Bigg Boss 4 Tamil : பெரும்பாலான மக்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த அன்றைய தினம் வந்தது. நீதி, நேர்மை என தன்னால் முடிந்தவரை யார் மனதையும் புண்படுத்தாமல் விளையாடிக்கொண்டிருக்கும் ஆரி குடும்பத்தின் வரவை எதிர்பார்த்திருந்தவர்களுக்கு நேற்றைய எபிசோட் நிச்சயம் மனநிறைவானதாக இருந்திருக்கும். மேலும், ஆஜீத் மற்றும் கேபியின் குடும்பத்தினர் என்ட்ரியும் பாஸிட்டிவாகவே இருந்தன.
‘ஐ அம் எ குத்து டான்சர்’ பாடலோடு ஆரம்பமான எண்பத்து எட்டாம் நாள், ‘வசந்த் அண்ட் கோ’ டாஸ்க்கோடு தொடர்ந்தது. அட சீக்கிரம் ஆரி குடும்பத்தினரை வர சொல்லுங்கப்பா என்கிற மைண்ட் வாய்ஸ்தான் அனைவரின் மனதிலும் எழுந்தது. காரணம், ப்ரோமோதான். ஆனால், முதலாவதாக வீட்டிற்குள் நுழைந்ததோ கேபியின் அம்மா. ‘நெஞ்சில் ஜில் ஜில் ஜில்..’ என்ற பாடலோடு உள்ளே நுழைந்தவர் கலகலப்பாக அனைவரிடமும் பேசினார். வழக்கம்போல கேபியின் அம்மாவும் ஆரியை ஆவலோடு பார்த்து வாழ்த்தியது, ஹவுஸ்மேட்ஸை கொஞ்சம் கடுப்பாக்கியது. ‘யூ டூ ப்ரூட்டஸ்’ என்று கேபி சொல்லியேவிட்டார். என்றாலும், கேபியிடம் அவருடைய தாய் அட்வைஸ் கொடுத்த விதம் அருமை. முழுவதும் பாசிட்டிவான நொடிகளாகவே இருந்தது கேபி அம்மா தருணங்கள்.

ஹவுஸ்மேட்ஸ் குடும்பத்தினரின் என்ட்ரி, ஆரி மீதான பார்வையை முற்றிலும் மாற்றியிருக்கிறது என்றே சொல்லலாம். ‘யாருக்கு கப்’ என்கிற வாதம் ரம்யா, ஆரிக்கு இடையில் பலமாகப் போய்க்கொண்டிருந்தது. இந்நாள்வரை கப் பற்றி எதையும் பேசாத ரம்யா முதல் முறையாக அதனை நினைத்துப் பேசியது ரம்யாவின் நம்பிக்கையில் விரிசல் விழுந்ததையே காட்டுகிறது.
அடுத்ததாக ஆஜீத் குடும்பத்தினரின் என்ட்ரி. சும்மா செல்லக்கூடாது… மிகவும் கலகலப்பான குடும்பம்தான் ஆஜீத்தின் குடும்பம். ‘இந்தச் சின்ன இடத்தை சுத்தம் செய்கிறதுக்கா அவ்வளவு சண்டை?’ என்பது முதல் ‘ரம்யாவின் சிரிப்பில் 1008 நக்கல் இருக்கும்’ என்று சொல்வது வரை ஆஜீத் குடும்பத்தினரின் வெளிப்படைத்தன்மை அமோகம்! ஆரியை எப்போதும் குறை கூறிக்கொண்டிருக்கும் ஆஜீத்துக்கும் மற்ற போட்டியாளர்களுக்கு, ‘அட்வைஸ் ஆரி’ எனப் பெயர் சூட்டப்பட்டது தவறு என்பதை உணர்ந்திருப்பார்களா என்பது இன்னமும் கேள்விக்குறியே!
ஆரிக்கு மட்டும் ஃப்ரீஸ் சொல்லிவிட்டு, மற்ற ஹவுஸ்மேட்ஸ் ரிலீஸ் செய்யப்பட, ஆரியின் மகள் ரியாவின் என்ட்ரி அரங்கேறியது. மற்ற ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் ரியாவை அழைத்துவர, ஆரியின் கண்களில் கண்ணீர். என்னதான் ஆனாலும் தனக்குக் கொடுக்கப்பட்ட டாஸ்க் என்பதால் ஃப்ரீசிலேயே இருந்தார் ஆரி. ‘இத்தனை நாள் கழித்துப் பார்க்கிறோம். அப்பா அசையாமல் இருக்கிறாரே’ என்கிற கேள்விக்குறியோடு ரியா ஆரியை பார்த்துக்கொண்டிருக்கையில் அவரை ரிலீஸ் செய்தார் பிக் பாஸ். கீழே இருக்கும் குப்பையை ரியா சுத்தம் செய்வது முதல் ஆரியின் வளர்ப்பு தெளிவாகத் தெரிந்தது. ஆனால், இந்த சீசனில் பாலாவை காணோம்! என்ன பிரச்சனையோ! இறுதியாக ஆரி, தன் மனைவியுடனான உரையாடல்களும் பாஸிட்டிவாகவே இருந்தன. ஆக! நேற்றைய எபிசோட் முழுவதும் பாசிட்டிவ் வைபாகவே இருந்தன.
ஆனால், பாலாவின் மனதில் ஆரி மீதான பேகேஜ் இறங்கியதுபோல் தெரியவில்லை. ஆஜீத்திடம் ‘நானோ, ஆரியோ இந்த சீசன் டைடல் வெற்றியைச் சொந்தமாக்கிக்கொண்டால் ட்ரெண்ட் செட்டாக இருக்கும்’ என்று கூறிவிட்டு, ஷிவானியிடம் ‘ஆரி வெற்றிபெற்றால் நான் மிகவும் வருத்தப்படுவேன்’ என்று கூறினார். என்னதான் ஆச்சு பாலா உங்களுக்கு? ஆனாலும், அவ்வளவு திட்டு வாங்கியபிறகும், பாலா சொல்வதற்கெல்லாம் இன்னமும் தலையாட்டிக்கொண்டுதான் இருக்கிறார் ஷிவானி! நாம சொல்றதுக்கு ஒண்ணுமில்லை!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”