/tamil-ie/media/media_files/uploads/2020/11/Gaby-Ramya-updated.jpg)
Bigg Boss 4 Tamil Vijay Tv Ramya Gaby
Bigg Boss 4 Tamil Day 52 Review : 'இந்தக் கொசு தொல்லை தாங்க முடியல நாராயணா' மைண்ட் வாய்ஸ்க்கு பொருத்தமாக இருந்தது நேற்றைய எபிசோட். என்னடா ரெண்டு நாளா நல்லா போயிட்டு இருக்குனு பார்த்தா, நேற்று மறுபடியும் ஒரே கன்டென்ட்டை வைத்து ஓபி அடித்துவிட்டார் பிக் பாஸ். வழக்கம்போல ப்ரோமோவில் இருந்த சனம் ஷெட்டிக்கும் ரியோவுக்கும் இடையிலான சண்டைக் காட்சிகள் மெயின் எபிசோடில் இல்லை. அன்சீனிலும் தென்படவில்லை. என்னதான் ஆச்சு பிபி உங்களுக்கு?
'சொடக்கு மேல சொடக்கு போடுது..' என்ற அருமையான பாடலுக்கு ஐயோ என நடனமாடிக்கொண்டிருந்தனர் போட்டியாளர்கள். யாராவது கன்டென்ட் கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த பிக் பாஸுக்கே பல்ப் கொடுத்துவிட்டனர் ஹவுஸ்மேட்ஸ். ஆரி, பாலாவுக்கு இடையே நடந்த சண்டையைப் பற்றி ரியோவிடம் ஆரி புலம்பும் காட்சிகளைப் போட்டுக்காட்டினார் பிக் பாஸ். முடிந்த விஷயத்தை நோண்டிப் பார்ப்பது மற்றவர்களா அல்லது தாமாகச் சென்று ஆரி புலம்புகிறாரா என்பதுதான் தெரியவில்லை. அரைச்ச மாவையே எத்தனை முறைதான் அரைப்பாங்களோ!
Bigg Boss 4 Tamil Vijay Tv Bala Aari Samyukthaமறுமுனையில் ஆரியை பற்றி சம்யுக்தா, ஷிவானி, பாலா மற்றும் ரம்யா விவாதித்துக்கொண்டிருத்தனர். 'வளர்ப்பு' பற்றி சம்யுக்தா கூறியதைவிட ஆரி, மெச்சூரிட்டி பற்றி பேசியது அவ்வளவு தவறான விஷயமா என்ன? இதைப்பற்றி ஏற்கெனவே நாம் டிஸ்கஸ் செய்திருந்தாலும், நேற்றைய எபிசோடிலும் இவர்கள் அதே மாவை அரைத்த காரணத்தினால் நாமும் பதிவு செய்ய வேண்டியதாக இருக்கிறது. (போதும் பாஸ். இதுக்கு மேல தாங்காது!)
அடுத்ததாக கேபி மற்றும் சோம் இடையிலான கால் சென்டர் டாஸ்க். தந்திரமாக சோம் வெற்றிபெற்றதாக நினைத்துக்கொண்டிருக்கையில், தான் வேண்டுமென்றேதான் சோமை வெற்றிபெற வைத்ததாகக் கூறி 'பல்ப்' மொமென்ட்டாக்கி விட்டார் கேபி. ஆனாலும், பார்ப்பதற்கு பாசிட்டிவாக இருந்தது. என்னடா ஷிவானி பற்றி யாரும் பேசவே மாட்டிங்குறாங்க. 4 மணிதான் உனக்கு பெஸ்ட் என நெட்டிசன்கள் கரித்துக்கொண்டிருக்கும் வேளையில், நேற்று ஏதோ ட்ரை செய்தார் பிபி. ஆனால், அதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை. பாலா தன்னோடு நேரம் செலவழிக்காததால் ஷிவானி கோவித்துக்கொண்டார் என்ற மனப்பிரம்மை முத்தி, ஷிவானியிடம் வாக்கு வாதத்தில் இறங்கினார் பாலா. ஆனால், 'நான் ஒன்னும் பொஸசிவ்லாம் ஆகல' என்று கூறி நிலைமையை ஆஃப் செய்துவிட்டார் ஷிவானி. (பலத்த அடியோ பாலா!)
Bigg Boss Tamil Gaby Somஷிவானி பாலா பிரச்சனை ஒருபக்கம், ஆரி பாலா வாக்குவாதம் மறுபக்கம், சம்யுக்தா அழுகை ஒருபுறம் என வீட்டினுள் வெவ்வேறு எமோஷன்ஸ் புகுந்து விளையாடிக்கொண்டிருக்க, அர்ச்சனாவுக்கும் நிஷாவுக்கும் 'சோறு முக்கியம் பாஸ்' பிரச்சனைதான் பிரதானமாக இருக்கிறது. 'சாப்பாடு சாப்பாடு..' இதை ஒன்னை வைத்தே முழு சீசனையும் இவர்கள் இருவரும் கடந்துவிடுவார்கள் போல. பசிக்கு உணவளிப்பது முக்கியம்தான், ஆனால் அதை சொல்லிக்காட்டிக்கொண்டே இருப்பது முகம் சலிக்கவே வைக்கிறது.
'வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்க. நம்ம தலைவி கேக்குற கேள்வியில ரமேஷ் தலைதெறிக்க ஓடப்போகிறார்' என்று நினைத்து ஆர்வமாக நிகழ்ச்சியைப் பார்த்த நமக்கு பெரிய ஏமாற்றம். ஆரம்பம் நல்லாதான் இருந்துச்சு ஆனா, ஃபினிஷிங் சரியில்லையேப்பா. கடைசியில் 'நாமினேட் செய்யப்பட்டேன்; போர்டை ரம்யா மாட்டிக்கொண்டதுதான் மிச்சம். ப்ப்பா... இதனால் என்ன ஒரு சந்தோஷம் இந்த லவ் பெட் கேங்குக்கு. இதற்குப் பேர்தான் அன்பால கட்டிப்போடுறதா? நடக்கட்டும் நடக்கட்டும்!
ஆக மொத்தத்துல ஆரி ப்ரோ பிரச்னையை வெச்சு சனம் ஷெட்டி நல்லா ஸ்கோர் பன்னிட்டாங்கப்பா. அனிதாவின் பாயின்டஸ் சரியாக இருந்தாலும், அதை பாலாவிடம் பகிரங்கமாகச் சொல்லுவதில் என்ன பிரச்சனையோ! இது பிக் பாஸ் கேம் ஷோ போன்று தெரியவில்லை. பாலாவின் திருவிளையாடல் போன்றுதான் இருக்கிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us