ரம்யாவிடம் உஷாராகத்தான் இருக்கனும் போல – பிக் பாஸ் விமர்சனம்

நம்மலதான்யா டார்கெட் பண்ணுறாங்க என்பதைப் பட்டெனப் புரிந்துகொண்ட ரம்யா அந்த சூழ்நிலையை மிகவும் தெளிவாக கையாண்டார்.

Bigg Boss 4 Tamil Vijay Tv Ramya Bala Gaby Aajeeth Suchi Day 46 review
Bigg Boss 4 Tamil Vijay Tv Ramya

Bigg Boss 4 Tamil Review Day 46 : நிகழ்ச்சிக்கு நடுவுல விளம்பரமா இல்ல விளம்பரத்துக்கு நடுவுல நிகழ்ச்சியா என நாமளே கன்ஃப்யூஸ் ஆகுற அளவுக்கு நேற்றைய எபிசோட் இருந்தது. இந்த சீசனே மிகவும் ஸ்லோவாக நகர்ந்துகொண்டிருக்கிறது, இதில் ஸ்லோமோ டான்ஸ் டாஸ்க் வேறயா பிக்பாஸ். ஆனா, அது என்னவோ பார்க்க நல்லாதான் இருந்தது. சம்யுக்தா ரம்யா, அர்ச்சனா சோம் என ஜோடி சேர்ந்து ஏதேதோ செய்துகொண்டிருக்கும் கேப்பில் பாலாவும் ஷிவானியும் மட்டும் தனியாகத் தெரிந்தனர். நம்முடைய இந்த டிஸ்கஷனைவிட பாலா-ஷிவானி பற்றி வீட்டிற்குள் இருந்தபடியே ரம்யா பேசியவை அசத்தல் ரகம்! அதனால் சட்டென நாற்பத்து ஆறாம் நாளுக்குள் சென்றுவிடலாம் வாங்க.

ஒட்டுமொத்த போட்டியாளர்களும் சுச்சியை ஒதுக்கிவிட்டார்கள் போல. பேசுவதற்கு ஆள் இன்றி கேமராவுடன் புலம்பிக்கொண்டிருக்கிறார். ‘இங்க இருக்கிறதுக்கு வெளியுலகம் எவ்வளவோ பெட்டர்’ (நாங்களும் அதைத்தானே சொல்லுறோம்) என்றபடி ஒவ்வொருத்தரைப் பற்றியும் புகார் அளித்துக்கொண்டிருந்தார். ரொம்ப பாதிக்கப்பட்டிருக்காங்கபோல. இந்த வாரம் வந்துடுவீங்க சுச்சி வருத்தப்படாதிங்க.

ஒருவழியாக ‘மணிக்கூண்டு’ டாஸ்க் நிறைவடையும் தருணத்தில், கடிகாரத்தின் மீது வீட்டில் உள்ள மற்ற ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் எவ்வாறு நடந்துகொண்டனர் என்பதை சோம் நடித்துக் காட்டிய விதம் அருமை. இப்போதான் தனக்குள் இருக்கும் கலைஞன் வெளியே வருகிறார் போல. வெல்கம் சோம்!

Bigg Boss 4 Tamil Vijay Tv Ramya Bala Gaby Aajeeth Suchi Day 46 review
Bigg Boss 4 Tamil Vijay Tv Som

‘இவங்களுக்கு எத்தனை முறை வாய்ப்பு கொடுத்தாலும், யாரும் யாரையும் கரெக்ட் பண்ண மாட்டிங்குறாங்க. கன்டென்ட் நீங்க கொடுக்காதீங்க, நானே கொடுக்கிறேன்’ என நினைத்தாரோ என்னவோ, ஆரி, அர்ச்சனா மற்றும் சனம் நடுவர்களாக இருக்க, யமஹா வண்டியில் தன் ஜோடியை கரெக்ட் செய்து அழைத்துச் செல்லவேண்டும் என்கிற மிகவும் மிகவும் வித்தியாசமான டாஸ்க்கை கொடுத்தார் பிக் பாஸ். சோம் – ஷிவானி மற்றும் ரியோ-ரம்யா ஏதேதோ மொக்க போட்டு டாஸ்க்கை முடித்தனர். இவர்களை ஒப்பிடுகையில் ஆஜீத்-கேபியின் கான்செப்ட் நன்றாகவே இருந்தது. பாலா-சம்யுக்தாவும் ஏதோ ட்ரை செய்தனர். ஒன்னும் சொல்றதுக்கில்ல.

