Bigg Boss 4 Tamil Review : நூறு நாள் அட்ராசிட்டிகள் ஒரு வழியாக நிறைவுப் பகுதிக்கு வந்துள்ளது. ப்ப்பா.. மற்ற சீசன்களைவிட இந்த சீசன் எல்லோரையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியதுதான் மிச்சம். 'கன்டென்ட் எங்கடா' என்று காத்திருந்து காத்திருந்து ஃபைனல்ஸ் வந்ததுதான் மிச்சம். இன்னும் கன்டென்ட் இல்லாமல் தவிக்கிறது சீசன் 4. வீட்டைவிட்டு வெளியேறியவர்களின் என்ட்ரி ஏதாவது மாற்றத்தை உருவாக்கும் என்று நினைத்தால் அதற்கும் வழியில்லை. சரி இனி புலம்பி என்னாவாகப் போகிறது. சரி வாங்க நேற்றைய நாளின் பகிர்வுகளைப் பார்க்கலாம்.
கேபியின் குரல் சோமிற்கு ஒலித்துக்கொண்டே இருக்கிறது போல. சுட்டிக் குழந்தையாய் வலம்வந்தவர் தற்போது இல்லை என்கிற ஏக்கத்தில் ரியோ மற்றும் சோம் புலம்பிக்கொண்டிருந்தனர். இன்னும் ரம்யா உள்ளே இருப்பதுதான் பலராலும் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. வழக்கம்போல ஆரி கேமரா முன்பு நின்று தான் கடந்து வந்த பாதைகளைப் பகிர்ந்துகொண்டார். பாலா மட்டும் சும்மாவா? அவரும் தன்னுடைய பங்கிற்கு கேமராவிடம் தன் நிறை குறைகளைக் கூறிக்கொண்டிருந்தார்.
பாலா சோமிற்கு கிஃப்ட் கொடுத்ததெல்லாம் மாஸ் மொமென்ட். இதனைத் தொடர்ந்து ராணுவ தினம், திருவள்ளுவர் தினம் மற்றும் மாட்டு பொங்கலையொட்டி ஒவ்வொருவரும் தங்களின் பார்வைகளை முன்வைத்தனர். இந்த பகுதியில் அனைவரின் புரிதலும் நன்றாகவே இருந்தது. இதனைத் தொடர்ந்து வழக்கம்போல அகம் டிவி வழியே சென்ற கமல், வீட்டைவிட்டுப் போனவர்களின் என்ட்ரி பற்றியும், வீட்டிலிருக்கும் போட்டியாளர்களைப் பற்றியும் கேட்டுக்கொண்டிருந்தார். நூறு நாள்கள் முழுவதும் இதே கன்டென்ட்தான். அதனாலேயே சலிப்பைத் தட்டியது. பாலா வேறு நல்ல பிள்ளையாக மாறிவிட்டார். அதனால் மிகவும் போர்தான் அடித்தது.
பிக் பாஸ் சீசன் 4-ன் இறுதி நாளான இன்று, யார் வெற்றிபெறுவார்கள் என்கிற எதிர்பார்ப்பைவிட, 'ஆரி வெற்றிபெறவில்லை என்றால் பிக் பாஸே பார்க்கமாட்டோம்' என்கிற கூச்சல்தான் அதிகமாக உள்ளது. இதுவே எதிர்பார்ப்பை மக்களிடத்தில் அதிகரிக்கச் செய்துள்ளது. இந்த முடிவை நோக்கி நகரும் இன்றைய தினத்தின் எபிசோட் ஆறு மணிநேரம் இருக்கப்போகிறது. என்னவாகப் போகிறோமோ! இன்று மாலை 6 மணி முதல் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி செய்திகளை உடனுக்குடன் பார்ப்போம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"