அதற்குள் டிஷ்யூம்; டிஷ்யூம்: பிக்பாஸ் ரகளையில் யாருக்கு என்ன ரேட்டிங்?

இம்முறை நிஷா மற்றும் ரேகாவிற்கு ஆரம்பத்திலேயே 'லைட்டா டிஷ்யூம் டிஷ்யூம்'. அதுவும் காஜலுக்காக (கண் மைய சொல்றேன்பா)

By: Updated: October 6, 2020, 07:14:47 PM

Bigg Boss 4 Tamil Review 1: ‘எப்படியோ ஒருவழியா பிக் பாஸ் போட்டாச்சு. இனி நல்லா டைம் பாஸ் ஆகும்’ என சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை ஆவலோடு எதிர்பாத்து காத்துக்கொண்டிருந்த ரியாலிட்டி (ஆஹான்) ஷோ கடந்த 4-ம் தேதி முதல் ஆரம்பமாகிவிட்டது. மேற்கத்திய நாடுகளின் ‘பிக் பிரதர்’ நிகழ்ச்சியைத் தழுவி இந்தியாவில் முதலில் ஹிந்தியில் ஆரம்பிக்கப்பட்ட ‘பிக் பாஸ்’, கடந்த நான்கு ஆண்டுகளாக கமல் தொகுத்து வழங்க தமிழிலும் ஒளிபரப்படுகிறது.

சாமானிய மக்களோடு லைம்லைட்டில் இருப்பவர்கள் உண்மையிலேயே எப்படி இருக்கிறார்கள் என்ற கான்செப்ட்தான் இது. ஆனால், ஜூலியைத் தவிர சாமானியர் என்று சொல்லிக்கொள்ளும் அளவிற்கு தமிழில் வேறு யாரும் எந்த சீசனிலும் களமிறங்கவில்லை. ‘போதும் போதும். ஜூலி பட்டதுதான் பாத்தாச்சே’ என்கிற உங்களின் மைண்ட்வாய்ஸ் கேட்கிறது. சரி, நடந்து முடிந்ததைப் பற்றியெல்லாம் இப்போ எதுக்கு. நான்காம் சீஸனின் முதல் நாள் முடிந்துவிட்டது. முதல் நாள் விமர்சனத்தோடு ஒவ்வொருவருடைய கேரக்டருக்கு என்ன ரேட்டிங் என்பதைப் பற்றியும் பார்க்கலாம்.

16 போட்டியாளர்களும் வீட்டிற்குள் வந்தாச்சு. விதிமுறைகளும் கேட்டாச்சு. ஆனால், 16 பேருக்கு ஒரு கழிவறைதான் என்கிற புரியாத லாஜிக்கை ‘கொஞ்சம் பாத்து பண்ணுங்க பிக் பாஸ்’ என்று கமல் கேட்டுக்கொண்டதால், கழிவறைகள் திறக்கப்பட்டன. ஷிவானி நல்லா நடனம் ஆடுவாங்கனு தெரியும், ஆனால் உண்மையில் நன்றாகப் பாடவும் செய்கிறார். ஷிவானியின் ‘கண்மணி அன்போடு’ பாடலோடு முடிந்தது அன்றைய பொழுது.

‘வாத்தி கமிங்..’ பாடலோடு ஆரம்பமானது முதல் நாள். அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த ஷிவானி ஏமாற்றிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். பிராக்டிஸ் பண்ணல போல. மேக்-அப்தான் கொஞ்சம் ஓவர். ஆனால், சம்யுக்தாவுடன் ரம்யா பாண்டியனின் டான்ஸ், பக்கா மாஸ். சம்யுக்தா, கேப்ரியலா இருவரும் மொபைலை ரொம்பவே மிஸ் பண்ணுறாங்க. ரேகா, ‘மிஸ் (மிஸ்ஸஸ்) கிளீனர்’. ஆனா, கொஞ்சம் டாமினேட் பண்ணுறாங்களோங்குற சந்தேகமும் வருது.

கட்டப்பட்டு தொங்கப்பட்டிருந்த பேக்கேஜை அவிழ்ததும், அதிலிருந்த பந்துகளை அனைவரும் எடுத்துக்கொள்ள, ரம்யாவிற்கு எதுவுமில்லாமல் போக, முதல் வாரத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்புறம் என்ன. குக்கிங், க்ளீனிங், வாஷிங் என அணிகள் பிரிக்கப்பட்டன. வழக்கமா சில நாள்களுக்குப் பிறகுதான் சண்டை தொந்தரவுகளெல்லாம் வீட்டில் ஏற்படும். ஆனால், இம்முறை நிஷா மற்றும் ரேகாவிற்கு ஆரம்பத்திலேயே ‘லைட்டா டிஷ்யூம் டிஷ்யூம்’. அதுவும் காஜலுக்காக (கண் மைய சொல்றேன்பா).

