சொல்வதையும் காதில் வாங்கிக்கொள்ளத் தயாராக இல்லாத மனிதரிடம் என்ன பேசுவது. தான் கேப்டன் ஆகமுடியவில்லையே என்ற கோபத்தில் துணை கேப்டன் பதவியையும் உதறிவிட்டார் பாலா.

Bigg Boss Tamil 4 Promo Rio Bigg Boss Tamil 4 Rio

'பாலா நிழல்லயே இருக்காங்க', 'ஏன் பிக் பாஸ் வீட்டுக்கு வந்தாங்கனு மறந்துட்டாங்க', 'பேகேஜ் வெச்சுட்டு தப்பா நினைக்கிறார்கள்', 'விளையாட்டுப் பிள்ளையாவே இருக்காங்க', 'சின்ன சண்டையை பெருசாக்குறாங்க', 'சிரிச்சிட்டே காயப்படுத்துறாங்க' உள்ளிட்ட வார்த்தைகளைக்கூறி நாமினேட் செய்திருக்கிறார்கள் என்று கொளுத்திப் போட்டுட்டாரு பிக் பாஸ். உண்மையிலேயே ரம்யாதான் ஏன் வந்தாங்கன்னு மறந்துட்டாங்க. 'வேற லெவல் பிளேயர்' என்கிற பலருடைய மனக்கோட்டையை உடைத்துக்கொண்டே வருகிறார். நேற்றைய டாஸ்க்கில் நன்றாக விளையாடியிருக்கலாம். உடல் பலம் அதிகம் தேவைப்படாத எளிமையான டாஸ்க்தான். ஆனால், ரம்யா அலட்சியமாக இருக்கிறாரோ என்கிற சந்தேகம்தான் எழுகிறது. தோல்வியைப் புன்னகையோடு ஏற்றுக்கொள்வதில் தவறில்லை. ஆனா ரம்யா கொஞ்சம் ஓவராதான் போறாங்களோ!

'என்னை நாமினேட் செய்ய வேற காரணமே கிடைக்கலையா?' என்று புலம்பும் ஷிவானிக்கு உண்மையில் இதுதவிர வேறு ஏதும் காரணம் இருக்கிறதா? உங்ககிட்ட இருந்தா சொல்லுங்க மக்களே! அதெல்லாம் சரிதான், ஆனா ஆரியை நாமினேட் செய்யும்போது மட்டும் பாலா மீதான பேகேஜ் காரணத்தை ஷிவானி கூறுவது ரைட்டா? அதே ரத்தம், தக்காளி சட்னி கான்செப்ட்தான்.

Bigg Boss 4 Tamil Vijay Tv Aari Bala Rio Shivani Aajeeth review Day 57 Bigg Boss 4 Tamil Vijay Tv Shivani Ramya Aajeeth

டாபர் விளம்பர டாஸ்க்கில் அனிதா மீதான கோபத்தைத் தீர்த்துக்கொண்டார் போல ரமேஷ். (மக்கள் எத்தனைபேர் சந்தோசப்பட்டார்களோ!) என்னா அடி! இந்த வாரம் நாமினேஷனில் ஷிவானி, ஆஜீத், ஆரி, ரம்யா, அனிதா, சனம் மற்றும் நிஷா ஆகியோர்கள் நாமினேட் செய்யப்பட்டிருக்கிறார்கள். கேப்டனாதால ரமேஷ் க்ரேட் எஸ்கேப்! சுரேஷ், சுச்சி, சம்யுக்தா என இதுவரை பாலா கேங்கில் இருந்தவர்கள்தான் தொடர்ச்சியாக வெளியே சென்றுள்ளனர் என்று நெட்டிசன்கள் கிசுகிசுத்து வரும் நிலையில், அடுத்ததாக ஷிவானியா ஆஜீத்தா என்கிற எதிர்பார்ப்புதான் எல்லோரிடத்திலும் இருக்கிறது. அனிதாவை மிஸ் பண்ணிடாதிங்க பாஸு!

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"

#Bigg Boss Tamil
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment