Bigg Boss 4 Tamil Review Day 64 : 'இது வேற மாதிரி ஆட்டம்' என்பதுபோல பாலா தன் வேற லெவல் மேனரிஸத்தை நேற்று வெளிப்படுத்தினார். என்றாலும் மிகத் தெளிவான ஆட்டமாகவே இருந்தது. இது வெறும் விளையாட்டுதான், இங்கு எந்த விதமான எமோஷன்ஸுக்கும் இடமில்லை என்கிற பாயின்ட்டில் மிகத் தெளிவாக இருக்கிறார். கூடவே சுற்றிக்கொண்டிருக்கும் ஷிவானி இல்லையென்றாலும் எந்தப் பிரச்சினையும் இல்லை என்கிற அளவிற்குச் சிந்தனையில் என்ன ஒரு தெளிவு! பொழச்சுப்பீங்க பாலா!
சனம் ஷெட்டியின் திடீர் வெளியேற்றத்தை நம்மால் மட்டுமல்ல அனிதாவாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதைப் பல இடங்களில் காண முடிந்தது. 'மெர்சல் அரசன் வாரான்..' என்கிற பாடல் ஒளிபரப்பியதால் ஏதாவது வைல்ட் கார்டு என்ட்ரியாக இருக்குமோ என்கிற எதிர்பார்ப்பு தவிடுபொடியாகப் போனது. இந்த வார கேப்டன்ஷிப்க்கான போட்டி ஆரம்பமானது. எப்படியோ ஒரு வழியாக புத்தி சம்பந்தமான டாஸ்க். போட்டியின் வெற்றியாளர் அனிதா. அதாவது இந்த வாரம் நாமினேஷனிலிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார். அனிதாவை வெளியே அனுப்பக்கூடாதுனு உங்களோட கேம் ப்ளானா பிக் பாஸ் idhu. சரியில்ல!
Bigg Boss Tamil 4
மிஸ்டர் இந்தியா பாலாவை ரம்யா, ஆஜீத் கலாய்த்துக்கொண்டிருக்கையில் சம்பந்தமே இல்லாமல் என்ட்டராகி (ஓ இருக்கோ!) 'உலகத்திலேயே அழகு பாலாவா' என்று கேலி செய்ய முயன்று, பெரிய நோஸ் கட் வாங்கினார் ஷிவானி. இதற்காகவே கேப்டன்சி டாஸ்க்கில் ஷிவானிக்கு விட்டுக்கொடுத்துவிட்டார் போல பாலாஜி. நீங்க நடத்துங்க பாஸு.
அடுத்தபடியாக ஆக்டிவிட்டி ஏரியாவில் ட்விஸ்ட் கொடுத்தார் பிக் பாஸ். ஆரி, பாலா மற்றும் அர்ச்சனா நாமினேஷனிலிருந்து விடுபட, அவர்களுக்கு பதிலாக ஜித்தன் ரமேஷ், கேபி மற்றும் சோம் நாமினேட் செய்யப்பட்டார்கள். இந்த ட்விஸ்ட்டை எதிர்பார்க்காத ஹவுஸ்மேட்ஸ், உண்மையில் அதிர்ச்சியானார்கள். ஆனால், அனிதாவுக்கு மட்டும் என்ன ஒரு சந்தோஷம்!
ஆரி மற்றும் பாலாவுக்கு இடையே ஆரோக்கியமான வாக்குவாதங்கள் நடைபெற்றது. வேற என்ன அர்ச்சனாவின் 'பாஸி' கேரக்டர் பற்றித்தான். ஆனாலும் இந்த எடிட்டரை பாராட்டி ஆகவேண்டும். வசனங்களுக்கு ஏற்ற ஷாட் வைப்பதில் கில்லாடியாக இருக்கிறார். இறுதியாக ரம்யா, நிஷா, ஷிவானி, கேபி, ரமேஷ் மற்றும் சோம் நாமினேட்டாக இந்த வாரமும் கொஞ்சம் டஃப்பாகத்தான் இருக்கப்போகிறது எவிக்ஷன். யார் வெளியேற்றப்படவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"