Bigg Boss 4 Tamil Review Day 24: அர்ச்சனாவுக்கும் பாலாவுக்கும் மூன்றாம் உலகப் போர் ரேஞ்சில் சண்டை வெடிக்கும் என்று எதிர்பார்த்தால், எமோஷனல் கன்டென்ட்டாகி, நமத்துப்போன பட்டாசாகிவிட்டது. சரி, சண்டையில்தான் எமோஷன்ஸ் குறைந்துவிட்டது, லவ் போர்ஷனிலாவது சுவாரசியம் இருக்குமெனப் பார்த்தால்... எதுவும் வேலைக்காகவில்லை. பிக் பாஸ் கொளுத்திப்போடுவதெல்லாம் இப்படி வீணாகப் போகிறதே!
23-ம் நாளின் மீதி போர்ஷனோடு ஆரம்பமானது நேற்றைய எபிசோட். ரியோ, பாலா, அர்ச்சனா, வேல் என அனைவரும் வேற லெவல் விவாதங்களை முன்வைத்துக்கொண்டிருக்க, வீட்டிலிருக்கும் அனைவரும் ஒன்றுகூடிவிட்டனர். சுரேஷ், சம்யுக்தாவின் அறிவுறுத்தலால் அர்ச்சனாவிடம் 'மன்னிப்பு' சென்ற பாலாவை, 'நீ எனக்கு மகனா வேணும் பாலா' என்றுகூறி நிலைமையை முற்றிலுமாய் ஆஃப் செய்துவிட்டார் அர்ச்சனா. பேசுவதற்கு முன்பே தனியாய் பாலா அழுது தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டது வீட்டிலிருக்கும் யாருக்கும் தெரியாது. தன் பலவீனத்தை வெளிப்படையாகப் போட்டுடைக்கக்கூடாது என்று நாம் ஏற்கெனவே டிஸ்கஸ் செய்ததைப்போல, அப்படியே நடந்துகொண்டார் பாலா. பலவகையில் இதுபோன்ற ஆட்டிடியூட் கைகொடுக்கும். அதேபோன்று, பாலா கேட்ட மன்னிப்பில் உண்மைத்தன்மையைப் பார்க்க முடிந்தது. இவ்வளவு நாள் பார்த்த பாலாவைவிட நேற்றை எபிசோட் வித்தியாச பாலாவைக் காட்டியது. பாலாவிடம் ஏராளமான நல்ல குணங்கள் இருந்தாலும், இடம், பொருள், ஏவல் பார்த்துப் பேசத் தெரியாமல் இருப்பது பல எதிர்வினைகளை ஏற்படுத்துகிறது என்பதுதான் நிதர்சனம்.
Bigg Boss 4 Tamil Rio, Bala, Archana
'தங்கமே உன்னதான்..' பாடலோடு விடிந்தது 24-ம் நாள். சனம் ஷெட்டி அமைதியாகக் கொளுத்திப்போடுவதில் கில்லாடி. பிரச்சனை இருக்கும் இடம் எங்கும் சனம் ஷெட்டியின் வரவு இருக்கும், அதிலும் ஒருவருக்குத்தான் தன்னுடைய சப்போர்ட் என்றெல்லாம் இல்லை. யாரிடம் பேசினாலும், அவர்களுக்கு ஆதரவாகவே பேசுகிறார். தனக்கென்று எந்தவித அபிப்பிராயமும் இல்லாமல் இருக்கிறார். 'தான் யார்' என்றாவது தெரிந்து வைத்திருக்கிறாரா என்பதிலும் நமக்குச் சந்தேகம் வராமலில்லை. இந்த மனநிலை நிச்சியம் பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
அதிலும் 'தங்கமே உன்னைத்தான்' டாஸ்க்கில் 3 அணிகளாகப் பிரித்துக்கொள்ளவேண்டும் என பிக் பாஸ் கூறியபோது, சனம் பாலாவிடம் கேட்ட விதம் உண்மையில் சிறுபிள்ளைத்தனமாகவே இருந்தது. தன்னிலையை சனம் ஷெட்டி எப்போது உணர்ந்துகொள்வார் என்பது கேள்விக்குறியே!
Bigg Boss 4 Tamil Sanam Shetty
பாலா, சுரேஷ், ரம்யா ஆகியவர்கள் மட்டுமே எந்த விளையாட்டையும் தந்திரமாக விளையாடுகிறார்கள். மற்றவர்கள், ரிவெஞ் அல்லது எமோஷனல் முடிவு எடுக்கும் மனப்பான்மையோடுதான் எப்பொழுதும் இருக்கிறார்கள். தன்னை சேர்த்துக்கொள்ளவில்லை என்றதும் ஷிவானி விலகி வந்தது முற்றிலும் தவறு. பாலாவிடம் அதிக தங்கம் இருக்கிறது என்று தெரிந்து அந்த வாய்ப்பினை பயன்படுத்துவதுதான் புத்திசாலித்தனம். ஆனால், அனைவரையும் ஏமாற்றிவிட்டு அதிக எண்ணிக்கையில் இருக்கும் அணியோடு பாலா தந்திரமாக இணைந்துவிட்டார் (பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு).
வெற்றிபெற்ற அணி புதிய சட்டங்களைப் போட்டுக்கொள்ளலாம் என்று சொன்னதும் போதும், சனம் ஷெட்டிக்கு விதவிதமான தண்டனைகளைக் கொடுத்து வறுத்தெடுத்துக்கொண்டிருந்தார் பாலா. அப்பொழுதெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், நீண்ட நேரம் இடைவேளைக்குப் பிறகு சனம் அதை நினைத்து ஃபீல் பண்ணுவதெல்லாம் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. உண்மையில் அதற்கான அர்த்தம் புரியாமல் இருந்திருக்குமா என்ன?
Bigg Boss 4 Tamil Shivani
சரி, நாம் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ஷிவானி, பாலா லவ் டிராக் எப்போது வரும் எனப் பார்த்தல், உப்பு சேர்க்காத சாதம் போல ஆகிவிட்டது. ப்ரோமோவில் சம்யுக்தா பாலாவிடம் 'சொல்லியாச்சா' எனக் கேட்கும் சீன், வழக்கம்போல் கட்டாகிவிட்டது. இனிமேலாவது ஏமாத்தாம ப்ரோமோ போடுங்க பிக் பாஸ். சுவாரஸ்யத்துக்கு விலை என்ன என்பதுபோல் நகர்ந்துகொண்டிருக்கிறது இந்த சீசன் பிக் பாஸ் நாள்கள்! கொஞ்சம் பார்த்து பண்ணுங்க!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"