Bigg Boss 4 Tamil Vijay Tv Review Day 27 : ‘அரசியலுக்கு மேடை வேண்டுமே!’ என்று கிடைக்கும் மேடைகளிலெல்லாம் அரசியலைத் தூவிவரும் கமலுக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய மேடை பிக் பாஸ். “நான் நாத்திகவாதி அல்ல, பகுத்தறிவுவாதி” என்ற தன் நிலைப்பாட்டை நேற்றைய எபிசோடில் தெளிவுபடுத்தி பெரியாரிசத்தையும் பேச கமல்ஹாசன் மறக்கவில்லை. அதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். ‘லவ் ஸ்ட்ராடஜி’, ‘தேர்தல் குழப்பம்’, ‘மலர்ந்தும் மலராத காதல்’ போன்ற புதுப்புது விளையாட்டுகளெல்லாம் உள்ளே நடந்துகொண்டிருக்கிறதே! வாங்க டிஸ்கஸ் பண்ணுவோம்!
‘தாரை தப்பட்டை’ படப் பாடலோடு ஆரம்பமான 27-ம் நாள் பல சுவாரசிய மொமென்ட்டுகளோடு நகர்ந்தது. ‘நான் மேச்சூர்டே இல்ல’ என நிஷா ரியோவோடு புலம்பியதிலிருந்து (நீங்க மட்டும்தானா!) ரம்யாவின் சாக்லெட்டை சோம் பத்திரப்படுத்தி வைத்திருப்பது வரை சில ‘புதுப்புது அர்த்தங்கள்’ காட்சிகள் ஓடிக்கொண்டிருந்தன. இந்த சாக்லேட்டுக்கான அக்கப்போர் ஒவ்வொரு சீசனிலும் இருக்கிறதே! சாக்ஷி, கவின், லாஸ்லியா சாக்லேட் சீக்ரெட்ஸ் ஞாபகம் இருக்கா மக்களே? (எப்படி மறக்க முடியும்!). ஆனாலும், இந்த சோம் – ரம்யா உருட்டு புதுசா இருக்கு! பாலாவை சோம் ஓவர்டேக் பண்ணிடுவாறுபோல. ஹ்ம்ம்.. நடக்கட்டும் நடக்கட்டும்.

அகம் டிவி வழியாகக் கமல் நுழைந்ததுமே, ‘சுமங்கலி’ பிரச்சனையைக் கையில் எடுத்து மங்களகரமாக ஆரம்பித்தார். அனிதா ‘தனக்குக் கிடைத்த மேடையைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டாரா இல்லையா’ என்ற விவாதம் கடந்த வாரம் தமிழ்நாடு முழுவதுமே பரவியது. அதற்கான முற்றுப்புள்ளியை இல்லை இல்லை தொடக்கப்புள்ளியை இந்த எபிசோடில் வைத்தார் கமல்!
என்னதான் சொல்லுங்க, அனிதா செய்ததில் தவறில்லை என்று கமல் கூறியதும், எங்கே இரண்டு மணிநேரம் இதைப் பற்றி மறுபடியும் அனிதா பேசத் தொடங்கிவிடுவாரோ என்ற அச்சம் எழாமலில்லை (தேங்க் காட்… அப்படி எதுவும் நடக்கவில்லை). ‘தெய்வசெஞ்சு அழாதீங்க. பார்க்க முடியல’ என்று நேரடியாக மட்டுமே கமல் அனிதாவிடம் சொல்லவில்லை. இனிமேலாவது அனிதா அழாமல் புலம்பல் இருக்கிறாரா என்பதைப் பார்க்கலாம் (கொஞ்சம் கஷ்டம்தானோ!) தலைக்கனம் ஏறாமல் இருந்தால் சரி. ஆனாலும், பாலா மட்டுமா அனிதாவுக்கு சப்போர்ட் பண்ணது? சுரேஷிடம் சென்று அவ்வளவு தூரம் பேசிய ரியோ, நாள் முழுவதும் கூடவே பயணித்த ஆரி இவர்களெல்லாம் அவுட்டா! (கேமரா கான்ஷியஸ் கேமரா கான்ஷியஸ்!)

