‘அன்பு ஒன்றுதான் அனாதை’ போன சீசன் , ‘அன்பு ஜெயிக்கணுமா இல்லையா!’ இந்த சீசன்

Bigg Boss Review கால் சென்டர் டாஸ்க்கில் சனம் ஷெட்டிக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றே சொல்லவேண்டும்.

Bigg Boss 4 Tamil Vijay Tv Bala Archana Sanam Gaby Samyuktha Day 52 review
Bigg Boss 4 Tamil Vijay Tv Bala Archana Sanam Gaby Samyuktha Day 52 review

Bigg Boss Review Day 52 : என்ன ஒரு நாடகம், என்ன ஒரு நடிப்பு! ஹ்ம்ம் என்ன பண்ணுறது, இந்த நிகழ்ச்சி ஆஸ்கருக்குலாம் பரிந்துரை செய்யப்படாதே! நிஷா, அர்ச்சனா, சம்யுக்தா என இவர்களின் நடிப்பு லெவல் வேற மாதிரி! ஆனா, இவங்கல்லாம் அவங்களோட நிலை என்னன்னு புரிஞ்சுதான் பண்ணுறாங்களானு நமக்கு ஒண்ணுமே புரியல. ‘அன்பு ஒன்றுதான் அனாதை என போன சீசனில் முகேன் சொல்லிட்டு போனதும் போதும், ‘அன்பு அன்பு’ என அதையே ஆயுதமாக எடுத்துச் சுற்றித் திரிந்துகொண்டிருக்கிறார்கள் இந்த சீசன் ஹவுஸ்மேட்ஸ்.

‘இங்க எல்லாமே தப்பா இருக்கு என நிஷாவின் அழுகை, அன்பு ஜெயிக்கணுமா வேண்டாமா என அர்ச்சனாவின் தெம்பூட்டும் பேச்சு என ஒரே அன்பு டார்ச்சரில் நகர்ந்தது நேற்றைய எபிசோட். யாருதான்பா அந்த அன்பு, கொஞ்சம் சீக்கிரம் வந்து முகத்தை காட்டுங்க. அரசியல் பிரச்சாரத்தின்போது பேசுவதைப்போல ஏதேதோ பேசிக்கொண்டிருந்தனர் ‘லவ் பெட்’ கேங். நம்ம மீம் கிரியேட்டர்களுக்கு கன்டென்ட்க்கான தட்டுப்பாடுகளே இந்த முறை இல்லை.

Bigg Boss Tamil 4 Promo
Bigg Boss Tamil 4 Archana and Bala

முந்தைய நாள் ஆரி பாலாவுக்கு இடையே நடந்த வாக்குவாதங்களைப் பார்த்தும்கூட அனிதாவின் மூளைக்கு ரெட் அலெர்ட் சிக்னல் கிடைக்கவில்லை. தாமாகத் தேடிச்சென்று பாலாவிடம் லவ் பெட் கேங் பற்றியும் சம்யுக்தா பற்றியும் பேசிக்கொண்டிருக்கிறார். (என்னவென்று சொல்வதம்மா!). தாய்மையை எப்படி கேள்வி கேட்கலாம் என்கிற சம்யுக்தாவின் வாதம் அவர் அழுதபோது புரியவில்லை என்றாலும், அடுத்த நாள் அது ஆரியை லாரியில் ஏற்றிவிட சம்யுக்தா போட்ட டிராமா என்பது நன்றாகத் தெரிந்தது. ஆரி ‘பின் பாயின்ட்’ செய்த அந்த ‘மெச்சூரிட்டி’ கொஞ்சமும் சம்யுக்தாவிடம் இல்லை என்று வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது.

‘ஒய் பிளட் சேம் பிளட்’ டாஸ்க்கில் உண்மையில் பாலாவின் பங்கேற்பு ஆஸம். அதற்குக் கொஞ்சமும் சளைக்காமல் கேள்விகளைத் தொடுத்தார் அர்ச்சனா. முக்கியமாக நிஷாவோடு சேர்ந்து அனைவர்க்கும் சோறு போட்டாரோ இல்லையோ, முழுநேர பட்டிமன்ற பேச்சாளார்க்காவே மாறியிருக்கிறார் அர்ச்சனா. அவர் கூறும் அனைத்தும் நடிப்பாகவே தெரிகிறது. கோபத்தைச் சிரித்துக்கொண்டே சமாளித்தாலும், கால் சென்டரில் பணிபுரியும் பணியாளரின் கட்டுக்குள் மட்டுமே பாலாவின் பேச்சு இருந்தது.

Bigg Boss 4 tamil Samyuktha Fathima Babu
Bigg Boss 4 tamil Samyuktha

சும்மா இருந்த கேபியை சீண்டிவிட்டு, ‘இப்போ நான் என்ன சொல்லுறது’ என்று ஒன்னும் புரியாமல் அல்லாடினார் பாலா. கேபி கேட்ட ஒவ்வொரு கேள்வியும் பெர்ஃபெக்ட். இதற்கிடையில் ஆரி ஆஜராக, ‘நீங்க ஸ்ப்ரே பண்ணுறீங்க’ எனக் கூறிவிட்டு நகர்ந்தார். ஆரியை எதிர்த்து இவர்கள் வைக்கும் ஒவ்வொரு அடியும் ஆரிக்கு ஆதரவு வாக்குகளை அதிகரிக்கவே செய்கின்றது. இது தெரியாமல் ஓவர் கான்ஃபீடென்ட்டில் சுற்றிக்கொண்டிருக்கின்றனர் மற்ற ஹவுஸ்மேட்ஸ்.

கால் சென்டர் டாஸ்க்கில் சனம் ஷெட்டிக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றே சொல்லவேண்டும். கேள்விகளில் அவ்வளவு தடுமாற்றம். மேலும், சம்யுக்தாவின் தொனி கால் சென்டர் பணியாளர்களைப்போல் இல்லை என்பது நிதர்சனம். கடந்த இருதினங்களாகப் பரபரப்பாகப் போய்க்கொண்டிருக்கும் பிபி வீட்டில் இன்றைக்கு என்ன நடக்கவிருக்கிறதோ!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss 4 tamil vijay tv bala archana sanam gaby samyuktha day 52 review

Next Story
சோமை நாமினேஷனில் இருந்து காப்பாற்ற கேபி செய்த வேலைBigg Boss Tamil 4 Promo
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com