சனம் இல்லாமல் பிக் பாஸ் இல்லை.. நெட்டிசன்கள் குமுறல்!

Bigg Boss Tamil Review சிரிப்பு, நகைச்சுவை, வெறுப்பு, சண்டை, அழுகை, கோவம் என அத்தனை எமோஷன்களையும் வெளிப்படுத்திய மிகவும் ஸ்ட்ராங் போட்டியாளர் வெளியே சென்றது ‘நியாயமற்றது’.

Bigg Boss 4 Tamil Vijay Tv Kamal Hassan Sanam Eviction Bala Aari Anita review Day 63
Bigg Boss 4 Tamil Vijay Tv Kamal Hassan Sanam Eviction

Bigg Boss 4 Tamil review Day 63 : ‘சனம் ஷெட்டியை வெளியே அனுப்பியது அநியாயம்’ என்கிற குமுறல்களும் ‘சனம் இல்லையென்றால் பிக் பாஸ் பார்க்க மாட்டோம்’ என்கிற வசனங்களும் நேற்று சோஷயல் மீடியாவை ஆக்கிரமித்தது. #NoSanamNoBiggBoss என்கிற ஹாஷ்டேகையும் ட்ரெண்ட் செய்திருந்தனர் நெட்டிசன்கள். முதல் சீசனில் ஓவியாவைத் தொடர்ந்து, மக்களின் அன்பையும் வரவேற்பையும் ஆதரவையும் பெற்றிருக்கிறார் சனம் ஷெட்டி. ஷிவானி, ரம்யாவைவிட சனம் ஷெட்டி எந்த வகையில் மக்களின் அதிருப்திக்கு ஆளாகியிருக்கிறார் என்பது தெரியவில்லை. என்னவோ போங்க மக்களே! இப்படி எவிக்ட் பண்ணிடீங்களே!

அகம் டிவி வழியே எத்தனை பேர் சனம், அனிதா மற்றும் ஷிவானியை காப்பற்ற விரும்புகிறீர்கள் என்ற கமலின் வாக்கெடுப்பில், வீட்டிலேயே அதிகப்படியான வாக்குகளைப் பெற்றார் சனம். இதில் வேடிக்கையான விஷயமே அர்ச்சனா, நிஷா எல்லாம் சனம் ஷெட்டிக்கு ஆதரவு தெரிவித்ததுதான். ஆக, ஷிவானிக்கு பாலா ஆஜீத் தவிர வீட்டினுள் யாரும் சப்போர்ட் செய்யவில்லை. அனிதா வெளியே போகவேண்டும் என்பதில்தான் எத்தனை சந்தோஷம் அனைவர்க்கும். ஆனால், விதி வலியது. அனைவரின் முகத்திலும் கரி. இந்த வாரம் என்னவெல்லாம் செய்யக் காத்திருக்கிறாரோ அனிதா. உண்மையில் இது மக்கள் வாக்களிப்பில் அடிப்படையில் வெளியேற்றப்பட்ட எவிக்ஷன்தானா என்கிற சந்தேகம் யாருக்கும் எழாமலில்லை.

Bigg Boss 4 Tamil Vijay Tv Kamal Hassan Sanam Eviction Bala Aari Anita review Day 63
Bigg Boss 4 Tamil Vijay Tv Kamal Hassan Sanam Eviction

ரேட்டிங் கொடுக்கப்பட்டபோது சனம் இரண்டாவது இடத்தில் இருக்கவேண்டும் என்று ஆரியைத் தவிர யாரும் சனம் ஷெட்டிக்கு ஆதரவளிக்கவில்லை. ஆனால், நேற்று பாலா உட்படப் பலர் அந்த முடிவுக்கு ஆதரவளித்தனர். வேற லெவல் ஸ்ட்ராடஜி பாலா! நடிகன்டா நடிகன்டா! இந்த சீஸனின் முதல் அழைப்பாளரின் வருகை நேற்று இருந்தது. ஷிவானியிடம் பேசவேண்டும் என்றுகூறி, ‘எந்த தைரியத்தில் கால் சென்டர் டாஸ்க்கில் அழைப்பைத் துண்டித்து இந்த வார நாமிநேஷனில் வந்தீர்கள்’ என்பதை அவருடைய தொனியில் பொறுமையாகக் கேட்டார். எல்லாம் பாலா இருக்கும் தைரியம்தான் பாஸு.

