Bigg Boss 4 Tamil review Day 55 : பாலவுடைய அட்ராசிட்டிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகின்றன. இந்த வார இறுதியில் நிச்சயம் ஒரு வழி பண்ணிடுவாரு என மக்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த வீக்கெண்ட் எபிசோட் நூறு சதவிகிதம் நம்மை ஏமாற்றிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். எபிசோடின் முடிவில் என்னைய்யா சொல்ல வரீங்க? என்ற கேள்வி எழாமலில்லை. அவ்வளவு கன்ஃபியூஷன். கேபியை தவிர பாலாவின் தவறுகளை நேருக்கு நேர் முன்வைப்பவர்கள் வீட்டில் யாருமில்லையா!
ஆரியும் ரமேஷும் ரம்யா பாண்டியனைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் காட்சியோடு ஆரம்பமான நேற்றைய எபிசோடில் கமல் ஹாசனின் அரசியல் பிரச்சாரம் குறைந்தே காணப்பட்டது. 'ஹேண்ட்பேகா நானிருந்தா..' பாடலோடு ஆரம்பமான ஐம்பத்தி ஐந்தாம் நாள் நம் அனைவரின் எதிர்பார்ப்பை தவிடுப்பொடியாகியது. 'எல்லாத்துக்கும் மொத்தமா சேர்த்து வெச்சி ஆரி, கமல் சார் முன்னாடி கொட்டப்போறாரு' என்று கூறிய ரம்யா பாண்டியன், நேற்று இருக்கிற இடம் தெரியாமல் அமர்ந்திருந்தார்.
Bigg Boss 4 Tamil Vijay Tv Ramya Gaby
நிகழ்ச்சி முதலே டாப்புல் கார்டு டிஸ்கஷனில் நகர்ந்தது. அவரவர்களுடைய கருத்துக்களைப் பதிவு செய்தபோது, சனம் ஷெட்டி எழுப்பிய கேள்விகள் ஒவ்வொன்றும் நெற்றியடி. ஆனால், என்ன செய்வது! வழக்கம்போல லேட் பிக்கப். போட்டி நடந்து முடிந்து ஒரு வாரம் கழித்து மண்டையில் பல்பு எரிந்திருக்கும் போல. ஓஹோ சனம் ஓஹோ.. 'நீங்கள் பிரசங்கிப்பதைக் கடைப்பிடிக்கவும்' என்று ஒவ்வொரு முறையும் ஆரியை பார்த்து பாலா கூறுவதை, நேற்று கமல் சர்க்கரை தடவிய வார்த்தைகளில் கூறினார். சும்மாவே புரியாது. இதுல இப்படி சொன்னா எப்படி புரியும் ஆண்டவரே?
க்ரூபிஸம் பற்றி இரு அணிகளும் விவாதித்துக்கொண்டது அருமை அருமை. மணிமேகலைக்காகச் சண்டைபோட்டுக்கொண்டு உண்மையை மாறி மாறி கூறும் கவுண்டமணி - செந்தில் நகைச்சுவைதான் நினைவுக்கு வந்தது. என்னவோ போங்க! ஆனா, பாலாவின் நியாயமற்ற வாதங்களுக்குச் சரியான பதிலடியைக் கமல் அல்ல கேபிதான் கொடுத்தார். அத்தனையும் கவுண்டமணியின் டைமிங் கவுன்ட்டர் போல் இருந்தது. பாலாவின் முகமும் வெளிறிப்போனது.
Bigg Boss 4 Tamil Vijay Tv Bala
பாலா கால் தூக்கிக் காட்டியது தவறு என்று கமல் சுட்டிக்காட்டாதது ஏன்? பாலாவிடம் முழு கதையும் கேட்டுவிட்டு ஆரியிடம் வாதத்தைத் தொடர்ந்தது ஏன்? பாலா பக்கத்தின் அநியாயங்களை நியாயப்படுத்துவதைப் போன்றே இருந்தது நேற்றைய எபிசோட். இது அனைவரையும் ஏமாற்றமடையவேச் செய்தது. ஆரி, 'ரியோவுக்கு விட்டுக்கொடுத்தேன்' என்று சொல்லவே இல்லை. மேலும் அதனை 'க்ரெடிட் ஸ்டீலிங்' என்று கூறும் பாலா, சுரேஷ் சக்ரவர்த்திக்கு பாலா செய்தது என்னவென்று சொல்வது? அதனால் சுரேஷ் எவ்வளவு மனமுடைந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே! ஆக, ஏதோ பட்டும் படாமலும் கூறிவிட்டு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டார் கமல். ஏமாத்திடீங்க பிக் பாஸ்!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"