Bigg Boss 4 Tamil Review : இத்தனை நாள் மெளனமாக இருந்த ஷிவானி, பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் ஒரு வாரமே இருக்கும் பட்சத்தில் தன் முழு பலத்தையும் ஒரேயொரு போட்டியில் காட்டி, தன் ரசிகர்களைப் பெருமையடையச் செய்திருக்கிறார். உடல்வலிமை கொண்ட டாஸ்க் என்றால் அது ஆண்களுக்கு மட்டும்தான் என்கிற கோட்பாட்டைத் தவிடுபொடியாக்கியது ரம்யா மற்றும் ஷிவானியின் டெடிகேஷன். உடல்வலிமையை சோதித்த டாஸ்க்கில் கிட்டத்தட்ட ஐந்து மணிநேரம் வரை விளையாடிய ஷிவானி மற்றும் ரம்யாவிற்கு ஸ்பெஷல் பாராட்டுகள்.
என்னதான் அடித்து பிடித்து விளையாடினாலும், ஆரிக்கு என்றைக்குமே பாலா மீது சாஃப்ட் கார்னர் உண்டு. பாலாவுக்கும் ஒருவித அன்பு ஆரி மீது உண்டு. அதனை ரம்யா நேற்று, 'உங்க ரெண்டு பேரு சண்டைல நாங்க ஊறுகாயா' எனக்கூறி பட்டெனப் போட்டுடைத்தார். பாலா மற்றும் ஆரியின் உரையாடல் வீக்கெண்டுக்கான கண்துடைப்பு என்றாலும், அதில் எமோஷன்ஸும் கலந்துதான் இருந்தது. தன்னால்தான் பாலா டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் வெல்லமுடியவில்லையோ என்கிற பதற்றத்தில் ஆரி அழுதது அனைவரையும் நிச்சயம் கரையவைத்திருக்கும். அதற்கு பாலாவின் ஆறுதல் வார்த்தைகள் பாலாவுக்கான வாக்குகளே. இரண்டு பேரும் மாறி மாறி ஸ்கோர் செய்துகொண்டிருக்க, அமைதியாக ஃபைனல்ஸுக்கு முன்னேறிச் சென்றார் சோம்.
அகம் டிவி வழியே வீட்டிற்குள் வந்த கமல், டிக்கெட் டு ஃபினாலேவை தன்வசமாக்கிக்கொண்ட சோமின் அம்மாவைப் பேச வைத்தார். பிக் பாஸ் 4 சீசன் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த டாஸ்க்கில்தான் விதிமுறைகளை மீறாமல் பாலா விளையாடியுள்ளார் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்தார் கமல். எது எப்படியோ காப்பாற்றப்பட்டது மட்டுமில்லாமல் இரண்டாவது ஃபைனலிஸ்ட்டாக தேர்வு செய்யப்பட்டார் ஆரி. அதுமட்டுமின்றி மோதலில் ஆரம்பித்து காதலில் முடிந்த ஒரே ஜோடி பாலா ஆரி என்று சொன்னால் அது மிகையாகாது. சொல்லவாவேனும்!
என்னதான் ஃபைனலுக்குச் சென்ற முதல் போட்டியாளராக இருந்தாலும் கேபி சேவ் ஆகவில்லையே என்கிற வருத்தம் சோமிற்கு இருந்தது. இன்னும் ஒரே வாரத்தில் பிக் பாஸ் கப் யாருக்கு என்கிற விடை தெரிந்துகொள்ளும் தருணத்தில் பலரின் மனமாற்றத்தையும் பார்க்க முடிகிறது. ஹ்ம்ம்... சுவாரசியம் மட்டும் காணோம்!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"