லவ் பெட் கேங் என்ட்ரி, தனிமையில் ஆரி.. மக்களின் மனநிலை மாறுமா!

Bigg Boss 4 Tamil வன்முறைக்கு துணைபோகும் அர்ச்சனா, ஆரி மீது எரிந்துவிழுவது ஏன்?

Bigg Boss 4 Tamil Vijay Tv Love Bed Gang Entry Archana Nisha Rekha Ramesh
Bigg Boss 4 Tamil Vijay Tv Love Bed Gang Entry Archana Nisha Rekha Ramesh

Bigg Boss 4 Tamil Review : வீட்டை விட்டு வெளியே சென்று மீண்டும் என்ட்ரி ஆனாலும் சிலருக்குப் பகை இன்னும் தீரவில்லை போல. அர்ச்சனா, நிஷா, ரமேஷ் மற்றும் ரேகா நேற்று மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தனர். போட்டியாளர்கள் வெளியே லாக் செய்யப்பட, சமையலறை, சோஃபா என ‘முன்னாள் லவ் பெட் கேங்’ அவரவர்கள் இடத்தில் ஐக்கியம் ஆகிக்கொண்டனர். ப்பா… ரம்யாவுக்குதான் எவ்வளவு சந்தோஷம் இவர்களைப் பார்த்ததில்! வழக்கம்போல ஆரி தனிமையில் வாடினார். அப்படி என்னதான் ஆச்சு!

இதுநாள்வரை கடவுள் 20% மிருகம் 80% என்கிற ரேஞ்சில் சுற்றிக்கொண்டிருந்த பாலாஜி, வீக்கெண்ட் எபிசோடில் மூன்றாவது ஃபைனலிஸ்ட்டாக தேர்வு செய்யப்பட்டபின் 80% கடவுளாகவும் 20% மிருகமாகவும் மாறிவிட்டார். என்ன ஒரு மாற்றம்! அதுமட்டுமா.. நேற்று கேமரா முன் நின்று தான் எவ்வளவு ‘குட் கிட்’ என்று மக்களுக்குத் தெரிவித்தார். ஆஹா… ஓட்டுக்களை அள்ளப்போகிறார் என்பதற்குள், நெகிழ்ந்த, மகிழ்ந்த மற்றும் தங்களை நிலை நாட்டிய தருணங்கள் பற்றி அனைவரும் பகிர்ந்துகொண்டனர்.

Bigg Boss 4 Tamil Vijay Tv Love Bed Gang Entry Archana Nisha Rekha Ramesh
Bigg Boss Aari and Bala

இதனைத் தொடர்ந்து லவ் பெட் கேங் வீட்டிற்குள் நுழைந்ததிலிருந்து ஒரே அன்பு மழைக் கட்டிப்பிடி வைத்தியம் மூலம் வெளிப்பட்டது. ப்ப்பா… நமக்கே மூச்சு முட்டிவிட்டது. உலகமே ஆரியை கொண்டாடுகிறது, ஆனால் வீட்டினுள் நேற்று முற்றிலும் ஒதுக்கப்பட்டார். என்ன கொடுமை சார் இது! இந்தத் தனிமையை நிஷாவிடம் கூறி மனம் விட்டு அழுதார் ஆரி. நிச்சயம் இது மேலும் தமிழ்நாட்டு மக்களை உருகவைத்திருக்கும். அதே சமயத்தில் கட் கொடுத்து ஜித்தன் ரமேஷ் ஆரியை பற்றி எதிர்மறை கமென்ட்டுகளை கூறிக்கொண்டிருந்ததைக் காட்டிய எடிட்டருக்கு பாராட்டுகள்! அவர் ஆரி ரசிகராக இருப்பார் போல!

வீட்டிற்கு மறுபடியும் வந்த விருந்தாளிகளை உபசரிக்காமல் இருக்கலாமா! மாவை வைத்து தரமான டாஸ்க் ஒன்றைக் கொடுத்து என்டெர்டெயின் செய்தார் பிக் பாஸ். மக்கள் மத்தியில் தான் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை எப்படியாவது  தெரிந்துகொள்ளத் துடித்தார் பாலா. நிஷா, ரேகா என அனைவரிடத்திலும் சென்று போட்டுவாங்கிக்கொண்டிருந்தார். ‘வில்லன் பாதி ஹீரோ பாதி’ என்கிற ரேகாவின் விடை பாலாவுக்கு மேலும் சந்தேகத்தையே கொடுத்திருக்கும். என்னம்மா மீனுக்குட்டி இப்படி பண்ணுறீங்களேமா!

வழக்கம் போல ஆரி பற்றி நிஷாவிடம் புலம்பிக்கொண்டிருந்தார் ரியோ. மேலும், ‘நீ ஒரு டஃப் போட்டியாளர்’ என்றும் ‘எங்கள் அக்கா தம்பி அன்பு உண்மையானது’ என்றும் நெகிழ்ந்துகொண்டிருந்தனர். ‘நான் இவ்வளவு செய்தும் என்மேல அன்பு வெச்சிருக்கீங்க’ என்று பாலா அர்ச்சனாவிடம் கூறியது வீட்டினுள் அவ்வளவு அட்ராசிட்டி செய்ததை ஒப்புக்கொண்டதைத்தானே குறிக்கிறது. வன்முறைக்கு துணைபோகும் அர்ச்சனா, ஆரி மீது எரிந்துவிழுவது ஏன்? அட! வெளியில் பார்த்தும் அர்ச்சனாவின் மனநிலை மாறாமல் இருப்பதற்குக் காரணம் என்னவாக இருக்கும்! என்னவோ போங்க பாஸு.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss 4 tamil vijay tv love bed gang entry archana nisha rekha ramesh

Next Story
மாஸ்டர் படத்தின் காட்சிகள் லீக்… சோனி நிறுவன ஊழியர் மீது புகார் கொடுக்க முடிவு!master movie leak master scenes
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com