பாலாவின் அன்பு, அர்ச்சனாவின் கோபம்.. தலைகீழாக மாறிய பிக் பாஸ் வீடு!

Bigg Boss 4 Tamil Review பாலாவின் அமைதி, அன்பு, அர்ச்சனாவின் ஆட்டம் என வீட்டின் நிலை இப்போது முற்றிலும் மாறியிருக்கிறது.

By: Updated: December 10, 2020, 03:09:35 PM

Bigg Boss 4 Tamil Review Day 66 : ‘போதுமடா சாமி உங்க நடிப்புலாம்’ என்கிற அளவிற்கு இருந்தது நேற்றைய எபிசோட். வழக்கம் போல ப்ரோமோவில் காட்டப்பட்ட பாலாவின் எமோஷனல் சீன் கட். அட போங்க எடிட்டரே! கன்டென்ட் எதுவும் இல்லையென்றால் இப்படி மாற்றி மாற்றி எதையாவது ப்ரோமோவில் காட்டி, அன்றைய நாளின் எபிசோட் முழுவதையும் பார்க்க வைப்பதே உங்கள் நோக்கம், கடமை என எல்லாமும் இருக்கிறது. நாங்களும் முழுமையாகப் பார்த்து ஏமாந்துவிடுகிறோம். போதும் போதும் உங்க நாடகமும்!

முந்தைய நாள் அர்ச்சனாவின் அழுகையோடு தொடங்கியது நேற்றைய எபிசோட். என்ன ஒரு அதிசயம்! பாலா இப்போல்லாம் அமைதியின் உருவமாக இருக்கிறார்! அர்ச்சனாவிடம் மன்னிப்பு கேட்பது, அர்ச்சனாவுக்கு டாஸ்க்கில் இரக்கம் காட்டுவது என ‘பாலாவா இது!’ என்கிற அளவிற்கு மாறியிருக்கிறார். என்னவா இருக்கும்! ஒருவேளை கமல் கொடுத்த டோஸ் மற்றும் குறும்படங்கள் காரணமாக இருக்குமா! என்னவோ போங்க. ஆனா, சுவாரசியம் குறைவதுபோல் தோன்றுகிறது. சனம் ஷெட்டியும் இல்லாமல் அமைதியாகக் காணப்படுகிறது பிக் பாஸ் இல்லம்!

Bigg Boss 4 Tamil Vijay Tv Kamal Hassan Sanam Eviction Bala Aari Anita review Day 63 Bigg Boss 4 Tamil Vijay Tv Kamal Hassan Sanam Eviction

செய்வதையும் செய்துவிட்டு, மன்னிப்புக் கேட்டு அழுவதெல்லாம் என்ன மனநிலை? இதனை வீட்டில் இருக்கும் உங்கள் குழந்தைகளும் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் நிஷா. நிதானமாக விளையாடுவது சிறந்தது. இதற்கிடையில் ஷிவானிக்கும் பாலாவுக்கும் செல்ல சண்டை. அதுவும் ‘குண்டு ரோபோட்’ என்று பாலா ஷிவானியை கூறிவிட்டாராம். அப்படியொரு கோவம் நம்ம நாலு மணி ஷிவானிக்கு.

முதல் நாள் எந்திரன் 1 பாடல் என்றால் அடுத்த நாள் எந்திரன் 2 பாடல் என ஏற்கெனவே சிந்தித்து வைத்திருந்த பாடலை ஒளிபரப்ப, மிகவும் சோம்பலாக அறுபத்து ஆறாம் நாளை தொடங்கினார்கள் ஹவுஸ்மேட்ஸ். இந்த ‘பாஸி ரோபோ’ பிரச்சனை ஓய்ந்தபாடில்லை. அதற்காக வாக்குவாதத்தில் ஈடுபட்ட அர்ச்சனா கிளம்பிப்போனதுகூட தெரியாமல் புலம்பிக்கொண்டிருந்த அனிதாவை பார்த்துப் பரிதாபப்படுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. ஆனாலும், குபீர் சிரிப்புதான் வந்தது! நிறைய ஸ்பேஸ் கிடைத்துவிட்டது அனிதாவிற்கு!

Bigg Boss 4 Tamil Vijay Tv Shivani Ramya Archana Nisha Anita review Day 59 Bigg Boss 4 Tamil Vijay Tv Anita

நேற்றைய எபிசோடில் நிறைய நகைச்சுவை எலிமென்ட்ஸ் இருந்தது. ரமேஷ், ரம்யா, ஷிவானி, கேபி, சோம் உள்ளிட்ட அனைத்து ரோபோக்களை வைத்தும் நன்றாகவே நகைச்சுவை செய்தனர். அப்பொழுதும் பாஸி ரோபோ என்றதும் அர்ச்சனாவின் கண்களில் நீர் வழிந்தது. என்ன கொடுமை இது! அதைவிட கொடுமை, அர்ச்சனா அழுவதை கண்ட பாலா பக்கத்தில் இருந்த சோம் சேகரை கன்சோல் செய்யச் சொன்னதுதான். என்னதான் ஆச்சு பாலாவுக்கு! ‘அன்பு’ மாற்றி விட்டதா?

க்ரூபிஸம் இல்லையென்று கூறிவிட்டு, கேபியை ஆரி வெறுப்பேற்றியபோது எதற்காக ரியோ காப்பாற்றவேண்டும்! அதை ரியோவே ஒப்புகொண்டும்விட்டார். (ஹ்ம்ம் கன்டென்ட்டும் கொடுத்தாரு). அடுத்தபடியாக பாலா தலைமையிலான மனிதர்கள் அணி ரோபோட்டாக மாற, ரோபோட்டுகள் யாவும் மனிதர்களாக மாறினார்கள். ஆரி மற்றும் பாலா தங்களின் டார்கெட்டே இல்லை என்று கூறிவிட்டு, பாலா சிரித்ததும் டார்கெட் மாறிவிட்டது. எப்போதும் மிக டஃப்பான போட்டியாளராக இருக்கும் பாலா, நேற்று விளையாடவே இல்லை. முந்தைய நாள் நிஷா வைத்துச் செய்ததற்கு, அர்ச்சனாவுக்கு சரியான சந்தர்ப்பமாக அமைந்தது. பாலாவே தன்னை செயலிழக்க செய்துவிட்டார். நிஷா ரோபோ இரண்டாவதாக செயலிழந்தது. அவ்வளவேதான் நேற்றைய எபிசோட். பாலாவின் அமைதி, அன்பு, அர்ச்சனாவின் ஆட்டம் என வீட்டின் நிலை இப்போது முற்றிலும் மாறியிருக்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Bigg boss 4 tamil vijay tv archana bala aari nisha anita review day

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X