/tamil-ie/media/media_files/uploads/2020/11/Bala-Anita-updated.jpg)
Bigg Boss 4 Tamil Vijay Tv
Bigg Boss 4 Tamil Day 44 Review : இதுவரை எந்த சீசனிலும் இல்லாத புதுவித சுவாரசியமான விளையாட்டை அறிமுகம் செய்து இந்த சீசனுக்கான பிறவிப் பயனைப் பெற்றுவிட்டது பிக் பாஸ். 'மணிக்கூண்டு' எனும் வித்தியாச டாஸ்க். வீட்டிலிருப்பவர்களே கடிகாரமாக மாறி, நொடிக்கு நொடி சவாலான கேம்ஸ். இந்த சீசன் வரலாற்றிலேயே முதல் முறையாக ரமேஷ் முதல் ஆஜீத் வரை அனைவரும் தங்களின் பங்களிப்பைக் கொடுத்துள்ளனர். மணிக்கூண்டின் முட்களை ஆராய்ந்து பார்க்கலாம் வாங்க.
'பாண்டி நாட்டு கொடியின் மேல..' பாடலோடு ஆரம்பமான நாற்பத்து நான்காம் நாள் மிகவும் பரபரப்பாக நகர்ந்தது. நேர அடிப்படையிலான டாஸ்க். ஆனால், கடிகாரமாக ஹவுஸ்மேட்ஸ். மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை கடிகார டீம்ஸ் மாறவேண்டும். மனதால் எண்ணினாலும், மூன்று மணிநேரம் ஒரு நிமிடத்தை மிகச் சரியாக அளவிட்டிருந்தார்கள் ரியோ மற்றும் கேபி குழு. உண்மையிலேயே கேபி மிகவும் கியூட்டான குக்கூவாகவே தென்பட்டார்.
Bigg Boss 4 Tamil Vijay Tv Gabyஇந்த விளையாட்டின் முதல் அணியான அனிதா, சனம் பார்ட்னர்ஸ், ஓரளவிற்கு மூன்று மணிநேரத்தைக் கவர் செய்திருந்தனர். முழு ஈடுபாட்டோடு செய்தால் அனிதா மிகவும் கியூட்டாக இருக்கிறார் (மறுக்கா சொல்லுங்க!) என ஆஜீத், சம்யுக்தா மிகத் தீவிர டிஸ்கஷனில் ஈடுபட்டிருந்தனர். ஆனால், பாலா, சுச்சி அணி நான்கு மணிநேரமாக 'ஓடு ஓடு' என ஓடிவிட்டு, 'நாம் சரியான நேரத்தைக் கவர் செய்திருப்போம்' என்ற ஓவர் கான்ஃபிடென்ட்டில் பாலா சுற்றித்திரிவதை என்னவென்று சொல்வது! ஒரு நியாயம் வேண்டாமாயா!
இதற்கிடையில் ஷிவானியை சமாதானம் செய்கிறேன் என்ற பெயரில், ஏதோ இரண்டு ஸ்டெப்பை போட்டுவிட்டு, 'உன் மைண்ட் மாறிடுச்சா? பை!' என்று பாலா கூறிவிட்டுச் சொல்வதெல்லாம் எந்த கேட்டகிரியில் சேர்த்துக்கொள்வது! இதெல்லாம் சின்னப்புள்ளைத்தனமாக இல்லையா யுவர் ஆனர்! பாலாவின் செயல் எதற்கும் எந்தவித ரியாக்ஷனும் இன்றி அவரைப் பார்த்தபடியே இருந்தார் ஷிவானி. ஓவியா போல மனஉளைச்சலுக்கு ஷிவானியைத் தள்ளிடப்போகிறீர்கள் பாலா. கொஞ்சம் மெச்சூர்டா ஹாண்டில் பண்ணுவது சிறந்தது.
Bigg Boss 4 Tamil Vijay Tv Bala Shivani Day 44 reviewநாம் பேசும் மொழி என்னவென்று நமக்கே புரியாத மொழியில் பேசி, அதனை மற்றவர்களுக்குப் புரிய வைக்கும் 'ஜிப்ரிஷ்' மொழி டாஸ்க். 'காலகேயன்' முதல் கொரியன் ட்ராமாக்கள் வரை அத்தனை படங்களின் புரியாத வசனங்களும் மனதில் ஓடிக்கொண்டிருந்தன. சோம், ஷிவானி என இதுவரை நாம் பார்க்காத இவர்களின் பெர்ஃபாமன்ஸுகளை பார்க்க முடிந்தது. சிறப்பாகவே இருந்தன.
ஜித்துவை மட்டும் அப்பொழுதும் பார்க்க முடியவில்லை. ஆனால், குழாயடி சண்டையில் அர்ச்சனா, நிஷா தீவிரமாகச் சண்டை போட்டுக்கொண்டிருக்கும்போது, 'இடுப்பை மட்டும் தொட்டுடாதீங்க' என்ற க்ளூவை கொடுத்து எஸ்கேப் ஆனார். அதன்பிறகு நிஷாவின் பாடு பெரும்பாடு. சண்டை போடும் டாஸ்க் ஆச்சே, அனிதாவிற்கு அல்வா சாப்பிடுவதுபோலதான் இருந்தது. வெல்(டா)ன்.
Bigg Boss 4 Tamil Vijay Tv Anitaஅடுத்தபடியாக 'கறுப்பு வெள்ளை' படங்களில் வரும் ஹிட் வசனங்களைப் பேசி இமிடேட் செய்வதுபோன்ற டாஸ்க். 'பராசக்தி' படத்தில் வரும் சிவாஜியின் வசனங்களை தன் பாணியில் மாற்றியமைத்து நன்றாகவே செய்து காட்டினார் நிஷா. எம்.ஜி.ஆர், சரோஜா தேவி மற்றும் நம்பியார் போல ரியோ, கேபி மற்றும் ரமேஷ் நடித்துக் காட்டினார்கள். நேற்றைய ஷோவின் டாப் க்ளாஸ் பெர்ஃபார்மராக மகுடம் சூட்டப்படவேண்டும் என்றால் நிச்சயம் அது அனிதாவிற்குத்தான். குக்கூ, குழாயடி சண்டை, கறுப்பு வெள்ளை பட வசனங்கள் என அனைத்திலும் தன் முழு திறமையையும் வெளியுலகத்திற்குக் காட்டினார் அனிதா. தனக்கு அழுவதைத தாண்டி, ஸ்பேஸ் கிடைத்தால் இதையும் செய்ய முடியும் என நிரூபித்துவிட்டார். ஹ்ம்ம்.. நாமினேஷனைத் தொடர்ந்து நேற்று ஸ்கோர் செய்துவிட்டார் அனிதா. சுச்சி சீன்லயே மாட்டவில்லை. இந்த வாரமாவது பாலாவினால் லக்ஜூரி பட்ஜெட் டாஸ்க் மதிப்பெண்கள் குறையாமல் இருக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us