வெளியேற்றப்பட்ட நிஷா.. வலுவிழந்த லவ் பெட் கேங்!

Bigg Boss 4 Tamil அனிதாவைவிட ரம்யா கன்டென்ட் கொடுப்பது மிகவும் குறைவு. ஆனால், ஃபைனலில் ரம்யாவுக்குதான் இடம் என்று யூகித்திருக்கின்றனர்.

Bigg Boss 4 Tamil Vijay Tv Nisha Archana Aari Anita review Day 70
Bigg Boss 4 Tamil Vijay Tv Nisha

Bigg Boss 4 Tamil Review Day 70 : நிஷாவின் வெளியேற்றம் எந்தவகையிலும் அர்ச்சனாவின் மனமாற்றத்திற்குக் காரணமாக அமையாது என்பது அவருடைய பேச்சிலேயே தெரிகிறது. ‘எல்லோரும் சேர்ந்து பிளான் போட்டு அனுப்பிட்டாங்க அனுப்பிட்டாங்க’ எனக் குமுறிக்கொண்டிருந்தவருக்குத் தெரியாதா மக்கள் வாக்குகளின் அடிப்படையில்தான் (சொல்லிப்போம்!) எவிக்ஷன் நடைபெறுகிறது என்பது! அடடடடா! என்ன ஒரு பெர்ஃபாமன்ஸ். மேலும், ‘நானும் நிஷாவும் முதல் இரண்டு இடத்திற்குத் தகுதியற்றவர்கள் என்று மறுபடியும் அன்பைக் கொண்டு வந்து, எங்களுக்கு அடுத்து ஆரி முதல் இடத்திற்குப் போகக்கூடாது என்று வெறுப்பையும் வெளிப்படையாகவே காட்டினார்.

வந்திருப்பது ஒரு கேம் ஷோவிற்கு. இதில் அன்பு எங்கிருந்து வந்தது? போட்டியில் அன்பைத் திணிப்பதே தவறான யுக்தி. அதுசரி அவங்க ஸ்ட்ராடஜி சுக்குநூறாக உடைவதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை போல. எப்படியோ அர்ச்சனாவின் ஸ்ட்ராடஜியில் அவர் மட்டும் தப்பித்துக்கொள்கிறார். ரமேஷ், நிஷா  வெளியேறிவிட்டனர். இனி சோம், கேபி, ரியோ மட்டுமே லவ் பெட் கேங்கில் இருக்கின்றனர். இனிமேலும் இந்த விளையாட்டைப் புரிந்துகொள்ளவில்லை என்றால், ரொம்ப கஷ்டம்!

Bigg Boss 4 Tamil Vijay Tv Nisha Archana Aari Anita review Day 70
Bigg Boss 4 Tamil Vijay Tv Rio Anita

அப்படி இப்படி பயணம் செய்து ஒரு வழியாக எழுபதாவது நாளில் அடியெடுத்து வைத்துவிட்டனர். ரமேஷ் திடீரென எவிக்ட் செய்யப்பட்டதை தொடர்ந்து, அதற்காக யாரும் ஃபீல் பண்ணவில்லை என்றும், அட! ஃபீல் பண்ணலைனா கூட பரவாயில்லை. அப்படி சிரிக்குறாங்களே என்று மனக்குமுறலில் ஈடுபட்டது லவ் பெட் கேங். இந்த குமுறும் முகங்களை சுச்சி வெளியேறியபோது பார்க்கக்கூட முடியவில்லையே! என்னங்க சார் உங்க சட்டம்!

ப்ரோமோவை பார்த்து, இன்றைக்கு அர்ச்சனா, ரியோவை நன்றாகக் கிழிக்கப் போகிறார்கள். இந்த எபிசோடுல அர்ச்சனா இப்படி பண்ணிட்டாங்க, ரியோ இதை சொன்னாங்க என்று மக்கள் பலர் வீடியோ ஆதாரங்களோடு கமல் பார்வைக்கு சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துகொண்டிருந்தனர். நல்ல வேட்டையாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்த்தால், வழக்கம்போல நோஸ் கட். கேபியை காப்பாற்றுவதற்காக ரியோ செய்த வேலை மற்றும் அதனை அவர் மற்றவர்களோடுப் பகிர்ந்துகொண்டது அவருக்கு மறந்தே போய்விட்டதாம். நம்பிடுங்க மக்களே!

