Bigg Boss 4 Tamil Review: பிக் பாஸ் ஷோவா அல்லது கமலின் பிறந்தநாள் கொண்டாட்டமா என்ற சந்தேகத்தினுடனே நிறைவடைந்தது நேற்றைய பிக் பாஸ் எபிசோட். ப்ரோமோக்களையெல்லாம் பார்த்து சில்லறையைச் சிதறிக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. இதெல்லாம் பாவம் பிக் பாஸ். உங்களுக்கு ட்ரீட் கொடுக்கலைனு இப்படி எங்களுக்கு கன்டென்ட் கொடுக்காம போயிட்டிங்களே!
கமல் ஹாசனுக்கு கேக் சர்ப்ரைஸ் கொடுத்துட்டு, எங்களுக்கு அல்வா சர்ப்ரைஸா? பாலாவுக்கு இன்னிக்கு ரெட் கார்டு கொடுத்தார்களா இல்லையா? சம்யுக்தா ஃபீல் பண்ணுனாங்களா இல்லையா? சுசியின் தீர்ப்பைப் பற்றிப் பேசுவாரா மாட்டாரா? போன்ற பல்வேறு விதமான காரசாரமான கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த மக்களுக்கு, கோபமும் குழப்பமும்தான் இருந்தது.
Bigg Boss 4 Tamil Vijay Tv Bala
ஹவுஸ்மேட்ஸ்களின் பாடல், எஸ்.பி.பியின் பதிவுசெய்யப்பட்ட வாழ்த்து, ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட தன் உறவினர்களின் வீடியோ அழைப்பு, சக பிக் பாஸ் தொகுப்பாளர்களான நாகார்ஜுனா மற்றும் மோகன்லால் இருவருடைய வாழ்த்து மடல் என கமல்ஹாசனின் பிறந்தநாள் கொண்டாட்டம் மிகச் சிறப்பாகவே பிக் பாஸ் ஷோவில் கொண்டாடப்பட்டது.
இதற்கிடையில், 'கன்னித்தீவுப் பொண்ணா..' பாடலோடு விடிந்த முப்பத்தி நான்காம் நாளின் ஐந்து நிமிட காணொளி ஒளிபரப்பானது. அதிலும் பாதி நேரம், கமல் ஹாசனுக்காக வீட்டில் இருப்பவர்கள் எப்படி கேக்கை டெகரேட் செய்கிறார்கள் என்பத்தைதான் காட்டினார்கள். மீதமுள்ள நேரத்தில் ஆரி, கேபி, ஷிவானிக்குள் ஏதோ புரியாத புதிர் ஓடியது. என்ன பஞ்சாயத்தாக இருக்கும் என்று யோசிப்பதற்குள், அகம் டிவி வழியே நுழைந்துவிட்டார் கமல்.
ரைட்டு.. பாலாவை வேட்டையாடப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்க, சனம் ஷெட்டி எழுதிய கடிதத்தைப் பற்றிய பேச்சையே எடுக்கவில்லை கமல். வெறும் 'தறுதலை' பிரச்சினையை மட்டுமே பேசி ஆட்டத்தைக் கலைத்துவிட்டனர். இதெல்லாம் சரியே இல்லை பிக் பாஸ்! கடந்த சீசன்களில் மஹத், சரவணன் ஆகியவர்களை வீட்டைவிட்டு வெளியேற்றிய காரணத்தைவிடப் பாலா மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு குறைந்ததல்ல. ஆனால், இப்படி ஒருதலை பட்சமாக நடந்துகொள்வது சரியான கேம் பிளானே இல்லை. (அதுசரி கன்டென்ட் கொடுக்கும் ஒருவரையும் அனுப்பிவிட்டால் என்ன செய்வது!)
Bigg Boss 4 Tamil Vijay Tv Kamal Hasan Day 32 review
தான் ஒவ்வொரு திரைப்படத்திலும் கமல் ஹாசனின் சாயலைப் பதித்திருக்கும் கமலின் தீவிர ரசிகரான இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கமல் வைத்து இயக்கம் தன்னுடைய அடுத்த படைப்பின் பெயரை வெளியிட்டார். நேற்றைய பிக் பாஸ் எபிசோடில் உருப்படியாக இருந்த இரண்டு நிமிடங்கள் அதுமட்டும்தான் என்கிற அளவிற்கு இருந்தது.
அதனைத் தொடர்ந்து சுமார் ஐந்து நிமிடங்களுக்கு தன் பிரச்சாரத்தை சின்சியராக செய்துவிட்டு, இன்று யாரும் காப்பாற்றப்படவில்லை என்கிற 'மிகப் பெரிய' ட்விஸ்ட் வைத்துவிட்டு பிறந்தநாள் கொண்டாடச் சென்றுவிட்டார். சரி அதன் பிறகாவது வீட்டிற்குள் நடப்பதைப் பார்க்கலாம் என்று காத்திருந்தால், நிகழ்ச்சி நிறைவடைந்துவிட்டது. நன்றி பிக் பாஸ் நன்றி! இன்றைக்காவது ரெட் கார்டு விஷயம் மற்றும் சுச்சியின் ஒருதலைப்பட்ச (அ)நீதி பற்றி விவாதிக்கிறார்களா என்று பார்ப்போம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"