‘ரூல்ஸ் பிரேக்கிங்’ பாலா ஏன் போட்டியாளர்களால் ஆதரிக்கப்படுகிறார்?

கடந்த வாரம் ஒட்டுமொத்த லக்ஜூரி பட்ஜெட் பாயின்ட்டுகளும் பாலாவினால்தான் போனது. ஆனால், இரண்டே இரண்டு நாமினேஷன் ஓட்டுகள் மட்டுமே வந்தன.

Bigg Boss 4 Tamil Vijay Tv Anita Bala Gaby Aajeeth Suchi Day 45 review
Bigg Boss 4 Tamil Vijay Tv Bala

Bigg Boss 4 Tamil Day 45 Review : ப்ரோமோவைப் பார்த்தபிறகு இந்த முறையும் பாலாவால் லக்ஜூரி பட்ஜெட் டாஸ்க் போகப்போகிறது என்கிற சந்தேகம் ஹவுஸ்மேட்ஸுக்கு மட்டுமல்ல, நமக்கும் தோன்றியது. ஆனால், வழக்கம்போல ரூல்ஸ் புரியாமல் முழித்திருக்கிறார்கள் என்பது முழு எபிசோட் பார்த்தபிறகுதான் தெரிந்தது. ‘கொஞ்சம் நஞ்சம் ஆட்டமாடா ஆடுறீங்க, உங்களை என்ன பண்ணுறேன்னு பாருங்க’ என்று நினைத்த பிக் பாஸ் நாள் முழுக்க விழித்திருக்கும் வித்தியாச டாஸ்க் கொடுத்து நம்மை ஆசுவாசப்படுத்திவிட்டார். என்றாலும் அவர்களின் அட்ராசிட்டிகளைப் பற்றி விவாதிப்போம் வாங்க.

மணிக்கூண்டில் ஒரு குழுவிற்குப் பின் ஒன்றாகச் சுற்றிக்கொண்டிருக்க, ரியோ, கேபி மற்றும் ரம்யாவை பேயாக மாற்றி அலையவிட்டார் பிபி. முன்கூட்டியே டாஸ்க் பற்றி ஹவுஸ்மேட்ஸுக்கு சொல்லப்பட்டதால் யாரும் பயப்படவில்லை. ஆனால், சுவாரசியமும் குறையவில்லை. மூவரும் தங்களுக்கான டாஸ்க்கை நன்றாகவே செய்தனர். இதில் நிஷா ஏன் உணர்ச்சிவசப்பட்டார் என்பதுதான் புரியவில்லை. அவ்வளவு பயமாவா இருந்துச்சு!

Bigg Boss 4 Tamil Vijay Tv Anita Bala Gaby Aajeeth Suchi Day 45 review
Bigg Boss 4 Tamil Vijay Tv Bala

இதற்கிடையில் கல்லை நகர்த்தியும், மணிக்கூண்டில் நிற்கும் நிஷாவை நகர்த்தியும் ‘தீராத விளையாட்டுப் பிள்ளையாக வலம்வந்துகொண்டிருந்தார் பாலா. தங்களின் நேரம் நிறைவடையும் நிலையில் அடுத்தபடியாக மணிக்கூண்டில் தஞ்சமடையவிருக்கும் பாலா, சுச்சியை எழுப்பிவிடச் சென்ற அனிதாவுக்கு நோஸ் கட். தலைவலி, கால்வலி என வழக்கம்போல பாலா புலம்பிக்கொண்டே டாஸ்க்கிற்கு தன் இஷ்டத்திற்குத் தயாரானார். இந்த நேரத்திலும் ரம்யா அமைதியாக இருப்பது ஏன்? எவ்வளவுதான் தவறுகள் செய்தாலும் ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்ஸும் பாலாவை மட்டும் விட்டுக்கொடுக்காமலே இருப்பது ஏன்? கடந்த வாரம் ஒட்டுமொத்த லக்ஜூரி பட்ஜெட் பாயின்ட்டுகளும் பாலாவினால்தான் போனது. ஆனால், இரண்டே இரண்டு நாமினேஷன் ஓட்டுகள் மட்டுமே வந்தன. இந்த பாரபட்சம் எதனால்? ஆக, தங்களுக்கு இடையூறாக இருக்கும் பெர்சனல் வெஞ்சேன்ஸ்காக மட்டுமே அடுத்தவர்களை நாமினேட் செய்கிறார்களே தவிர, போட்டியின் பார்வையிலிருந்து யாரும் யாரையும் நாமினேட் செய்வதில்லை. ரொம்ப மோசம்பா!

