Bigg Boss 4 Tamil Review Day 10: அட! அட! அட! சனம் ஷெட்டியை காப்பாத்துறதுக்கு செம்ம பிளான் பண்ணீங்க பிக் பாஸ். ‘என்னைச் சுத்தி என்னடா நடக்குது’ என வீட்டினுள் உலாவிக்கொண்டிருந்த சனம், நேற்றைய Ball கேமில் வெற்றிபெறுவார் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள் (நாமும்தான்). ஆனால், பிக் பாஸின் ஸ்கெட்ச் அருமை அருமை. சரி வாங்க பத்தாம் நாள் ஆட்டத்தைப் பார்த்துவிடுவோம்.

ரியோ கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ரியோவின் குடும்பப் புகைப்படத்தை அனுப்பி சென்ட்டிமென்ட் டச் கொடுத்துவிட்டார் பிக் பாஸ். ‘கமலா கலாசா..’ பாடலுடன் ஆரம்பமானது பத்தாம் நாள். அனைவரிடத்திலும் சுருதி சற்று குறைந்தே காணப்பட்டது (என்ன பிரச்சனையோ!). ஃப்ரீ பாஸ் வைத்திருக்கும் அஜீத்தை சுற்றி ஒரே கூட்டம். ஆனால், அதைப் பத்திரப்படுத்தி ஆஜீத் வைத்திருக்கும் இடம்.. (ஏன்டா.. ஏன்!)
“எல்லோரும் உங்கள் உடல் நலத்திற்காகத்தான் பார்த்துப் பார்த்து பண்ணுறோம். அப்படி இருக்கும்போது எப்படி ‘க்ரூப்பிஸம்’ வீட்டுக்குள்ள இருக்குன்னு சொல்லுறீங்க” என ரியோவின் கேள்விக்கு, ‘இப்போ இதுக்கு நான் என்ன சொல்லுவேன்’ என்றபடி சுரேஷ் சமாளித்த விதம், வடிவேலின் ‘அவ்வ்வ்வ்’ ரியாக்ஷன்தான்.
உண்மையை சொல்லனும்னா இந்த பிக் பாஸ் மைண்ட் கேமை பக்காவாக விளையாடுவது சுரேஷ் சக்ரவர்த்தி மட்டும்தான். பிரச்சினையை இழுத்துவிடவும் தெரிகிறது, அதைச் சமாளிக்கவும் தெரிகிறது. அப்படிதான் ரியோ கேட்ட கேள்வியை சமாளிக்க முடியாமல் சமாளித்துக்கொண்டிருந்தார் சுரேஷ். சொல்லப்போனால் வலைத்தளங்களில் சுரேஷிற்கு தனி ரசிகர் பட்டாளமே உருவாகிக்கொண்டிருக்கிறது. இப்பொழுதெல்லாம் சுரேஷ் என்ன பண்ணினாலும் ‘அதில் என்ன ஸ்ட்ராட்டஜி இருக்கும்’ என்றேதான் அனைவர்க்கும் யோசிக்கத் தோன்றுகிறது. அந்த அளவிற்கு மிகவும் டஃப் போட்டியாளராக வீட்டினுள் இருக்கிறார் சுரேஷ்.

ஆனால், ரியோவும் சாதாரணமான கண்டெஸ்ட்டன்ட் இல்லை. ‘எல்லோரும் நடிக்குறாங்க’ என்று எப்போதோ ஒரு ஃப்லோவில் சுரேஷ் சொன்ன வார்த்தையை மனதில் வைத்துக்கொண்டு, சோம் மற்றும் வேல்முருகனோடு தீவிர டிஸ்கஷனில் இருந்தது, ‘பயங்கரமான ஆளா இருப்பார் போலவே’ என்ற எண்ணத்தைத்தான் கொடுத்தது.
அடுத்ததாக லக்ஜூரி பட்ஜெட் டாஸ்க். ஜோடியாக நடனம் ஆடுவதுதான் டாஸ்க். இதெல்லாம் எங்களுக்கு சாதாரணம் என்று பலருடைய மைண்ட் வாய்ஸ். ரவுடி பேபி பாடலுக்கு ஆஜீத், கேபி, ஆடலுடன் பாடலைக் கேட்டு பாடலுக்கு ரியோ நிஷா, வெச்சுக்கவா உன்ன மட்டும் பாடலுக்கு சனம், வேல்முருகன் என திரைப்படத்தில் வரும் ‘சேம் காஸ்டியூமில்’ மேடையேறி அனைவரும் நடனமாடினார்கள்.
என்னதான் சொல்லுங்க, ஜோடி சேர்ப்பதில் பிக் பாஸ் கேடி. எலியும் பூனையுமாகச் சண்டை போட்டுக்கொண்டிருந்த சுரேஷ், அனிதாவை ஜோடியாக்கி, சின்ன மச்சான் பாடலுக்கு ஆட வைத்ததெல்லாம்… மூளைக்கார பயபுள்ளையா இருக்காரே பிக் பாஸ். உண்மையில் நல்ல என்டர்டெயினிங் பெர்ஃபாமன்ஸாக இருந்தது இவர்களுடைய நடனம்.

பிரச்சினையை சரிபண்ணுவதற்காக சனம் முயற்சி செய்தாலும், பாலா இறங்கி வருவதாகத் தெரியவில்லை. தேவையில்லாத விஷயத்துக்கு சண்டை. அனிதாவுக்கும் சனம் ஷெட்டிக்கும் என்ன பிரச்சனை என்று புரியவில்லை. ஒருவேளை ஒட்டுமொத்த போட்டியாளர்களும் சனம் ஷெட்டியை வெறுக்கிறார்கள், எதுக்கு நமக்கு வம்பு என அனைவரும் நினைக்கிறார்களோ!
அதனால்தான் என்னவோ, பந்து போட்டியில் சனத்தை வெற்றிபெற வைத்துவிட்டார் பிக் பாஸ். நம் கருத்துப்படி இந்த வாரம் ரேகா வெளியேறி விடுவார். அப்படி என்றால் அடுத்து எலிமினேட் ஆகப்போகும் சனம் ஷெட்டியைக் ‘பால் கேம்’ மூலம் காப்பாற்றிவிட்டாரா பிக் பாஸ்? அப்படியென்றால் அடுத்த வாரம் வீட்டை விட்டு வெளியேறப்போவது யாராக இருக்கும்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”