பாலாவுக்கான எதிர்பார்ப்பு அல்ல.. கமலுக்கான அரசியல் பரீட்சை!

Bigg Boss Review Day 90 Tamil பாலா விஷயத்தில் எதிர்பார்ப்பது ‘ரெட் கார்டு’ மட்டுமே. அரசியலிலும் இதுபோன்ற நிலைப்பாட்டைத்தான் எடுப்பாரா என்கிற கேள்விக்கு என்ன பதிலளிக்கப்போகிறார் கமல்?

Bigg Boss 4 Tamil Vijay Tv Kamal Hassan Aari Bala Ramya review Day 90
Bigg Boss 4 Tamil Vijay Tv Bala

Bigg Boss Tamil Vijaya : இதற்குமுன் ஒளிபரப்பான சீசன்களில் கமலின் கண்டிக்கும் விதமே வேற மாதிரி இருந்தது. ஆனால், இந்த சீசனில் ஏன் போட்டியாளர்களிடம் பணிந்து போகிறார்? அதிலும் பாலாவின் வன்முறைகளுக்கு அழுத்தமான எச்சரிக்கையை ஏன் முன்வைக்க மறுக்கிறார் உள்ளிட்ட கேள்விகள் மக்கள் மனதில் எழாமலில்லை. இந்த அத்தனை கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் விதமாகவே அமைந்தது நேற்றைய எபிசோட். மற்ற ஹவுஸ்மேட்ஸ்கான வார்னிங்கைவிட நேற்றைய எபிசோட் நிச்சயம் அரசியல் ப்ரவேசத்தின் கமலுக்கான பலப்பரீட்சை என்றே சொல்லலாம். தன் அரசியல் நிலைப்பாட்டைத் தொடர்ந்து பிக் பாஸ் மேடையில் தெளித்து வந்த உலக நாயகனின் செயல்பாடு அவ்வளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது என்று சொன்னாலும் அது மிகையாகாது.

‘இளமை இதோ இதோ..’ பாடல் இல்லாமல் எந்த புது வருடமும் தமிழ்நாட்டு மக்களுக்கு இல்லை. அந்த வரிசையில் பிக் பாஸ் நிகழ்ச்சி மட்டும் விதிவிலக்கா என்ன! புதிய ஆண்டில் இந்த குதூகலமான பாடலோடு தொடங்கிய எபிசோட் புது வருட இரவு, பிக் பாஸ் வீட்டில் ஆரியை கார்னர் செய்த விதத்தை ஒளிபரப்பினார்கள். பாலாவுக்கு ஒட்டு கேக்குறதே வேலையா போச்சு! ஆரி ரம்யாவின் உரையாடல்களை ஒட்டு கேட்டுவிட்டு ரியோவின் லவ் பெட் குழுவில் போட்டுக்கொடுத்து, அடுத்த நொடி சோம், ரியோ என அனைவரும் ஆரி இருக்கும் இடத்திற்கு ஆஜராகினர். பாலா ஒட்டுக்கேட்பதை யாரும் அடிக்கோடிட்டுக் காட்ட தைரியமில்லை ஆனால், அனிதா மற்றும் அர்ச்சனா உரையாடல்களை ஆரி கேட்டது மட்டும் தவறு என்று அனைவரும் கண்டித்தது எந்த வகையில் நியாயம்?

Bigg Boss 4 Tamil Vijay Tv Ramya Rio Som family meet Aari Gaby review Day 87
Bigg Boss 4 Tamil Vijay Tv Aari Bala

எந்நேரமும் பாலாவிற்கு ஆதரவாக நிற்கும் ரம்யா, ஒரு பக்கமாகப் பேசுகிறார் என்று ஆரி கூறுவதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. மேலும், ஆரி சொல்ல வருகிற பாயின்ட்ஸை புரிந்துகொள்ளாமல் முன்முடிவு எடுத்துக்கொண்டு உரையாடியது நம் பொறுமையைப் பதம் பார்த்துவிட்டது. ஆனால், விஷத்தன்மை சிரிப்பு கமல் எபிசோடில் காணாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது. (என்னவா இருக்கும்!) மேலும், அன்றைய இரவின் சண்டையை சாரி சாரி வாக்குவாதத்தைத் தொடங்கியது பாலதானே தவிர ஆரி அல்ல. ஷிவானி பற்றிப் பேசவேண்டாம் என்று கூறியும், வம்படியாக நின்ற பாலா, வாக்குவாதத்தை நீட்டித்து வன்முறையையும் கையில் எடுத்தார். இதுபோன்ற செயல் உண்மையில் பல நெகட்டிவிட்டியை நாட்டில் உருவாக்கி உள்ளது என்பதைக் கடந்த இரண்டு தினங்களாக சமூக வலைத்தளங்களில் மக்களின் கருத்து பதிவுகளைப் பார்க்கும்போது உணரமுடிகிறது.