அய்யயோ! பாஸு, பாஸி போன்ற சொற்களைப் பயன்படுத்தினால் அர்ச்சனாவுக்கு பயம் வருகிறதாம். இதெல்லாம் நம்பிட்டிங்களா மக்களே? அதுகூட விடுங்க. ஷிவானி, சனம், அனிதா மூவரில் யார் வீட்டைவிட்டுப் போவார்கள் என்கிற கேள்வியோடு இடைவேளை கொடுத்தபோது, பாலா கண்ணில் படர்ந்த பயமும் குற்ற உணர்ச்சியையும் பார்த்தீர்களா? அர்ச்சனாவும் பாலாவும் சாரி சாரி.. அம்மாவும் பையனும் (முடியல) ஷிவானியை, மக்கள் வெறுக்கும் அளவிற்கு எதுவும் செய்யவில்லை அதேபோல பிடிக்கிற அளவுக்கும் ஒன்னும் பண்ணலை என்று சின்சியராக டிஸ்கஸ் செய்துகொண்டிருந்தனர். எவ்வளவு விவாதித்தாலும் ஷிவானிக்கு பாலாவுடைய நிழல் மட்டுமே போதும் என்றுதான் இன்றுவரை இருக்கிறார். அதனை காமல்கூட போகிறபோக்கில் சொல்லிவிட்டுச் சென்றார். இனிமேலாவது விளையாடுவாரா அல்லது மிக்ஸர் சாப்பிட்டுக்கொண்டுதான் இருப்பாரா என்பதைப் பார்ப்போம்.

shivani narayanan, bigg boss, bigg boss season 4, ஷிவானி, ஷிவானி சிறுமி புகைப்படம், பிக் பாஸ் சீசன் 4, பிக் பாஸ், ஷிவானி நாராயணன், விஜய் டிவி, bigg boss shivani narayanan, shivani little girl, shivani photos viral, tamil viral news,viral photos, bigg boss, vijay tv
Bigg Boss 4 Tamil Shivani

சனம் எவிக்ட் ஆனதும், உண்மையில் மனதார வருத்தப்பட்ட இரண்டே பேர் அனிதாவும் ஆரியும்தான். ஆனால், சனமின் ஆட்டிடியூட் வேற லெவல். பாலாவை நேரடியாக முகத்தைப் பார்த்துச் சண்டைபோடும் ஒருவர் என்றால் அது சனம்தான். வெளியேறும்போதுகூட, ‘என்னுடைய டைட்டிலை உனக்கு விட்டுக்கொடுக்கிறேன் போ’ என்று தன்னம்பிக்கை குறையாமல் சொல்லிவிட்டுத்தான் சென்றார். சனம் டைட்டில் வெற்றிபெற்றிருந்தால்கூட அவருக்கு இந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்திருக்காது. நேற்றைய தினம் இந்திய அளவில் சனமின் தினமாகவே இருந்தது. அவ்வளவு ஏன்.. பிக் பாஸ் வரலாற்றிலேயே போட்டியாளர் ஒருவர் வெளியே செல்லும்போது ‘ஆல் தி பெஸ்ட்’ என்று பிக் பாஸே கூறியது இதுவே முதல் முறை.

சிரிப்பு, நகைச்சுவை, வெறுப்பு, சண்டை, அழுகை, கோவம் என அத்தனை எமோஷன்களையும் வெளிப்படுத்திய மிகவும் ஸ்ட்ராங் போட்டியாளர் வெளியே சென்றது ஆரி சொன்னதுபோல ‘நியாயமற்றது’. வீட்டில் இருக்கும் மற்றவர்களையும் சனமின் வெளியேற்றம் அதிர்ச்சியடையவே செய்தது. எப்போதுதான் நியாயமான எவிக்ஷன் நடைபெறுமா! பொறுத்திருந்து பார்ப்போம்!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss 4 tamil vijay tv kamal hassan sanam eviction bala aari anita review day 63

Next Story
வித்தியாசமான கேப்டன்சி டாஸ்க்: வென்றது யார்?Bigg Boss Tamil 4 Promo
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com