Bigg Boss 4 Tamil Vijay Tv Aari Bala Gaby Som review Day 58
Bigg Boss 4 Tamil Vijay Tv Archana Aari

அனிதா மற்றும் ஆரி தனியே அர்ச்சனாவின் லவ் பெட் கேங் பற்றியும், ஒவ்வொருத்தருடைய நிலை பற்றியும் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்திருப்பார் போல கமல். அனிதாவின் கன்டென்ட்டிலிருந்து ஒவ்வொரு கேள்வியையும் அகம் டிவி வழியே தொகுத்தார் கமல். ஆனால், பதிலைத்தான் வழக்கம்போல மொக்கையாக வந்தது. ‘நீங்க என்ன சொல்லுறீங்கன்னு புரியலையே!’ என்று வார இறுதியில் மட்டும் அம்னீஷியா பேஷன்ட்டாக மாறிவிடுகின்றனர் லவ் பெட் டீம். நாடகம் விடும் நேரம் தொலைவில் இல்லை!

தன் மீது எந்தக் கருத்தை முன்வைத்தாலும், அதனை பாலா, ஆரியோடு ஒப்பிடும் பழக்கம் அர்ச்சனாவிடம் அதிகம் இருக்கிறது. வீட்டின் நெகட்டிவ் வைபாகச் சுற்றிக்கொண்டிருக்கிறார் அர்ச்சனா. ஷிவானி, நிஷா இருவரில் வீட்டில் இருக்கும் பெரும்பாலானோர் ஷிவானியை காப்பற்ற நினைக்கும்போதே நிஷாவின் முகம் மாறியது. நிஷா எவிக்ட் செய்யப்படுகிறார் என்றதும் டிவியை அணைத்துவிட்டு செல்லலாமா என்றுதான் தோன்றியது. எல்லாம் அர்ச்சனாவின் பெர்ஃபாமன்சுக்கு பயந்துதான்!

Bigg Boss Tamil 4 Promo
Bigg Boss Tamil Gaby Som

இந்த சீசன் போட்டியாளர்களுக்கு மனதில் இருக்கும் பகை உணர்வுதான் அதிகம் இருக்கிறதே தவிர, சரியான போட்டியாளர்கள் யார் என்பதைக் கண்டுபிடிப்பதில் மிகவும் சிரமப்படுகிறார்கள். எந்த வகையில் ஆஜீத் இறுதி நாள்கள் வரை இருப்பார் என்று ஹவுஸ்மேட்ஸ் தேர்ந்தெடுக்கின்றனர் என்பது கேள்விக்குறியே! தான் நன்றாக விளையாடுகிறோம் சரியாகத்தான் இருக்கிறோம் என்ற விஷயமே சென்ற வாரம்தான் ஆஜீத்துக்குப் புரிந்தது. அதையும் காலர் ஆஃப் தி வீக் பகுதியில் ஒப்புக்கொண்டார் ஆஜீத். அனிதாவைவிட ரம்யா கன்டென்ட் கொடுப்பது மிகவும் குறைவு. ஆனால், ஃபைனலில் ரம்யாவுக்குதான் இடம் என்று யூகித்திருக்கின்றனர். ஒருவேளை இருக்குமோ!

இனி யாரோடு அமர்ந்து மற்றவர்களைப் பற்றி அர்ச்சனா தரக்குறைவாகப் பேசப்போகிறாரோ என்பது தெரியவில்லை.  இன்றைக்கு ஓபன் நாமினேஷன் வேறு. என்ன நடக்கும் என்பதைப் பார்ப்போம்!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss 4 tamil vijay tv nisha archana aari anita review day 70

Next Story
பிரியங்கா கெட்டப்பில் ராமர்; சிரிப்பொலியில் அரங்கமே அதிர்ந்த வீடியோactor ramar, vijay tv, sound party, priyangka, ramar, ramar new getup like priyangka, பிரியங்கா கெட்டப்பில் ராமர், விஜய் டிவி, சவுண்ட் பார்ட்டி நிகழ்ச்சி, வைரல் வீடியோ, vijay tv show, viral video
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com