Bigg Boss 4 Tamil Review Day 50 : 50-வது நாள் கொண்டாட்டத்தின் ஹயிலைட்டாக சுச்சியின் சரவெடி பட்டாசு. 'நம் மனக்குமுறலை அப்படியே சொல்லிட்டாங்க மகராசி' என்றுதான் தோன்றியது. ஆனால், அதனை சரியான விதத்தில் வீட்டிற்குள்ளும் அப்லை செய்திருந்தால் இன்னும் கொஞ்சம் காலம் உள்ளேயே இருந்திருக்கலாம். அதுசரி, வெளியிலிருந்து நாம் பார்ப்பதற்கும், உள்ளே இருப்பதற்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கும் என்பதற்கு சுச்சியே சாட்சி!
வீட்டில் எந்த அளவிற்கு சுச்சி ஒதுக்கப்பட்டார் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. வீட்டை விட்டுப் போனால் போதும்பா என்பதுபோல் இருந்தது, அவர் 'படார்' என உண்டியலை உடைத்துவிட்டு கதவோடு மன்றாடிக்கொண்டு இருந்த விதம். வீட்டினுள் குரூப்பிஸம் அதிலும் இரவு 11 மணிக்கு மேல் எந்த அளவிற்கு இருக்கிறது என்பது அவர் உடைத்த உண்டியலுக்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் இருந்தது. அனிதா, ஆரி மற்றும் சனம் பற்றிய பார்வையை மாறியது என்றே சொல்லலாம். (இருந்தாலும் உஷாரா இருக்கணும்!)
Bigg Boss Tamil 4 Samyuktha
என்னதான் இருக்கட்டுமே, ஒருவர் வீட்டை வெளியே செல்கிறார் என்றால் அவரை நல்ல முறையில் வழி அனுப்பி வைக்கும் முறை இந்த சீசன் ஹவுஸ்மேட்ஸுக்கு கொஞ்சமும் இல்லை. தங்களுக்குப் பிடித்தவர் காப்பாற்றப்பட்டதைக் கொண்டாடுவதையே முதன்மையாய் வைத்திருக்கிறார்கள். மனிதர்களிடையே குறைந்தபட்ச மனிதாபிமானமும் இல்லையோ என்கிற சந்தேகத்தையே இதுபோன்ற காட்சிகள் உணர்த்துகின்றன. அந்த வரிசையில் இறுதிவரை கூடவே நின்று வழியனுப்பி வைத்த சனம், அனிதா, ஆரி மற்றும் பாலாவுக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்.
பாலாவும் முகத்திற்கு முன் கூறுபவர்தான். ஆனால், பாலாவுக்கு கிடைக்கும் ஆதரவு சுச்சிக்கு கிடைக்கவில்லை. அர்ச்சனா, நிஷா, ரமேஷ், சம்யுக்தா ஆகியவர்களின் உண்மை முகம் நேற்று வெளியே வந்தது. உண்மையிலேயே இவர்கள் வெரி டேஞ்சரஸ்ஃ பெல்லோஸ்! ஆனால், நல்லாவே கேம் விளையாடுகிறார்கள். இதெல்லாம்விட, 'யாரை காப்பாற்ற நினைக்கிறீர்கள்' எனக் கமல் ஹவுஸ்மேட்ஸிடம் கேட்டபோது சோம் சம்யுக்தாவை சொன்னது அனிதாவிற்கான பெரிய நோஸ் கட் மொமென்ட். (சோமு கொஞ்சம் யோசிச்சிருக்கலாம்!)
ஐம்பது நாள் ஆகிடுச்சு! விறுவிறுப்பான விளையாட்டுகள் ஏதுமில்லை. வீடு இன்னும் ஹவுஸ்ஃபுல்லாகவே இருக்கிறது! ஒருவேளை இறுதிநாள் வரை யாரையும் அனுப்பாமல், வெற்றியாளரை மட்டும் அறிவிப்பார்களோ! இன்று நாமினேஷன் நாள். இந்த வாரம் வீட்டைவிட்டு யார் வெளியேறப்போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"