scorecardresearch

பாலாவைவிட ஆஜீத் எவ்வளவோ பெட்டர் – பிக் பாஸ் விமர்சனம்!

Bigg Boss 4 Tamil Vijay Tv இன்னும் இரண்டே வாரங்கள் உள்ள நிலையில் வீட்டிற்குள் சுவாரசியத்தைவிட சண்டைகளே அதிகம் இருக்கின்றன.

Bigg Boss 4 Tamil Vijay Tv Kamal Hassan Aajeeth Aari Bala Ramya review
Bigg Boss 4 Tamil Vijay Tv Kamal Hassan Aajeeth

Bigg Boss 4 Tamil review : ‘ஒருநாள் ஸ்ட்ரெஸ் இல்லாமல் சந்தோஷமா இருந்தீகளா? போதும் போதும். மறுபடியும் வைப்ரேட் மோடுக்கு போங்க’ என்று தள்ளிவிட்டார் பிக் பாஸ். ப்ரோமோவை பார்த்ததில் இருந்து கமலை வரித்தெடுக்காத ஆட்களே இல்லை. ஆரியை டார்கெட் செய்து கமல் பேசியது, அப்படியே ரம்யாவின் விஷசிரிப்பை காண்பித்தது எனப் புகுந்து விளையாடினார் எடிட்டர். ‘மறுபடியும் முதல்ல இருந்தா’ என்று தோன்றாமலில்லை.

அகம் டிவி வழியே சென்ற கமல், ‘கன்ஃபெஷன்’ அறைக்குச் சென்று தாங்கள் ஏன் ‘பிக் பாஸ் கப்’ பெற தகுதியானவர்கள் என்று பிரச்சாரம் செய்யச்சொல்லி போட்டியாளர்களை அறிவுறுத்தினார். பிரச்சாரம் எப்போதும் வெளிப்படையாகத்தானே பண்ணுவாங்க! ஏன் கன்ஃபெஷன் அறைக்குச் சென்று ரகசியமாக வோட் கேட்கவேண்டும்? உள்ளே சென்றவர்களில் ஷிவானியின் பிரச்சார பாயின்ட்டுகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஷிவானியை ஒப்பிடுகையில் உண்மையில் ஆஜித் எந்த நிலையிலும் பொய் சொன்னதில்லை. அவருடைய பிரச்சார வார்த்தைகள் சரியானதாகவே இருந்தன. ஆனால் என்ன பயன்? வெளியேற்றப்பட்டுவிட்டாரே!

Bigg Boss 4 Tamil Vijay Tv Kamal Hassan Aajeeth Aari Bala Ramya review
Bigg Boss 4 Tamil Vijay Tv Aari

பிரச்சாரத்தின்போது உளறக்கூடாது என்கிற ஒரு முக்கிய விஷயத்தை முன்வைத்தார் கமல். ஆனால், உள்ளே சென்றவர்களில் ரியோ என்ன சொன்னார் என்பது புரிந்ததா மக்களே! அவர் அவராகவே இருந்தாராம்! (இதெல்லாம் நம்புற மாதியா இருக்கு?). அவருடைய போலியான சிரிப்பு நேற்றைய எபிஸோடிலும் தெரிந்தது. பாலாதான் முதலில் உள்ளே சென்றார். போனதும் ‘கடலை போட்டவங்கதான் வின்னர் ஆகியிருக்காங்க’ என்று சொன்னதற்காக மன்னிப்பு கேட்டுவிட்டு தன் பிரச்சாரத்தைத் தொடங்கினார். அட! மன்னிப்புனா மறந்துடுவாரு பாலா! நாம மறக்காம இருப்போம்!

இந்த வாரம் ஹாட் டாப்பிக்கில் இருந்த ஆரி மற்றும் பாலாவை விட்டுவிட்டு, ரம்யாவிற்கு ‘காலர் ஆஃப் தி வீக்’ அழைப்பு வந்தது. அப்போது ரம்யாவின் முகத்தில் படர்ந்த பயத்தை பார்க்கணும்! இவ்வளவு நாள் தான்தான் டைட்டில் வின்னர் என சுமந்துகொண்டிருந்த நம்பிக்கை உடைந்து செய்வதறியாது திகைத்த முகம் நன்கு வெளிப்பட்டது. அதிலும், ஆரி பெயரை உபயோகித்துக் கேட்ட கேள்வி சிறிது நேரம் கழித்து மறந்தே போய்விட்டதுபோல. ஷிவானி முதல் ரியோ வரை அனைவர்க்கும் காலரின் கேள்வி மற்றும் ஆரியை எடுத்துக்காட்டாகக் கூறியது நினைவிருக்கும் போது, ரம்யாவிற்கு மறந்திருக்குமா என்ன? ‘ஆரியை போய் எடுத்துக்காட்டாகச் சொல்லிவிட்டார்கள்’ என்கிற மனக்குமுறல் வெளிப்டையாகக் கேட்டது ரம்யா!

Bigg Boss 4 Tamil Vijay Tv Kamal Hassan Aajeeth Aari Bala Ramya review
Bigg Boss 4 Tamil Vijay Tv Aajeeth

ஆஜீத் எவிக்ட்டாகி வீட்டை விட்டு வெளியேறும்போதும், ‘பார்த்து விளையாடுங்க ப்ரோ’ என்று பாலாவைப் பார்த்துச் சொன்னது ஆஜீத் பாலாவைவிட எவ்வளவு மெச்சூர்டு என்பது வெளிப்பட்டது. இதை வீட்டிற்குள் வந்த நாளிலிருந்து செய்திருக்கலாமே ஆஜித்து. இதை எல்லாவற்றையும்விட மிக முக்கியமான விஷயம், ஷிவானி பாலாவிடம் ஆரியை பற்றி எடுத்துக் கூறிய விதம்தான். ‘இப்போதாவது ஷிவானிக்கு புரிந்ததே’ என்கிற எண்ணம் தோன்றினாலும், பாலா அதனைப் புரிந்துகொள்ள முயற்சிகூட செய்யவில்லை. இன்னும் இரண்டே வாரங்கள் உள்ள நிலையில் வீட்டிற்குள் சுவாரசியத்தைவிட சண்டைகளே அதிகம் இருக்கின்றன. இன்று இறுதி நாமினேஷன். இந்த வாரம் யார் வீட்டைவிட்டு வெளியேறுவார்கள் என்று நினைக்கிறீர்கள்?

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Bigg boss 4 tamil vijay tv kamal hassan aajeeth aari bala ramya review