வாரம் முழுக்க ஏன் சீசன் ஆரம்பித்ததிலிருந்து வாய் கிழியப் பேசிய சுரேஷ் மற்றும் அர்ச்சனாவின் முகங்கள் வாடியதைக் காணமுடிந்தது. எவ்வளவுதான் கமல் அறிவுரைகள் சொல்லியிருந்தாலும், தன் நிலைப்பாட்டிலிருந்து அர்ச்சனா பின்வாங்கியதாகத் தெரியவில்லை. ‘ஷார்ட் பிரேக்’ என்று கமல் கூறியதும், அப்போது வரை அங்கு நடந்த சம்பவத்துக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாததுபோல் ‘யாருக்கு ‘டீ’ வேண்டும்?’ என்று கேட்டாரேத் தவிர அனிதாவிடம் பேசுவதற்கு முன்வரவில்லை அர்ச்சனா. முழுநேர ‘கேர் டேக்கராகவே’ அர்ச்சனா மாறிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். சுரேஷ் தாத்தாவும் ஏதேதோ சொல்லிச் சமாளிக்கமுடியாமல் திணறிக்கொண்டிருக்க, ‘உங்க கேரக்டர் அப்படி இருந்தது அதனால்தானே அப்படிச் சொன்னீங்க’ என்று கமல் எடுத்துக்கொடுக்க அந்த பாயின்ட்டை இறுக்கமாகப் பற்றிக்கொண்டார் இந்த சீசன் தாத்தா (பார்த்து தாத்தா.. விழுந்துடப்போறீங்க!).
‘அன்பு எப்படிக் கிடைத்தாலும் பிடித்துக்கொள்ளுங்கள், அது ஸ்ட்ராடஜியாக இருந்தாலும் சரி’ என்று பாலவுக்கு கமல் கூறிய அட்வைஸ், அப்படியே தவறாகப் புரிந்துகொண்டு வீட்டைவிட்டு வெளியேறவேண்டும் என்கிற அளவிற்கு யோசிக்க தொடங்கிவிட்டார் அர்ச்சனா. (அதுக்குள்ள போனா எப்படி! இப்பதானே கேமே ஸ்டார்ட் ஆகியிருக்கு!) நியாயப்படி பார்த்தா, பாலாவுக்கு தானே இந்த இடத்தில் சந்தேகம் வரணும்? நல்லா விளையாடுறீங்கப்பா ஒரு ஆட்டம்! நேர்படப் பேசுவதற்கும், கர்வத்திற்கும் நூலளவுதான் வித்தியாசம் என்று பாலாவுக்கு கமல் கூறிய அறிவுரை, அவருக்குப் புரிந்திருக்குமா? டவுட்டுதான்!

அர்ச்சனா வந்ததிலிருந்து ரியோ, நிஷாவின் அட்ராசிட்டிகள் சற்று குறைந்திருக்கிறது. தீயாக எரியும் என்று எதிர்பார்த்த பாலா-அர்ச்சனா சண்டை எப்படிடா அணைந்தது என்ற ஆச்சரியத்தில் ரியோ இன்னும் உறைந்துபோயிருக்கிறார் போல. ‘உங்களுக்காக நான் சப்போர்ட் பண்ணேனே. என்னடா நடக்குது இங்க’ ரேஞ்சில் இருந்தது ரியோவின் ரியாக்ஷன். (சாச்சிபுட்டாங்களா ப்ரோ?)
இந்த சீசன் போட்டியாளர்களுக்கு விளையாட்டின் ‘ரூல்ஸ்’ புரிந்துக்கொகவதில் ஏராளமான சிக்கல். அது ஏன் என்று நமக்கும் புரியவில்லை. இவர்கள் விளையாடிய ஒரு போட்டிகூட சரியானதாக இல்லை. போட்டிதான் அப்படியென்றால், அவர்கள் யாரையெல்லாம் நாமினேட் செய்கிறார்கள் என்பது கூடவா தெரியாது? சாப்பிடுவது, தூங்குவது, விளையாடுவது என நகர்ந்துகொண்டிருக்கும் நாள்களுக்கு மத்தியில் தாங்கள் யாரை நாமினேட் செய்கிறார்கள், யாருக்கு சப்போர்ட் செய்கிறார்கள் என்பதிலும் குழப்பமா? (என்னவென்று சொல்வதம்மா!) கமல் கேட்கும் கேள்வி தெளிவாகவே இருந்தது. ஆனால், அதில்தான் எத்தனை குழப்பம்! எத்தனை சலசலப்பு. பாவம் கமலே கன்ஃபியூஸ் ஆகிட்டாரு!

வீட்டில் நடப்பதைத் தெளிவாக எடுத்துக்கூறிய ஆரிக்கு பாராட்டு மழை. ஆனால், இதைக் கேட்ட மற்றவர்களுக்குத்தான் உடைந்தது மூக்கு. இனி க்ரூப்பிஸம் பற்றி வாயைத் திறப்பார்கள்! சொல்ல முடியாது! இன்றைக்கு வேல்முருகனின் எவிக்ஷன். சுச்சியின் என்ட்ரி. பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று! இனிமேலாவது கன்டென்ட் கிடைக்குமா பிக் பாஸ்?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”