/tamil-ie/media/media_files/uploads/2020/10/Bigg-Boss-Julie-and-Anita-updated.jpg)
Bigg Boss 4 Tamil Vijay tv Anita Sampath and Julie
Bigg Boss 4 Tamil Review Day 25 : இன்னும் எத்தனை நாளுக்குத்தான் அரைச்ச மாவையே அரைப்பாங்களோ தெரியல. பெயரை மட்டும் மாற்றி, தங்களின் சொந்த புராணங்களையே திரும்பத் திரும்ப ஒளிபரப்பிச் சலிப்பைத் தட்ட வைக்கிறது இந்த சீசன் பிக் பாஸ். முதல் சீசனில் ஜூலி என்றால் இந்த சீசனில் அனிதா. விறுவிறுப்பு குறைந்து காணப்பட்ட நேற்றைய எபிசோட் பற்றிய விமர்சனத்தை இனி பார்க்கலாம்.
வேல்முருகன் பாடிய 'ஒத்த சொல்லால..' பாடலோடு விடிந்த 25-ம் நாள், 'தங்கமே உன்னைத்தான் தேடி வந்தேன்' டாஸ்க்கோடு ஆரம்பமானது. என்னதான் இருந்தாலும், அர்ச்சனாவுக்கு நிஷா பல் துலக்கிவிடுவதெல்லாம் கொஞ்சம் அதிகமாகவே தெரிந்தது. அதிகாரத்தில் இருப்பவர்களின் மனநிலையைச் சுட்டிக் காட்டியது என்றாலும் இதுபோன்ற செயலை தொலைக்காட்சிகளில் தவிர்த்திருக்கலாம் (உண்மை சில நேரத்தில் கசக்கத்தான் செய்யுமோ!).
Bigg Boss 4 Tamil Archana and Nisha'ஃப்ளோல ஏதாவது கெட்ட வார்த்தை வந்ததா!' என்பதுபோல் இருந்தது ரம்யா பாண்டியன் சட்டென சைடு கேப்பில் சுரேஷை 'குண்டு கிழவா' என்று கூறியது. சனம் சண்டை இல்லாமல் பிக் பாஸ் 4 நாள்கள் இல்லை. இம்முறை அரை எலுமிச்சைப் பழத்துக்கு அக்கப்போர். ஷப்பா! எத்தனைப்பேர் இருந்தும் ஏன் பாலாவை மட்டுமே சனம் குறிவைக்கிறார் என்பது தெரியவில்லை. ஒருவேளை அதிகமான ரசிகர்கள் பாலாவுக்கு உருவாகி வருவது சனம் ஷெட்டியின் ஞான பார்வைக்குத் தெரிந்துவிட்டதோ!
யாருடனும் ஒட்டாமல் இருக்கும் சனம், சண்டையானாலும் சமாதானம் ஆனாலும் பாலாவை நோக்கியே இருக்கிறது. அர்ச்சனா, ரியோ போன்றவர்களோடு இணைய முயற்சி செய்தால் சனம் ஷெட்டியின் மீதான பார்வை மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அவர் அதிகம் பேசுவதுதான் அவருடைய தனிமைக்குக் காரணம் என்பதைப் புரிந்துகொண்டாலே போதுமானது (ஹ்ம்ம்.. இதெல்லாம் நடக்கும் ஆனா, நடக்காது).
Bigg Boss 4 Tamil Sanam Shettyபோகிற போக்கில் பாலாவுக்கு 'ஷிவானி மாலை வரை பணிப்பெண்ணாக இருக்கவேண்டும்' என்று அர்ச்சனா சொன்னதும் போதும், பாலாவின் ஆட்டம் ஆரம்பம். ஆனாலும், இது காதலா இல்லை வெறும் கன்டென்ட்டா என்பதுதான் நமக்குப் புரியவில்லை. ஒரே பாடலை வெவ்வேறு மாடுலேஷனில் பாடச் சொல்லுவது, உடற்பயிற்சி செய்யும்போது குடை பிடிக்கச் சொல்வது என அந்தச் சின்ன பொண்ணை நிறைய வேலை வாங்குறீங்க இளவரசரே! நல்ல டைம் பாஸ் பண்ணுறீங்க தம்பி. இதற்கிடையில் ஆரிக்கு மேக அப் செய்து வேடிக்கை பார்த்தது வீடு. (இதெல்லாம் கட் பண்ணிருக்கலாமே பிபி.. வீட்ல குழந்தைகள் எல்லாம் நிகழ்ச்சி பார்க்கணுமா இல்லையா!)
