Bigg Boss 4 Tamil Review : இந்த சீசன் முழுவதும் கவுன்ட்டவுன் டாஸ்க்தான் அதிகம். போர் அடிக்குது பாஸு. ஆரியை எப்படியாவது நெகட்டிவ் ஷேடுக்கு கொண்டு செல்லவேண்டும் என்கிற முயற்சியில் பிக் பாஸ் முதல் ஹவுஸ்மேட்ஸ் வரை அனைவரும் தோற்றுக்கொண்டே இருக்கின்றனர். 'பேக்கேஜ் வைத்துக்கொண்டு ஆரி பேசுகிறார்' என்று கூறிய ஒவ்வொரு ஹவுஸ்மேட்ஸ் மனதிலும் எவ்வளவு பேக்கேஜ் இருந்தது என்று நேற்றைய எபிசோட் தெளிவாக விளக்கியது. என்ன பிக் பாஸ் உங்க பிளான் மக்கள் மத்தியில் ஒர்க் அவுட் ஆகல போலிருக்கு!
'அடடடடா ஆரம்பமே..' பாடலோடு வெறித்தனமாக ஆரம்பமான நாள் ஒவ்வொருவரின் முகத்திரை கிழியும் நாளாகவே அமைந்தது. பாலாவை பற்றி சோம், ரியோ பேசியதெல்லாம் இருக்கட்டும். இந்த வீட்டில் நடந்த சம்பவங்களையெல்லாம் மறந்துபோய்ட்டாங்க போல. சனம் ஷெட்டியை தரக்குறைவாகப் பேசிய நேரத்தில் இவர்கள் எங்கே சென்றார்கள் என்பதுதான் தெரியவில்லை. என்றாலும் சோமிற்கு ஆரி மீது எவ்வளவு கடுப்பு என்பது வெட்டவெளிச்சமாகத் தெரிந்தது.
வரவர பிக் பாஸும் போட்டியாளராகக் களமிறங்குகிறார். ஷிவானி, சோம், ரம்யா மூவரும் எதுகை மோனையில் விளையாடிக்கொண்டிருக்க பிக் பாஸும் அவருடைய பங்கிகிற்கு ரெண்டு பன்ச் எடுத்துவிட்டார். அவ்வளவு பஞ்சம் கன்டென்ட்டுக்கு. அடுத்தபடியாக 'குறை கூறும்', சாரி சாரி முகமூடி கிழிக்கும் டாஸ்க். அதாவது ஆரிக்கான டாஸ்க். ஆரியை கடைசி இடத்திற்குத் தள்ளிவிடவேண்டும் என்கிற நோக்கில் ஃபிரேம் செய்யப்பட்டிருக்குமோ என்கிற டவுட் எழாமலில்லை. (டவுட்டே இல்ல!)
குறை சொல்லுற டாஸ்க் என்றதும் ஆரிதான் டார்கெட், அப்புறம் எதுக்கு பார்த்துட்டுன்னு டிவியை அணைத்துவிட்டுப் போகலாம் என்று நினைத்தவர்கள் ஏராளமானவர்கள் இருந்தாலும், வோட் போடுவதற்கு முன்பு நாடி நரம்புகளை முறுக்கேற்றிக்கொள்ள எபிசோடினை பார்த்தனர்! (சொல்லவேண்டிதான்). ஒவ்வொருவரைப் பற்றியும் எந்த அளவிற்குச் சரியாகக் கணித்திருக்கிறார்களோ இல்லையோ, நேற்றைய நாளில் ஆரியை வெச்சு செய்வது என்று முடிவோடு களத்தில் இறங்கியுள்ளனர். ஆரி மீது சோம் மனதில் இருக்கும் வெறுப்பு அப்பட்டமாக வெளிப்பட்டது. 'பேகேஜ் பேகேஜ்' என்று ஆரி மீது குற்றம் சாட்டியவர் மூச்சு வாங்கிக்கொண்டு ஆரி மீதான பேகேஜை எடுத்துவைத்தார். ப்ப்ப்பா... எத்தனை பாயின்டஸ்! முடியல...
நேற்றைய எபிசோடில்தான் ரியோவின் பார்வையைத் தெளிவாக முன்வைத்தார். அனைவரைப் பற்றியும் ரியோ கூறிய விதமும் இயல்பும் எதார்த்தமாகவே இருந்தன. தன் ரசிகர்களை கைவிடவில்லை ரியோ. ஷிவானியும் தான் சொல்ல வந்ததைத் தெளிவாகவே கூறினார். இந்த தெளிவு கடந்த வாரங்களில் இருந்திருந்தால் நிச்சயம் அவருடைய ரசிகர்கள் ஏமாந்திருக்க மாட்டார்கள்.
கேபியின் பார்வைகளும் சரியாகவே இருந்தன. ஆனால், பாலாவின் வார்த்தைகளில் மற்றவர்கள் மீதான பேகேஜ் மட்டுமே இருந்தன. ஆனால், இவர்கள் என்னதான் கூறியிருந்தாலும் ஒவ்வொருவரின் மீதான ஆரியின் பார்வையில் எந்த பேகேஜும் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால், ரியோ கூறுவதுபோல சொல்ல வருவதை ஷார்ட்டாக சொல்லி முடித்தால் குறை என்ற ஒன்று ஆரியிடம் இல்லாமல் இருக்கும். ரேட்டிங் அப்போதும்கூட ஆரியின் கவுன்ட் டவுன் லிஸ்ட் சென்ஸிபிளாக இருந்தது. என்னதான் ஆரியை கார்னர் செய்தாலும், மக்கள் மத்தியில் இன்னும் நெருங்கிக்கொண்டே இருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"