Bigg Boss 4 Tamil Review Day 49 : ஆஹா! மீன் தன்னால வந்து வலையில மாட்டிக்கிச்சு! 'காதல் கண்ணை மறைக்குதுனு' சொன்னது யாராக இருக்கலாம். சந்தேகம் யார் மீது இருக்கிறது என்று பல கேள்விகளைக் கமல் முன்வைப்பதற்குள், தாமாகவே ஒத்துக்கொண்டு சிக்கிக்கொண்டார் ஆரி ப்ரோ! நிச்சயம் யார் சொல்லியிருப்பார்கள் என்பதை நிகழ்ச்சி வெளிப்படுத்தியிருக்காது. ஏன் ப்ரோ ஏன்! இனிமேல் நாமினேட் செய்வதற்கு யாரும் உண்மையான காரணத்தைச் சொல்லமாட்டார்களே! அட போங்க ப்ரோ!
'டங்கா மாரி ஊதாரி..' என ஹவுஸ்மேட்ஸை கலாய்க்கும் விதமாக ஒளிபரப்பி நாற்பத்து எட்டாம் நாளை தொடக்கி வைத்தார் பீக் பாஸ். 'யார் சொல்லுறதையும் என்னால கேட்டுக்க முடியாது. அதனால் என்னை நீங்கல்லாம் அவாய்ட் பண்ணுனா, கண்டிப்பா எனக்கு ஸ்பேஸ் கிடைக்கலன்னு புகார் பண்ணுவேன்' என்ற ஆணவத்தில் இருந்தது, ஆரிக்கும் அனிதாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் அனிதாவின் பதில்கள். இதுல விஷயம் என்னன்னா! ஆளையே காணோமே என நாம் தேடிக்கொண்டிருக்கும் ரமேஷ் பற்றிய உரையாடல்கள்தான் சின்ஸியராகப் பகிரப்பட்டு வந்தது. ரமேஷ் பகுதிகளையெல்லாம் எங்களுக்கு காட்டாம எடிட் செஞ்சுடுறீங்களா பிபி.
Bigg Boss 4 Tamil Vijay Tv Jithan Ramesh
'விதிமுறைகளை மீறாமல் விளையாடு தம்பி' என பாலாவுக்கு கமல் அட்வைஸ், சாரி சாரி டிப்ஸ் கொடுத்த விதம் அருமை. அதேபோல, சண்டையில் உங்க சட்டை கிழியலாம் ஆனா எங்க பொருள்கள் சேதமடையக் கூடாது என ரியோவுக்கு கொடுத்த ஹின்ட்டும் நன்றாகவே புரிந்தது! குக்கூ போல வேடமிட்டு மற்றவர்களின் ரகசியங்களை சொல்ல வேண்டும் என்பது டாஸ்க். வழக்கம்போல நம் ஹவுஸ்மேட்ஸ் யாரும் கேள்வியை புரிந்துகொள்ளவில்லை. 'நீங்க சொல்லுறதெல்லாம் ரகசியமாடா? ரகசியம்னா என்னான்னு தெரியுமா?' என்ற தொனியில் கமல் எத்தனை முறை கேட்டாலும் போட்டியாளர்கள் அனைவரும் மிகத் தெளிவாகத் தவறாகவே விளையாடினார்கள். (ஹாட்ஸ் ஆஃப் ஹவுஸ்மேட்ஸ்!)
இதற்கிடையில், பாலாவிடம் இருக்கும் குறைகளைச் சுட்டிக் காட்டிய போட்டியாளர்களின் ஒருவரான நண்பன் ஆஜீத்திடம், 'உன் கேப்டன்சியில் பிழை' என்று கூறிக்கொண்டிருந்தார். இந்தக் குறைகளையெல்லாம் அப்போப்போ சொல்லிருந்தால் ஆஜீத் திருத்திக்கொண்டிருப்பாரே பாலா ப்ரோ! இப்போ வந்து சொல்லி என்ன பயன்? கேபி சொல்லுவதைப்போன்று, எல்லாம் பாலாவை குறை சொன்னதால் வந்த ஒருவித வயித்தெரிச்சல்!
Bigg Boss 4 Tamil Vijay Tv Aajeeth
வலுவான போட்டியாளருக்கு 'க்ளவுஸ்', போட்டியே இல்லை என நினைப்பவர்களுக்கு 'அட்டைக்கத்தி' டாஸ்க்கில் பாலாவுக்கு சேர்ந்த அதிகப்படியான க்ளவுஸ், அவருக்கு வீட்டில் எத்தனை பேர் பயந்துள்ளனர் என்பதையே வெளிப்படுத்துகின்றனர். காரணம், ஓவொருவரும் கூறிய காரணம்தான்! என்னவோ போங்க.. ஐம்பது நாள் வந்துடுச்சு. ஆனாலும் வீட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கை பதினாறிலேயே இருக்கின்றன. நேற்று ஆரி, ரியோ எவிக்ஷனிலிருந்து காப்பாற்றப்பட்டனர். இன்று ஒருவர் வெளியேற்றப்பட்டாலும், திங்களன்று அஜீம், புதிய போட்டியாளராகக் களமிறங்கப்படுவார் என்கிற பேச்சுவார்த்தைகளும் ஒருபக்கம் போய்க்கொண்டிருக்கின்றன. பார்ப்போம்! எதுவரைக்கும் இந்த அட்ராசிட்டிகள் போகும் என்று!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"