Bigg Boss 4 Tamil Review : இறுதி நாள்கள் நெருங்க நெருங்க அனைவரின் முகத்திலும் பிரகாச ஒளி வீசுகிறது. கப் கிடைக்கப்போகிறது என்கிற திகைப்பில் போட்டியாளர்களும், சுவாரசியம் குறைந்த எபிஸோட்ஸ்களிலிருந்து விடுதலை என மக்களும் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.வழக்கமான கமலின் அட்வைஸோடு ஆரம்பமான நேற்றைய எபிசோட், ஷிவானியின் வெளியேற்றத்தில் நிறைவடைந்தது. ஃபைனல்ஸுக்கு போகமுடியவில்லையே என்கிற ஏக்கம் ஷிவானியிடமிருந்து நன்கு வெளிப்பட்டது. வெளியேறும் நேரத்தில் சிங்கப்பெண் அளவிற்கு டாஸ்க் மேற்கொண்டு என்ன பயன்? யோசித்திருந்திருக்கலாம்!
'காலர் ஆஃப் தி வீக்' பகுதியோடு ஆரம்பமானது நேற்றைய எபிசோட். இரண்டாவது முறையாக ஆரிக்கு அழைப்பு. வழக்கம்போல ஆரியின் தரத்தை குறைக்கவேண்டும் என்பதுபோல கேள்வி. ஆனா, ஆரி யாரு? காலருக்கே டஃப் கொடுத்துவிட்டார். 'இனி யாராச்சு கால் பண்ணுவீங்க?' என்பதுபோல இருந்தது ஆரியின் பதில். ஆரி நிச்சயம் அனைவரின் அட்வைஸையும் ஏற்றுக்கொள்வார், ஆனால் அதை ஒத்துக்கொள்ள வைக்கத்தான் நேரமாகும். இந்த நேக்கு தெரிந்து ஆரியிடம் விளையாடியிருந்தால் நிச்சயம் மேலும் சுவாரசியமாக இருந்திருக்கும்.
Bigg Boss 4 Tamil Vijay Tv Bala
பாலா மூன்றாவது ஃபைனலிஸ்ட் என்று சொன்னதும், பாலா எமோஷனல் ஆனதைவிட ஆரி குதூகலமானதுதான் ஹயிலைட்டாக பதிவானது. இந்த நேரத்திலும் பாலாவைவிட ஆரியே ஸ்கோர் செய்தார். 'எங்கே தன்னிடம் இருக்கும் நல்ல குணங்கள் தான் செய்த தவறுகளால் மறைந்துவிடுமோ' என்கிற பயங்கரமான பயம் பாலாவின் அழுகையில் அப்பட்டமாக வெளிப்பட்டது. அதை ஒத்துக்கவும் செய்தார். வாழ்த்துகள் பாலா!
அடுத்ததாக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தபிறகு தங்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் பற்றிக் கேட்டார் கமல். அதற்குத் தாறுமாறான பதில்கள் வந்தன. இதுநாள்வரை ஒவ்வொருவரைப் பற்றியும் எதுவெல்லாம் நம் கண்களுக்கு வெட்டவெளிச்சமாக நெகட்டிவ்வாகத் தெரிந்ததோ, அதை அறிந்து திருத்திக்கொள்கிறோம் என்று அனைவரும் ஒரேபோல் ஒத்துக்கொண்டனர். இப்படி அனைவரும் நல்லவராக மாறிவிட்டால் அது பிக் பாஸ் வீடு போல இருக்காதே! இறுதிவரை இந்த சீசனில் சுவாரசிய விளையாட்டு என்பது எண்ணுகிற அளவிற்குத்தான் இருந்தது. என்னமா இப்படி பண்ணுறீங்களேமா!
பாலவாத் தொடர்ந்து நான்காவது ஃபைனலிஸ்ட்டாக ரியோ முன்னேற, இறுதியில் மூன்று சிங்க பெண்களும் எவிக்ஷன் கேட்டகிரியில் அமர்ந்திருந்தனர். மூவரில் யாரும் எவிக்ட் ஆகவேண்டாம் என்கிற எண்ணமே வீட்டிற்குள் இருக்கும் அனைத்து ஆண்களுக்கும் தோன்றியது. ஆனால், ஷிவானி வெளியேற்றப்பட பாலாவின் முகம் வாடிப்போனது. நான் ஃபைனல்ஸ போனதுக்கு சந்தோசப்படுவதா அல்லது ஷிவானி போனதுக்கு வருத்தப்படுவதா என்கிற குழப்பம் பாலாவிடம் காணப்பட்டது. வீட்டில் இருக்கும் அனைவரும் தாங்கள் வளர்த்த ரோஜா பூவை ஷிவானிக்கு அன்பளித்தனர். ஃபைனல்ஸ வரை போகமுடியவில்லையே என்கிற ஏக்கத்தோடு வீட்டைவிட்டு வெளியேறினார் ஷிவானி.
இனி ஒரு வாரம்தான் இருக்கிறது ஆனால், ஆறு பேர் வீட்டினுள் இருக்கின்றனர். இந்த வார நடுவில் ஒருவர் எவிக்ட் செய்யப்படலாம். அது ரம்யாவா கேபியா? உங்கள் ஊகம் யார் மக்களே?
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"