Bigg Boss 4 Tamil Review : எவ்வளவுதான் தரம் தாழ்த்திப் பேசினாலும், தன் இயல்பை மாற்றிக்கொள்ளாமலும் மற்ற போட்டியாளர்கள் யாரும் தொட முடியாத இடத்திலும் வலுவாக இருக்கிறார் ஆரி. தங்களின் நிலைப்பாடுகளே தெரியாமல் புரியாமல் விளையாடிக்கொண்டிருப்பவர்களுக்கு, எப்படி தன் போட்டியாளரின் பலம், பலவீனம் பற்றித் தெரியும் என்பது கேள்விக்குறியே! ஆரியை எதிர்ப்பதனால் அதிகப்படியான வெறுப்புகளையே பரிசாகப் பெற்றுக்கொண்டிருக்கின்றனர் ஹவுஸ்மேட்ஸ். அதிலும் குறிப்பாக ரம்யா பாண்டியன்!
ரம்யாவிடம் ‘நீங்கதான் இந்த சீஸனின் டைட்டில் வின்னர்’ என்றுகூறி வீட்டிற்குள் அனுப்பியிருப்பார்கள் போல. எந்தவிதமான பதற்றமும் இல்லாமல், மக்களையும் சந்திக்காமல் வீட்டினுள் வலம்வந்துகொண்டே இருக்கிறார். என்னதான் சொல்லுங்க, ஆஜீத், ஷிவானி எல்லாம் வீட்டினுள் இருக்கும்போது கன்டென்ட் கொடுக்கும் அனிதா வெளியே சென்றதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. எமோஷனல் ஆகாமல் பாசிட்டிவாக விளையாடியிருந்தால் நிச்சயம் அனிதா ஃபைனலிஸ்ட் டிசர்விங் போட்டியாளர்தான்.

‘காலர் ஆஃப் தி வீக்’ அழைப்போடு ஆரம்பமான நேற்றை எபிசோட், அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட அனிதாவின் எவிக்ஷனோடு நிறைவடைந்தது. ஆரிதான் இந்த வாரம் வீட்டைவிட்டு வெளியேறுவார் என்று ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் கேல்குலேட் செய்து வைத்திருந்த நிலையில், முதலாவதாக ஆரி காப்பாற்றப்பட்டபோதே மற்ற ஹவுஸ்மேட்ஸ் முடிவு செய்துவிட்டனர் நிச்சயம் அனிதாதான் வெளியேறுவார் என்று! ஹ்ம்ம் அவ்வளவு கான்ஃபிடன்ஸ்!
தொடர்ந்து கேபி, ஷிவானி காப்பாற்றப்பட, இறுதியாக அனிதா மற்றும் ஆஜீத் ஆப்ஷனில் இருக்கையில், ஆஜீத்தின் மனக்குமுறல் சிரிப்பையே வரவைத்தது. குமுறும் ஆஜீத்திற்கு பாலா ஆறுதல் கூறிய விதம் வேற லெவல். மூன்றாவது வாரத்திலேயே எவிக்ட் ஆகியிருக்க வேண்டியது என்று கடந்த காலத்தை நினைவுகூர்ந்து மேலும் பயத்தையே ஆஜீத் மனதிற்குள் இறக்கினார். நிச்சயம் இந்த வாரம் ஆஜீத் வெளியேற்றப்படுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை! சோ கவலைப்படவேண்டாம் ஆஜீத்!

இதற்கிடையில் ‘ஜெயம்’ ரவியின் ‘பூமி’ பட டீசர் வெளியீடு. ‘நாங்கல்லாம் வேற மாதிரி பார்க்குறோம்’ என்று யாரை எப்படி சொன்னார் என்பதுதான் புரியவில்லை. இன்னும் கொஞ்சம் ஹெவியா பற்றவைத்திருக்கலாமோ! சரி விடுங்க! அடுத்தபடியாக அனிதாவின் எவிக்ஷன். இத்தனைநாள் முரண்டுபிடித்த கன்னுக்குட்டி, பிக் பாஸை மட்டும் விட்டுவிடுமா என்ன? உண்டியலை உடைக்க மாட்டேன் என்று பிக் பாஸிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுதான் அனிதாவின் ஃபைனல் டச் போல!
அனிதாவின் டிராவல் காணொளி உண்மையில் பார்ப்பதற்கு அவ்வளவு அழகு. திறமையான போட்டியாளர் ஆனால், வெளியேறியதற்குக் காரணமும் அனிதா மட்டுமே! இருப்பது இன்னும் இரண்டு வாரங்களே. ஆனால், அதிக எண்ணிக்கையில் போட்டியாளர்கள் உள்ளனர். ஆமா! இந்த ரியோ ரியோனு ஒரு மானஸ்தன் இருந்தாரே! கடந்த இரண்டு நாள்களாக ஆளையே காணோம்! என்னவா இருக்கும்? ஏன் என்பதற்கான விடை இன்று தெரிந்துவிடும். பார்ப்போம்! இனிமேலும் ஆட்டம் சூடுபிடிக்கும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”