'ஏன்! இதுக்கு முன்னாடி அம்மியை உன் வாழ்க்கையில பார்த்ததே இல்லையா? அப்போல்லாம் அரைக்கனும்னு தோனலயா?' என்ற கேள்வி எழாமலில்லை பாலா ஊருசனத்தையே கூட்டி அம்மியில் அரைத்தபோது. தான் ஃப்ளோவில் சொன்ன வார்த்தையைக் காப்பாற்றவேண்டுமே என்ற பதற்றமோ! என்னவா மேனேஜ் பண்ணுறாப்ல! நல்ல டாக்டிக்ஸ் பாலாஜி. எது எப்படியோ, நிஷா மூலம் நாட்டுக்கு நாலு நல்ல விஷயம் சொல்லியாச்சு.
'தனித்தனியா ஷாப்பிங்! இதுதான் சான்ஸ்' என தங்களுக்குப் பிடித்தவற்றையெல்லாம் வாரி சுருட்டிக்கொண்டு வந்தனர் வீட்டின் இளையவர்கள். இதைக்கண்ட பெரியவர்களுக்குக் கடுப்பு. (விடுங்க அக்கா இருந்துட்டு போகட்டும். சின்னசிறுசுங்க.. உங்க பிள்ளைகளா நினைச்சு மன்னிச்சுடுங்க).
Bigg Boss Tamil 4 Ramya, Samyuktha, Sureshஅடிப்படை பொருள்கள் எல்லாம் கிடைக்கிறது, தண்ணீர் அல்லது உணவுப் பற்றாக்குறை இல்லை. இப்படி அதிநவீன வாழ்க்கையை பிக் பாஸ் வீட்டில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். தாங்கள் கடந்து வந்த பாதைகளைப் பற்றியும், தங்களுக்குப் பிடித்தவர்களைப் பிரிந்து இருக்கும் மனநிலைப் பற்றியும் பேசாமலா இருக்கிறார்கள்! அதற்கென்று எதற்கு மறுபடியும் ஒரு டாஸ்க்? ஃபீலிங் இருக்கவேண்டியதுதான், அதுக்குன்னு அளவே இல்லாம ஃபீல் பண்ணுனா! (போதும்! நிறுத்திக்கோங்க! நிறைய அழுந்துட்டோம்).
அனிதாவுக்கு ஸ்பேஸ் கொடுத்தா என்ன ஆகும் என்பதைத் தமிழ்நாடு மக்கள் இப்போது தெளிவாகப் புரிந்திருப்பார்கள். மற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் பேசிக்கொண்டே இருந்தால், அடுத்து எப்படியம்மா 'ஸ்பேஸ்' கொடுப்பாங்க. கொடுக்கப்பட்ட இடத்தை சரியாகப் பயன்படுத்தப் பல நேரங்களில் தவறவிடுகிறார் அனிதா. உண்மையை சொல்லனும்னா அனிதாவுக்கு 'நடிக்கத் தெரிலைங்க. நடிக்கவும் வராது!'. என்றாலும், அனிதா பேசும்போது மற்றவர்கள் சிரித்தது தவறான மனநிலை. ஒருவரைப் பிடிக்கவில்லை என்பதற்காக, தன் கஷ்டத்தைப் பகிரும்போதும் கேலி செய்வது தவறான செயல்.
Bigg Boss 1 Julieமுதல் சீசனில் ஜூலி தான் யாரை மிஸ் செய்கிறார் என்று பேசியபோது, மற்ற ஹவுஸ்மேட்ஸ் என்ன செய்தார்கள் என்பது நினைவிருக்கிறதா? மற்ற அனைத்து செலிபிரிட்டிகளும் ஒன்றாகச் சேர்ந்து ஜூலியை மேடையைவிட்டு இறக்கச் செய்தனர். அதேபோன்ற சம்பவம்தான் தற்போது அனிதாவுக்கும் நடந்திருக்கிறது.
'உங்களுக்காகப் பேசல. என் குடும்பத்துக்காகப் பேசினேன்' என்று அனிதா சொன்னது அந்த வீட்டில் எந்தளவுக்குத் தனிமையில் இருக்கிறார் என்பதை வெளிப்படுத்தியது. என்றாலும், 24 மணிநேரமும் அனிதா கேமரா கான்ஷியஸாகவே இருக்கிறார். அப்புறம் எப்படி விளையாடுறது? ரொம்ப கஷ்டம்!
என்னதான் சொல்லுங்க. இம்முறை யார் பேசியபோதும் நமக்கு அந்த எமோஷன்ஸ் கடத்தப்படவில்லை என்பதுதான் உண்மை(எத்தனை முறைதான் கேட்பது!) அதுமட்டுமின்றி, பலர் பேசியது புரியவுமில்லை. 'கட்டிங், ஒட்டிங்' எல்லாம் நம்மைப் பல கேள்விகளைக் கேட்கத் தூண்டுகிறது. அதெல்லாம் இருக்கட்டும், இந்த வாரம் அனிதா வீட்டைவிட்டு வெளியேறிவிடுவாரா? பிக் பாஸ் அனிதாவை விட்டுவிடுவார்? உங்களுடைய கணிப்பு என்ன?
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us