/tamil-ie/media/media_files/uploads/2020/12/AARI1-updated.jpg)
Bigg Boss 4 Tamil Vijay Tv Archana Aari Rio Bala Ramya
Bigg Boss 4 Tamil Review Day 72 : நேத்து பிக் பாஸுல என்ன நடந்துச்சுனு எனக்கு ஒன்னும் புரியல. உங்களுக்கு ஏதாச்சு புரிஞ்சுதா மக்களே? புரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்க. முட்டைனு சொல்லுறாங்க நரினு சொல்லுறாங்க. முட்டையை பாதுகாக்கணும்னு சொல்லுறாங்க. அதுக்காக என்ன டீல் வேண்டுமானாலும் வெச்சுக்கலாம்னு சொல்லுறாங்க. ஆனா, அந்த டீலிங்ல எத்தனை சந்தேகங்கள், எத்தனை குழப்பங்கள்! முடியல...
இதுவரைக்கும் இந்த சீசன்ல எத்தனையோ டாஸ்குக்கள் நடைபெற்றிருக்கின்றன. அவற்றில் ஒண்ணுகூட இந்த போட்டியாளர்கள் சரியாக ரூல்ஸ் புரிந்து விளையாடவில்லை. குறைந்தபட்சம் நமக்காவது புரிந்தது. ஆனால், நேற்றைய டாஸ்க் அவர்களுக்கும் புரியவில்லை, பார்வையாளர்களாக நமக்கும் விளங்கவில்லை. என்ன ஆச்சு பிக் பாஸ் உங்களுக்கு!
இருப்பதிலேயே மிகவும் எளிதான வேலைகள் கொண்ட டீம், 'வெசல் வாஷிங்' டீம்தான். ஆனால், ஷிவானிக்கு அதில் என்ன பிரச்சனையோ தெரியவில்லை. அவ்வளவு சலிப்பு. என்றாலும், நாம் ஏற்கெனவே டிஸ்கஸ் செய்ததுபோல, ரியோ, ஷிவானி மற்றும் சோமை மட்டுமே அழைத்து சென்டிமென்ட் டச் கொடுத்தார் பிக் பாஸ். அவர்களுக்காக பாஸ் பிரச்சாரம் செய்துவருகிறார் போல. இதுமட்டுமா, ஆரி மற்றும் அனிதாவிற்கு மிஸ்டு கால் கொடுக்கமுடியவில்லை என்கிற குற்றச்சாட்டும் சமூக வலைத்தளங்களில் பரவிவருகின்றன. என்னவா இருக்கும்!
முட்டைகளைப் பாதுகாப்பதற்காக எந்தவிதமான ஒப்பந்தங்களையும் மேற்கொள்ளலாம் என்பதுதான் டாஸ்க். பணம் கொடுத்தால் தொட்டுக்கொள்ளலாம் என்பதற்கு பதிலாகத் தொடாமல் இருக்கவும் பணம் பரிமாற்றம் செய்துகொள்ளலாம்தானே. ஆரம்பத்திலிருந்து தெளிவாக இருந்த ரியோ இறுதியில் அவரையும் கன்ஃபியூஸ் செய்துவிட்டது இந்த டாஸ்க். சுவாரசியமாக இருக்கும் என்று நினைத்து ஏமாந்ததுதான் மிச்சம்.
புரியாத ஆட்டத்திற்குள் சண்டை வேறு. இதற்குச் சரியான தீர்ப்பு என்று இந்த ஆட்டத்தைக் கண்டுபிடித்தவரால்கூட கொடுக்க முடியாது. அந்த அளவுக்குக் கடுமையான ஆட்டம். அதனால் நம்மளாலும் எந்தவித தீர்ப்புக்கும் வரமுடியவில்லை. ஆனால், 'சிட்டிக்கு கோபம் வந்துருச்சு' என்பதுபோல், நேற்று ஆஜீத் கோபப்பட்டார். கோபப்பட்டு என்ன பயன்!
'கொக்கர கொக்கர கோ...' பாடலோடு தொடங்கிய எழுபத்து இரண்டாம் நாள் மிகக் குழப்பமாகவே நிறைவடைந்தது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.