Bigg Boss 4 Tamil Review Day 71 : என்னடா நடக்குது இங்க! பிக் பாஸ் வீடும் கேமும் எங்கடா! என்கிற ரேஞ்சில் சென்றுகொண்டிருக்கிறது இந்த சீசன். நீங்கதான் ஒன்னும் பண்ணமாட்டேங்குறீங்க நானே எடுத்துக்கொடுக்கிறேன் என வேறு எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு இம்முறை போட்டியாளர்களோடு சேர்ந்து பெர்ஃபாமன்ஸுகளை கொடுக்கத் தொடங்கியுள்ளார் பிபி. இதெல்லாம் எப்போ பாஸு ஒரு முடிவுக்கு வரும்?
இதுநாள் வரை எதிரும் புதிருமாகச் சுற்றிக்கொண்டிருந்த ஆரி மற்றும் பாலா, கடந்த சில நாள்களாக 'சமாதான' கொடியை பரக்கச் செய்துகொண்டிருக்கின்றனர். கமல் வரும் எபிசோட் அன்று அனிதா ஒவ்வொருவரையும் ஆராய்ந்து மதிப்பெண்கள் கொடுப்பது வழக்கம். அந்த வரிசையில், ரம்யாவோடு இணைந்து தீவிர டிஸ்கஷனில் ஈடுபட்டார் அனிதா. இந்த வாரம் ரியோதான் அனிதாவின் டார்கெட். பி கேர்ஃபுல்!
சுவாரஸ்யமற்ற போட்டியாளர், நாமினேஷன் என வீட்டிற்குள் நடைபெறும் அனைத்து தேர்வு முறைகளிலும், லவ் பெட் கேங் ஒரே நபரை ஒரே பாயின்ட்டை வைத்து நாமினேட் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். இம்முறையும் அதே ஆரி, அனிதா மீது அவர்களின் கவனம் சென்றது. தங்களுக்குப் பிடிக்காத அனிதா, ஆரியை நாமினேட் செய்வது பிழையில்லையாம். ஆனால், இவர்களை மற்றவர்கள் நாமினேட் செய்தால் க்ரூப்பிசமாம். எங்கே போய் கேட்பது இந்த நியாயத்தை! அதிலும் நாமினேட் செய்யப்போகும் நேரத்தில், அனிதாவை சுட்டிக்காட்டிவிட்டு, ஆனால் தான் அனிதாவை நாமினேட் செய்யவில்லை என்றுகூறியதெல்லாம் ரியோவின் வேற லெவல் ஸ்ட்ராடஜி.
அதிலும் அனிதா கேஷுவலாக சோமிடம் சொன்ன விஷயத்தை ரியோவிடம் கூறியபோது, சைடு கேப்பில் 'மாமாவா நீ' என்றெல்லாம் அர்ச்சனா பயன்படுத்தியது டூ மச். அப்படி என்ன அர்ச்சனா இங்கே நடந்துவிட்டது! இவ்வளவு வெறுப்பை கொட்டுறீங்க! 'அன்பு' 'அன்பு' என்று சுற்றிக்கொண்டிருக்கும் இந்த கேங் மொத்தமும் வெறுப்பையே சம்பாதித்துக்கொண்டிருக்கின்றனர் என்பதை அவர்கள் இன்னமுமா உணரல! வெரி பேட்!
ரியோவை எதிர்த்தவர்கள்தான் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர் என்று சனம் ஷெட்டியை மட்டும் கைகாட்டி பேசிய அனிதாவிற்குத் தக்க பதிலடி கொடுத்து நகர்ந்தார் ரியோ. சுரேஷ் தாத்தா, சம்யுக்தா, நிஷா என அனிதாவோடு சண்டையிட்டு வெளியேறியவர்கள் லிஸ்ட்தானே அதிகம்! லக்கி கேர்ள்.
அடுத்தபடியாக ஷிவானி, ரியோ மற்றும் சோமை கன்ஃபெஷன் அறைக்கு அழைத்து சென்டிமென்ட் சீனை உருவாக்கினார் பிபி. நாமினேஷன்களிலிருந்து தப்பிக்க வைக்கும் யுக்தியா பாஸ் இதெல்லாம்! என்னவோ போங்க பாஸு. ஆஜீத், சோம், ஷிவானி, அனிதா, அர்ச்சனா, ரியோ மற்றும் ஆரி இந்த வாரம் நாமினேட் ஆகியிருக்கிறார்கள். இவர்களில் இந்த வெளியேறப்போகும் அந்த சர்ப்ரைஸ் போட்டியாளர் யார் என்று எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"