/tamil-ie/media/media_files/uploads/2020/12/Bigg-Boss-Tamil-4-Promo-1.jpg)
Bigg Boss Tamil 4
Bigg Boss 4 Tamil Review Day 81 : B ஃபார் பால் C ஃபார் கேட்ச் டாஸ்க் இன்னும் முடிந்தபாடில்லை. ரேட்டிங் கொடுத்தபிறகும் நீண்டுகொண்டே போனது. ஆனால், ஓரளவிற்கு சவரசியமாகவே இருந்தது நேற்றைய பால் கேட்ச் டாஸ்க். தங்களின் மூளைக்கு (நேற்று கொஞ்சம் ஒர்க் ஆச்சு) வேலை கொடுக்கும் விதமாக அமைக்கப்பட்டிருந்த டாஸ்க் ஆரோக்கியமான போட்டியாக அமைந்தது. (ஹப்பாடா!)
மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற டாஸ்க்கின் மதிப்பெண்கள் அடிப்படையில் ரியோ நேரடியாக அடுத்த வார கேப்டன் போட்டிக்கு தேர்வாக சோம் மற்றும் ஆரி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். (என்ன ஒரு அதிசயம்!) இதெல்லாம் விட சுவாரஸ்யமற்ற போட்டியாளர்களை இம்முறை ஆரோக்கியமான வாதங்களோடு முறையாகாது தேர்வு செய்யப்பட்டனர் (மெடிக்கல் மிராக்கிள்). ரம்யா மற்றும் ஆஜீத் இம்முறை ஆரியை நாமினேட் செய்யவில்லை. பாலா வழக்கம்போல தன்னை குறிவைத்த அனிதாவைத் தேர்வு செய்தார். ரியோவுக்கு இன்னும் ஆரி மீதுள்ள கடுப்பு போகவில்லை. சுவாரஸ்யத்துக்கும் வாக்குவாதத்துக்கும் என்ன சம்பந்தமோ தெரியவில்லை. கண்மூடிக்கொண்டு ஆரியை நாமினேட் செய்தார் ரியோ. இது மறுபடியும் பனிப்போரில் நிறைவடைந்தது. அர்ச்சனாவின் சிஷ்யன் என்பதை நிரூபித்துவிட்டீர் ரியோ! வாழ்த்துக்கள்!
Bigg Boss 4 Tamil Vijay Tv Rioஇதெல்லாம் ஒருபக்கம் இருக்க, எதுவுமே செய்யாமல் மிகவும் பாதுகாப்பாக பாலா தோளிலேயே தோற்றுக்கொள்ளும் ஷிவானி மீது நாளுக்கு நாள் மக்களுக்கு அதிருப்தி அதிகரித்து வருகிறது. ஷிவானியை விட கேபி எந்த வகையில் சுவாரஸ்யமில்லாமல் விளையாடினார் அல்லது வீட்டு வேலைகளைச் செய்தார் என்பது தெரியவில்லை. எட்டாம் இடத்தை எடுத்துக்கொள்வதும், ஓய்வறைக்கு விருப்பத்தோடு செல்வதும் என மனம் தளர்ந்து காணப்பட்டார். தனக்காகக்கூட கேபி பேசாமல் இருப்பதும் தவறு. இதை ஆரி தெளிவாகச் சுட்டிக்காட்டினார். ஆனால், என்ன பிரயோஜனம்! அன்ஃபிட் என்று ஆரி எப்போதும் சொல்லிக்கொண்டே இருக்கிறார் என ஹவுஸ்மேட்ஸ் சிம்பிளாக முடித்துவிடுவார்கள்! யோசிங்கப்பா!
80 நாட்களை எட்டியபிறகும் ஹவுஸ்ஃபுல்லாகவே இருக்கிறது. ஒருவேளை இந்த வாரமும் இரண்டு பேர் வெளியேற்றப்படுவார்களா! சுரேஷ், சனம் போன்ற தகுதியான போட்டியாளர்கள் வெளியையும் ஷிவானி, ஆஜீத் போன்ற மிக்ஸர் சாப்பிடும் போட்டியாளர்கள் உள்ளேயும் இருப்பது மிகப் பெரிய முரண். என்ன செய்வது! எல்லாம் சேனலின் சதி! இப்போதுவரை ஆரிக்கு மட்டுமே மக்களின் ஆதரவு குவிந்துகொண்டிருக்கின்றது. மக்கள் என்ன நினைப்பார்களோ என்று எந்நேரமும் அதையே நினைத்துக்கொண்டிருக்கும் அனிதாவின் குரல் நேற்று காணாமல் போனது. அவர்மீது மக்களிடத்தில் வெறுப்பும் அதிகமாக உள்ளது. இந்த வாரம் அனிதா வெளியேற்றப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருந்தாலும், ஆஜீத், ஷிவானியைவிட அனிதாவிற்கு வீட்டில் இருப்பதற்குத் தகுதி கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. என்ன நடக்குமோ!
Bigg Boss 4 Tamil Vijay Tv Bala Shivaniநேற்றைய எபிசோடில் ஆரி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் காத்துக்கொண்டிருந்தது. ஆரியின் அடுத்த திரைப்படமான 'பகவான்' போஸ்டர் பிக் பாஸ் வீட்டில் வெளியிடப்பட்டது. நிச்சயம் அந்த போஸ்டர் வீட்டிலிருப்பவர்களையும் மெய் சிலிர்க்கவைத்துவிட்டது என்றே சொல்லலாம். அர்ச்சனாவின் வெளியேற்றம் நிச்சயம் போட்டியாளர்களின் பார்வையைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றியிருக்கிறது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. பார்ப்போம் இந்த வீக்கெண்டில் கமல் என்ன சொல்லக் காத்திருக்கிறாரோ!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us