இன்னும் கொஞ்சம் பயிற்சி வேண்டும் மனிதர்களே! - பிக் பாஸ் விமர்சனம்

Bigg Boss 4 Tamil நேற்று செய்ததுக்கெல்லாம் சேர்த்து இன்றைக்கு பாலா டீமை செய்யக் காத்திருக்கிறார்கள் அர்ச்சனா அணி.

Bigg Boss 4 Tamil நேற்று செய்ததுக்கெல்லாம் சேர்த்து இன்றைக்கு பாலா டீமை செய்யக் காத்திருக்கிறார்கள் அர்ச்சனா அணி.

author-image
priya ghana
New Update
Bigg Boss 4 Tamil Vijay Tv Nisha Archana Aari Anita review Day 70

Bigg Boss 4 Tamil Vijay Tv Archana

Bigg Boss 4 Tamil Review Day 65 : அறுபது நாள்களே நம்மால் பார்க்க முடியவில்லை. இன்னும் நாற்பது நாள்களை எப்படிக் கடப்போம் என்று தெரியவில்லை. தற்போது நூற்றுநாற்பது நாள்கள் இந்த சீசன் 4 இருக்குமெனச் செய்திகள் வேறு வெளிவந்து கடுப்படையச் செய்கிறது. என்னதான் ஆச்சு பிக் பாஸ் உங்களுக்கு? பிக் பாஸை என்ன சொல்வது! அவரும் வித்தியாசமான டாஸ்க்குகளைதான் கொடுக்கிறார், ஆனால் எதுவும் ஒர்க் அவுட் ஆகமாட்டீங்குதே!

Advertisment

'புதிய மனிதா..' பாடலோடு விடிந்த அறுபத்து ஐந்தாம் நாள், நேரடியாக ரோபோ டாஸ்க்குக்குதான் சென்றது. ப்ரோமோ வேற லெவலில் இருக்கிறது. நிச்சயம் இன்று பிக் பாஸ் நம்மைக் கைவிடமாட்டார் என்று நினைத்தால், கடைசி 10 நிமிடங்கள் மட்டுமே கன்டென்ட் இருந்தது. மற்ற நேரங்களில் எல்லாம் 'ஈ' ஒட்டிக்கொண்டுதான் இருந்தோம்.

மனிதர்கள் ரோபோக்களை செயலிழக்க வைக்கவேண்டும் என்பதுதான் டாஸ்க். இரு அணி தலைவர்களான அர்ச்சனாவும் பாலாவும் தங்களுக்கான அணி நபர்களைத் தேர்வு செய்ததும் டாஸ்க் ஆரம்பமானது. வழக்கம்போல இந்த டாஸ்க்கிலும் போட்டியாளர்களுக்கு ஏராளமான குழப்பங்கள் இருக்க, பிக் பாஸே கூப்பிட்டு வழிநடத்தும் அளவிற்குச் சென்றது. பல் துலக்கிக்கொண்டே ரம்யாவை பாடவைத்தது, மூக்கு காதுகளை மாற்றி மாற்றி சுத்தம் செய்யுமாறு (ஐய்யோ) ஷிவானியை வம்பிழுத்தது, சோம் சேகரை குட்டிக்கரணம் போடச் செய்தது என சில ஜாலி ஆக்டிவிட்டீஸ் இருந்தாலும், அர்ச்சனாவின் கொந்தளிப்பை நோக்கியே எதிர்பார்ப்பு இருந்தது.

Bigg Boss 4 Tamil Vijay Tv Archana Bala Aari Ramesh Nisha review Day 65 Bigg Boss 4 Tamil Vijay Tv Archana

Advertisment
Advertisements

ஒவ்வொரு ரோபோக்களுக்கும் 'பாஸி ரோபோ', 'ராஜா வீட்டுக் கன்னுகுட்டி ரோபோ', 'பப்பெட் ரோபோ' எனப் பெயர் வைப்பதிலேயே ட்ரிகர் செய்யத் தொடங்கினர் மனிதர்கள் டீம். 'எவ்வளவு வேணாலும் பண்ணுங்கடா' என்கிற போக்கில் ரோபோக்கள் அனைத்தும் ஐம்புலன்களையும் அடக்கி வாசித்தார்கள். சும்மா சொல்லக்கூடாது, அர்ச்சனாவுக்கு அவர்கள் கொடுத்த டாஸ்க் ஒவ்வொன்றும் தங்களுக்கு இருக்கும் பகையைத் தீர்த்துக்கொள்ளும் நோக்கில் இருந்தது போலவே உணரமுடிந்தது.

என்னதான் இருந்தாலும், அர்ச்சனாவிடம் மரணமடைந்தவரை பற்றி நிஷா விளையாட்டில் இழுத்துப் பேசியது மிகப் பெரிய தவறு. செய்ததும் செய்துவிட்டு, தனியே சென்று அழுவதனால் எந்தப் பயனும் இல்லை. ஒருவரை ட்ரிகர் செய்ய எத்தனையோ வழிகள் இருக்கும்போது, நிஷா இப்படிக் கையாண்ட விதம் எரிச்சலையே ஏற்படுத்தியது. அதேபோல அவ்வளவு திடமாக அர்ச்சனா நின்றிருக்கவேண்டிய அவசியமும் இல்லை. தந்தைக்கு முன் எதுவும் பெரிதல்ல என்று நினைத்திருந்தால், நிச்சயம் உடைந்து அந்த கணமே நிஷாவை எச்சரித்திருக்கலாம். அதற்குப் பின்பு உடைந்து அழுவதிலும் எந்த பயனுமில்லை.

Bigg Boss 4 Tamil Vijay Tv Archana Bala Aari Ramesh Nisha review Day 65 Bigg Boss 4 Tamil Vijay Tv Nisha

நிஷா, அர்ச்சனா இருவரும் தாங்கள் தனியாகத்தான் விளையாடுகிறோம் என்பதைத் தெரிவிப்பதற்காகவே இதுபோன்ற நிகழ்வை நிகழ்த்தினார்களா என்கிற சந்தேகமும் ஒருபுறம் எழாமலில்லை. ரமேஷிடம் ரியோ, நிஷா மொக்கை வாங்கிய தருணம் வேற லெவல். ப்ரோமோவில் பார்த்த நிஷா ஆரி சண்டை நிச்சயம் பொய்யாக இருக்கும் என்று யூகிக்க முடிந்தது. நம்மால் மட்டுமல்ல, ரமேஷாலும் தான். ஸ்மார்ட் மூவ் ப்ரோ!

விதிமுறைகள் சரியாகப் புரியாமல் இருந்ததால் சுவாரசியம் குறைந்தே காணப்பட்டது. இன்னும் கொஞ்சம் மனிதர்களுக்கு பயிற்சி வேண்டுமோ! நேற்று செய்ததுக்கெல்லாம் சேர்த்து இன்றைக்கு பாலா டீமை செய்யக் காத்திருக்கிறார்கள் அர்ச்சனா அணி. ஏதாவது கன்டென்ட் இருந்தால் சிறப்பு!

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"

Bigg Boss Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: