/tamil-ie/media/media_files/uploads/2020/12/Bcup.jpg)
Bigg Boss 4 Tamil Vijay Tv
Bigg Boss 4 Tamil Review Day 79 : இதைவிட சுவாரஸ்யமற்ற எபிசோட் எதுவுமில்லை என்கிற அளவிற்கு நகர்ந்தது எழுபத்து ஒன்பதாம் நாள். 'முக்காலா முக்காபுலா..' பாடலோடு ஆரம்பமான நாள், B ஃபார் பால், C ஃபார் கேட்ச் - 'பால் கேட்ச்' என்கிற மிகவும் மிகவும் கடினமான அதே சமயம் சுவாரசியமான டாஸ்க்கோடு நடந்தது. (சொல்லிக்கவேண்டியதுதான்.. வேற வழி!)
டி.ஆரின் தீவிர ரசிகையாக ஷிவானி, எதுகை மோனையில் ஆஜீத்தை கடுப்பேற்றியது மட்டுமல்லாமல், நம்மையும் பதம் பார்த்துவிட்டார். சாப்பிடுவது, பாலாவிற்கு ஊட்டுவது, பாலாவோடு கைகோர்த்து நடப்பது, உறங்குவது, எதையாவது மொக்கை ஜோக் (முடியல) சொல்வது, இதை பிரத்தியேகமாகச் செய்வதற்காகவே பிபி வீட்டினுள் வாழ்ந்துகொண்டிருக்கிறார் ஷிவானி. சனம், சுரேஷ் தாத்தாவைவிட இவர் அப்படி என்ன சுவாரஸ்யமாகச் செய்திருக்கிறார் என்று இத்தனை நாள் உள்ளே இருக்கிறார்! பாரபட்சம் பிக் பாஸ்!
முன்னாடியெல்லாம் டீமுக்குள்ளேயேதான் சண்டை வரும். இப்போதோ டீம் பிரிப்பதற்கே சண்டை. இதன்மூலம் ஒவ்வொருவரின் மனதிற்குள் இருக்கும் குழப்பம் நன்றாகத் தெரிகிறது. குரூப்பிஸம் என்கிற வார்த்தை ரியோ அண்ட் கேங்கை தூங்கவிடுவதில்லை போல் தெரிகிறது. என்றாலும் என்ன பிரயோஜனம்? தங்களின் உண்மை நிலையை யாரும் புரிந்துகொள்ளக்கூடத் தயாராக இல்லை. எல்லா புகழும் அர்ச்சனாவுக்கே!
வழக்கம்போல விதிமுறைகளை ஃப்ரேம் செய்வதிலேயே ஆரம்பமானது ஹவுஸ்மேட்ஸின் குழப்பமும் சண்டையும். தாங்கள் என்ன சொல்கிறோம் என்பது அவர்களுக்கே புரிகிறதா என்பது அவர்களைப் பார்க்கும் நமக்குப் புரியவில்லை. விளையாட்டு தொடங்கியதிலிருந்து ரியோ அணியின் பக்கமே லக் இருந்தது. ஆனால், அதை ஏற்றுக்கொள்ளத்தான் பாலாவிற்கு மனமே இல்லை. ஒவ்வொரு முறையும் ரியோ அணியினர் பாலை கேட்ச் செய்யும்போது வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டே இருந்தார் பாலா. கண்ணில் அவ்வளவு ஏமாற்றம்.
இரவெல்லாம் உறங்காமல் வேலைபார்த்துக்கொண்டிருந்தனர் பாலா டீம். போட்டியில் சில ட்விஸ்டுகள் வேறு. ஆனால், சுவாரசியம் இல்லை. இனிமேலாவது டாஸ்க்குகளை ஃப்ரேம் செய்யும்போது கொஞ்சம் பார்த்து பண்ணுங்க பிக் பாஸ். வரவர ரொம்ப மொக்கையா இருக்கு. ப்ளீஸ்!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.