Bigg Boss 4 Tamil Review : ப்ரோமோவில் எக்ஸ்ட்ரா எஃப்பக்ட் கொடுப்பதே வேலையா போச்சு. பரபரப்பான ப்ரோமோவை பார்த்து இன்னிக்கு தரமான சம்பவம் இருக்கும்' என எதிர்பார்த்து டிவியை உற்று நோக்கினால், எபிசோடில் ஒன்றுமே இல்லை. 'படுத்தறாய்ங்களே' என்ற மனநிம்மதியோடு உறங்கச் செல்பவர்கள்தான் அதிகம். வெறும் என்டெர்டெயின்மென்ட் நிகழ்ச்சியாக மட்டுமில்லாமல், ஏராளமான வாதங்களையும் மன உளைச்சலையும் பிக் பாஸின் இந்த சீசன் ஏற்படுத்துகிறது. 'இன்னும் 10 நாள்கள்தான்' என்று விடுமுறையை நோக்கிக் காத்திருக்கும் குழந்தைகள்போல் ஆகிவிட்டனர் நம் மக்கள்!
ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது. ஷிவானிக்கு டிக்கெட் டு ஃபினாலேவை வெற்றிபெற வைக்காமல் பாஸ் தூங்க மாட்டாருபோல.ஷிவானிக்காகவே வடிவமைத்தது போல இருந்தது நேற்றைய 'பஸர்' டாஸ்க். இதெல்லாம் ஃபினாலேவுக்கான டாஸ்க்கா பிக் பாஸ். உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா? ஏன்? எதனால இந்த அளவுக்கு மொக்கையா யோசிக்குறீங்க? ஒன்னும் சரியில்ல. இதுநாள் வரை வாழைப்பழமும் உப்புமாவையும் கொறித்துக்கொண்டிருந்த ஷிவானி நேற்று டிக்கெட் டாஸ்க்கில் முதலிடம். இதற்குத்தானே இத்தனைநாள் ஸ்கெட்ச் போட்டது! நடத்துங்க நடத்துங்க! ஆனால், இதுபோன்ற டாஸ்க்கினால் பாலாவின் நிலையை நினைத்தால் குபீர் சிரிப்புதான் வருகிறது. பாலாவுக்கு வந்த சோதனை!
Bigg Boss 4 Tamil Vijay Tv Bala
ஒவ்வொருவரின் முதுகிலும் ஒட்டப்பட்டிருக்கும் 'பிக் பாஸ் கண்ணை' பிரித்தெடுக்கவேண்டும். இதுவும் டாஸ்க்தான் மக்களே! இந்த டாஸ்க்கிலும் சண்டை உருவாகுவதெல்லாம் டூ மச். பாலாவுக்கும் ஆரிக்கும் ஸ்ட்ராடஜியில் சண்டை. அவரவர்களுடைய ஸ்ட்ராடஜி அவரவர்களுடைய இஷ்டம்தானே! இதில் ஏன் சண்டைகளும் பேச்சுவார்த்தைகளும்! இங்குள்ள போட்டியாளர்கள் யாருக்கும் ஸ்போர்ட்டிவ் மைண்ட்செட் இல்லை என்பதுதான் நிதர்சனம். 'தடுக்கி விழுந்தால் யார் பொறுப்பு' என இருவருமே வாதாடுகின்றனர். போட்டினு வந்துட்ட சட்டை கிழியத்தானே செய்யும். அட போங்கப்பா!
இதெல்லாம் விட பாலா தனியே கேமராவில் தன் பக்க நியாயத்தைக்கூறிப் புலம்பியதெல்லாம் வேற லெவல் ஸ்ட்ராடஜி. 'ஆம்பள பையன்தான நீ' என்று சொல்கிற அளவிற்கு இந்த போட்டியில் அவ்வளவு பெரிய விஷயமெல்லாம் எதுவுமில்லை ஆரி. சில் ப்ரோ. ஷிவானியை பாதுகாப்பதில் மிகத் தீவிரமாகவும் தெளிவாகவும் இருந்தார் பாலா. ரம்யாவிடம் சாஃப்ட்டாக டீல் செய்துவிட்டு கேபியிடம் முரட்டுத்தனமாக விளையாடினார் சோம். ஆனால், என்ன பயன். நொடிநேரத்தில் சோமை வீழ்த்திவிட்டார் ரம்யா. தேவையா சோம் உங்களுக்கு இதெல்லாம்! இனிமேலாவது கவனமா விளையாடுங்க.
பாட்டுப்போட்டியில் எந்தப் பாடலையும் கண்டுபிடிக்காமல் இறுதி வரை சென்று அதிக மதிப்பெண்களைப் பெற்றார் ரம்யா. அதற்கு அப்படியே நேர்மாறாக மைனஸ் மதிப்பெண்களைப் பெற்று கடைசி இடத்தைப் பிடித்தார் பாலா. இதுதான் விதின்னு சொல்லுறது. இன்றைய நிலை விளையாடுபவர்களுக்குச் சாதகமாக மாறும் என்ற நம்பிக்கையோடு இருப்போம்! யாருக்கு லக் இருக்கோ!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"