18 நிமிட வித்தியாசத்தில் சோம், சாம், அர்ச்சனா அணி மணிக்கூண்டு டாஸ்க்கின் வெற்றியாளர்கள் என அறிவித்தார் பிபி. மேலும், மிகவும் குறைந்த வித்தியாசத்தில் (மூன்று மணிநேரம் 1 நிமிடம்) டாஸ்க்கை முடித்த ஆரி, ரியோ மற்றும் கேபிக்கு சிறப்பு என்ட்ரியாக அடுத்த வாரத் தலைவர் பதவி டாஸ்க்கில் அர்ச்சனா டீமோடு சேர்ந்து போட்டியிடுவார்கள் என்ற வாய்ப்புக் கிடைத்தது. இவர்களின் கொண்டாட்டங்கள் ஒருபுறம் இருக்க, இருப்பதிலேயே குறைந்த மதிப்பெண்கள் பெற்று மொக்கை வாங்கிய பாலா, அந்தத் தோல்வியை தன் டீமேட் ரம்யாவிடம் சமாளித்துக்கொண்டிருந்தார் இல்லை இல்லை உளறிக்கொண்டிருந்தார். ‘அதான் போய்டுச்சே! இப்போ வந்து என்ன சமாளிக்கிற?’ என்ற தொனியில்தான் ரம்யாவின் பதில்கள் இருந்தன. (பார்த்து பாலா ப்ரோ! உங்களை ஹீரோ லெவல்ல நெனச்சுட்டு இருக்காங்க வெளில! மொக்க பீஸா ஆகிடாதீங்க!)

Bigg Boss 4 Tamil Vijay Tv Ramya Bala Gaby Aajeeth Suchi Day 46 review
Bigg Boss 4 Tamil Vijay Tv Suchi

தாமாக முன்வந்து தங்களின் அணி தோல்வி அடைந்ததற்குத் தான் மட்டுமே காரணம். அதனால், என்னை ஜெயிலுக்கு அனுப்பிடுங்க என ரம்யாவிடம் பாவமன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தார் சுச்சி. ஆனால், ‘நீங்கக் கொஞ்சம் அடக்கி வாசிங்க. எல்லாம் எங்களுக்குத் தெரியும்’ என்பதைச் சிரித்துக்கொண்டே வெளிப்படுத்தினார் ரம்யா. என்ன சுச்சி? எவிக்ஷன் பயமா? இல்ல பாலாவை காப்பாற்றும் நோக்கமா?

இவ்வளவு நாள் பாலா, ஷிவானியுடன் கைகோர்த்துச் சுற்றித்திரிந்த சம்யுக்தா, அவர்களைப்பற்றியே ரம்யாவோடு சேர்ந்து கலாய்த்துக்கொண்டிருந்தார்.  ஆனாலும், ‘பாலாவை எண்டெர்டெயின் பண்ணுறது மட்டும்தான் ஷிவானியின் வேலையா இருக்கு. இவங்க பண்ணுறது ரொம்ப போரிங்கா இருக்கு’ என நம் மனக்குமுறலை அப்படியே கூறினார் ரம்யா. (நல்லா இரும்மா நல்லா இரு!)

Bigg Boss Tamil 4 Promo 2
Bigg Boss 4 Tamil Bala and Shivani

அடுத்ததாக சோமின் காதல், (அதான் அந்த முதல் நாள் ரம்யா கொடுத்த ‘சாக்லேட்’) ட்ராக் களத்தில் இறங்கியது. நம்மலதான்யா டார்கெட் பண்ணுறாங்க என்பதைப் பட்டெனப் புரிந்துகொண்ட ரம்யா அந்த சூழ்நிலையை மிகவும் தெளிவாக கையாண்டார். (வேற லெவலுமா நீ). உண்மையிலேயே இந்த சீஸனின் தெளிவான கன்டெஸ்டன்ட் ரம்யாதான்பா! வெற்றியாளராக வருவதற்கு அதிக வாய்ப்புகளும் சப்போர்ட்டும் இருக்கிறது. விதவிதமான சாப்பாட்டிற்காகப் போட்டியாளர்கள் பிக் பாஸிடம் கெஞ்சியதோடு நேற்றைய எபிசோட் முடிந்தது. பரோட்டா வந்ததா அல்லது அல்வா கிடைத்ததா என்பதை இன்றைக்குப் பாப்போம்!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss 4 tamil vijay tv ramya bala gaby aajeeth suchi day 46 review

Next Story
மணிக்கூண்டு டாஸ்க்கில் கடைசி இடம்: தண்டனை பெறும் பாலாBigg Boss Tamil 4 Promo
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com