தன் மீது தவறே இல்லையென்றாலும், ஷிவானியிடம் ஆரி மன்னிப்பு கேட்ட விதம்தான் மக்கள் பார்த்துக் கற்றுக்கொள்ளவேண்டிய பண்பு. பாலாவிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளவேண்டும் என்று நினைக்கிறார்கள். 2k கிட்ஸ்களின் பெரும்பான்மையானவர்களின் எடுத்துக்காட்டாக இருக்கிறார் என்பதைத் தவிர பாலாவைப் பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

Bigg Boss 4 Tamil Vijay Tv Kamal Hassan Aari Bala Ramya review Day 90
Bigg Boss 4 Tamil Vijay Tv Aari

ஷிவானி அம்மாவுக்கு வீடியோ அழைப்பு விடுத்து, ஷிவானியின் அம்மாவுக்கே அட்வைஸ் கொடுத்தது நம்மை கன்வின்ஸ் செய்யும் விதமாக இல்லை. ‘நாலு மணி ஷிவானியை விட்டுட கூடாது’ என்கிற எண்ணத்தில் சேனல் செய்த சதி போலவே இருந்தது.  சின்ன பொண்ணு என்ன பண்ணுவாங்க பாவம்! அடுத்ததாக ஹவுஸ்மேட்ஸ் அனைவரிடத்திலும் ஆரிக்கு பதிலாக கமல் பேசிய விதம் நன்றாக இருந்தாலும், ஃபோர்ஸ் பத்தலை. பாலா பேசிய விதத்திற்கும், மைக்கை உடைத்ததற்கும் கமலுடைய ரியாக்ஷன் மென்மையானதாகவே இருந்தது. இதற்குமுன் நடந்த சீசன்களில் இதுபோன்றெல்லாம் கமல் நடந்துகொள்ளவேயில்லை. வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்றிருந்தார். ஒருவேளை பிக் பாஸ் ஷோ பார்ப்பதற்குக் கமலுக்கு நேரமில்லாமல் போனதோ என்னவோ!

‘கனிவாகப் பேசினால் சிறந்தது’ என்று ஆரிக்கு அட்வைஸ் சொல்லும் அளவிற்கு ஆரி வன்முறையை கையில் எடுக்கவில்லை. ஓவியா, பரணி வரிசையில் ஆரி எந்தவித தவறான முடிவும் எடுக்காமல், தன்னிச்சையாக நின்று தன்னம்பிக்கை இழக்காமல் அனைவர்க்கும் முன்மாதிரியாக விளங்குகிறார். அதற்கு அவருக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்தான் தேவை. ஊக்கப்படுத்தவில்லை என்றாலும், கீழே இறக்கிவிடாமல் இருந்திருக்கலாம்.

Bigg Boss 4 Tamil Vijay Tv Aajeeth Aari Bala Ramya Gaby review Day 85
Bigg Boss 4 Tamil Vijay Tv Ramya Pandian

எந்த அளவிற்கு ரியோ பயந்துபோயிருக்கிறார் என்பது அவருடைய பொய் சிரிப்பிலேயே தெரிந்தது. ஆஜீத்தின் வெளிப்பாடு மற்றும் தெளிவான பார்வை நேற்றைய எபிசோடில் வெளிப்பட்டது. ஆனால் என்ன பயன்? இதை முன்பிலிருந்தே செய்திருக்கலாம். கேபி மற்றும் சோமின் நிலைப்பாடுகள் சரியானதாகவே இருந்தன.

தவறான முன்னுதாரணமாக இருக்கும் பாலாவை ஏன் பிக் பாஸ் குழு இன்னமும் ஆதரித்துக்கொண்டிருக்கிறது என்பது தெரியவில்லை. கமல் எபிசோடில் திட்டு வாங்குவதும், பிறகு சம்பந்தப்பட்டவரிடம் சாரி கேட்பதும், மறுபடி திங்கள் முதல் வியாழன் வரை சண்டைபோட்டுக்கொண்டு தரக்குறைவாக நடப்பதும்தான் பாலாவின் வேலையாக இருக்கிறது. ஒட்டுமொத்த மக்களும் பாலா விஷயத்தில் எதிர்பார்ப்பது ‘ரெட் கார்டு’ மட்டுமே. அரசியலிலும் இதுபோன்ற நிலைப்பாட்டைத்தான் எடுப்பாரா என்கிற கேள்விக்கு என்ன பதிலளிக்கப்போகிறார் கமல்?

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss 4 tamil vijay tv kamal hassan aari bala ramya review day 90

Next Story
ஷிவானி டாபிக்கை விடுய்யா… ஆரி- பாலா மோதல்; பிக் பாஸ் ரணகளம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X