அதேபோல மூன்று மணி நேரத்தைக் கவர் செய்வதற்குப் பதிலாக, ஒன்றரை மணிநேரத்தில் முடித்து ஓய்வெடுக்கச் சென்றுவிட்டனர் பாலா டீம். கேட்டால், முதல் நாள் நிறைய நேரம் நின்னுட்டோம்ல அதை சரிசமமாக்கிக்கலாம் என்று ஆறுதல் வேறு. ரூல்ஸ் புரிஞ்சி கடைசி வரைக்கும் விளையாட மாட்டாங்க போல. நடக்கட்டும் பிக் பாஸ். நாங்களும் வாட்சிங்!

Bigg Boss 4 Tamil Vijay Tv Sanam Bala Aari Samyuktha Suchi Day 31 review
Bigg Boss 4 Tamil Vijay Tv Suchi

நாற்பத்தி ஐந்தாம் நாள் ‘வாட் எ கருவாட்..’ பாடலுக்கு காய்ந்த கருவாடுகளைப்போல சோர்ந்து ஆடிக்கொண்டிருந்தனர் போட்டியாளர்கள். இதனைத் தொடர்ந்து ராசிபலன் டாஸ்க்கை சிறப்பாகச் செய்து முடித்தார் அர்ச்சனா. இந்த வார வீட்டின் தலைவர் ஆஜீத் என்பது மறந்தேபோய்விட்டது. ‘வீட்டை தொடைக்கவேண்டாம். வேற வேலைகள் இருக்கு வாங்க’ என்ற கேப்டனின் ஆர்டரை கூலாக நிராகரித்துவிட்டுத் தான் உண்டு தன் வேலை உண்டு எனச் சுத்தமாக இருக்கும் ஃபர்னீச்சர்களை அழுக்காக்கிக்கொண்டிருந்தார் சுச்சி. இதற்கிடையில் வீட்டிலிருக்கும் ஒவ்வொருவரைப் பற்றி ரன்னிங் கமென்ட்ரி வேறு. (யார் பெத்த புள்ளையோ இப்படி தனியா புலம்பி சிரிச்சிட்டு இருக்கு!)

‘ரிவெர்ஸ்’ டாஸ்க்கில், நடப்பது, சாப்பிடுவது என அனைத்தையும் பின்னோக்கி சென்றபடி கேபி மற்றும் ஆஜீத்தின் நடிப்பு சிறப்பாக இருந்தது. நேற்றைய எபிசோடில் சோம், சம்யுக்தா அணி மூன்று மணிநேரம் நான்கு நிமிடங்களைக் கவர் செய்திருந்தனர். பிளே ஸ்டேஷன் இருப்பதுபோல நினைத்து, ரியோ, சோம் அட்ராசிட்டிகள் வேற லெவல். ஆனாலும், ரம்யா மற்றும் அர்ச்சனா அவ்வப்போது ஆரியை கலாய்க்கும் விஷயம் மட்டும் ஆரிக்குத் தெரிய வந்தது… நம் கதி என்னாவது!

Bigg Boss 4 Tamil Vijay Tv Kamal Hassan Sanam Suchi Anita Shivani Day 42 review
Bigg Boss 4 Tamil Vijay Tv Sanam

நடனம் என்கிற பெயரில் சனம் ஷெட்டி கொடுக்கும் பெர்ஃபாமன்ஸ் சான்ஸே இல்ல. குபீர் சிரிப்புகள்தான். ஆரி மற்றும் ரியோ குடும்பத்தினரின் வாழ்த்துகளோடு நேற்றைய எபிசோட் எமோஷனலாக நிறைவடைந்தது. இந்த வாரம் லக்ஜூரி பட்ஜெட் இருக்கிறதா இல்லையா என்பதை இன்று பார்த்து நாளை அலாசிடுவோம்! பீ கேர்ஃபுல் (எங்களைதான் சொல்லிகிட்டோம்.)

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss 4 tamil vijay tv anita bala gaby aajeeth suchi day 45 review

Next Story
திருமணம் முடிந்தது: கனவை எப்படி நனவாக்குவாள் சந்தியா?Tamil Serial News, Vijay TV Raja Rani 2
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com