அமைதியா இருப்பாங்களோனு நெனைச்சா, அனிதா சம்பத், அவங்களோட ‘ஹா ஹா ஹாசினி’ கேரக்டரை வெளிப்படுத்தினாங்க. ‘டிக் டிக் திருடன்’, ‘சா பூ த்ரீ’னு 90’ஸ் கிட்ஸ் மண் மணம் மாறாம இருக்காங்களே.. அடடே! ஆனா, சட்டைலேயே ‘பேபி பிங்க்’ நிறத்தை வெச்சிக்கிட்டு ‘அவுட்’ ஆகுற ரம்யா பாண்டியன் வேற லெவல்மா. விளையாட்டின்போது விழுந்து கண்ணீர் விடுறதுக்குலாம் இன்னும் டைம் இருக்கு. ஆனா, நிஷா முதல் நாளே விழுந்து விழுந்து உழைச்சிருக்காங்க. எல்லோரும் பிஸியா விளையாடிட்டு இருக்குறப்போ, ஷிவானி மேக்-அப்ல படுபிஸி. சீசன் 4 ரைசா இவங்கதான் போல. இறுதியாக, நாமினேஷன் ஒத்திகைனு சொல்லி ட்விஸ்ட். அங்கதான் நம்ம ஷிவானி மாட்டுனாங்க. அதிகமான ஹார்ட் பிரேக்குகளை வாங்கி, இன்னும் எல்லோருடனும் நல்லா பழகணும் என்ற அலெர்ட் கிடைத்தது.

சரி வாங்க இப்போ ரேட்டிங் பார்க்கலாம்:

அன்றைய நாளில் ஒவ்வொருவருடைய செயல்பாடுகளை வைத்தே இந்த மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. 100 மதிப்பெண்களுக்கு எங்களுடைய மதிப்பெண் காரணத்தோடு அளவிடப்படுகிறது. பார்ப்போம் நம் கணிப்பு இறுதி நாள் வரை சரியாக இருக்கிறதா என்று!

ஆரி (84) – இவர் சிறந்த சமூக சேவகர் என்பது நம் அனைவருக்குமே தெரியும். நாமினேஷன் ஒத்திகையின்போது சரியான காரணத்தை, மனதில் இருப்பதை வெளிப்படையாகக் கூறி, ஹார்ட் பிரேக் சொன்னவர். சர்க்கரைத் தடவிய வார்த்தைகளோ, போலித்தன்மையோ எதுவும் இல்லாமல் நேர்மையான மனிதர் என்பது வெளிப்படையாகத் தெரிந்ததால், இவருக்கு 84 மதிப்பெண்கள்.

Bigg Boss 4 Tamil Aari Bigg Boss 4 Tamil Aari

சோம் (65) – புதிய முகம் என்பதால், இன்னும் இவரைப் பற்றிய புரிதல் தேவை. ஆனால், செய்கிற வேலையில் சின்சியர் என்று ஆரி பாராட்டிருக்கிறார். ஆனால், நாம் பார்க்கவில்லையே! வரும் நாள்களில் நமக்கும் தெரிய வரலாம். போலியாக இவர் இப்போது வரை இல்லை என்பதனால் 65 மதிப்பெண்கள்.

பாலா (57) – ‘வாட்சிங் பாலாவாகதான்’ இப்போது வரை இருக்கிறார். அமைதியாக, யாருடனும் நெருங்கிப் பழகாமல் இருக்கிறார். இவரைப் பற்றி வேறு யாரும் பெரிதாகச் சொல்லவில்லை. வரும் நாள்களில் இவருடைய இயல்பு தெரியவரக்கூடும் என்பதால் 57.

ஆஜித் (73) – வீட்டின் கடைக்குட்டி. முகத்திலேயே பயம் தெரிகிறது. என்றாலும், சமாளிக்கிறார். முதல் சீசன் ‘ஸ்ரீ’ நினைவிருக்கிறதா? அப்படி இல்லாமல் தைரியமாக சமாளிக்கிற பக்குவம், பாசிட்டிவ். இவருடைய வயதை ரேகா பயன்படுத்திக்கொள்கிறார் என்பது நன்றாகத் தெரிந்தது. அதனை வெளிப்படையாகச் சொன்னது மற்றொரு ப்ளஸ். அதனால், இவருக்கு 73.

வேல்முருகன் (64) – தன்னுடைய பாட்டினால் அனைவரையும் நன்கு உற்சாகமாய் வைத்திருக்கிறார். எல்லோருடனும் நன்றாகப் பழகுகிறார். ஆனால், அடுத்த கஞ்சா கருப்புவாக இருப்பாரோ என்கிற சந்தேகம் எழாமலில்லை. இன்னும் அவரைப் பற்றித் தெரிந்துகொள்வோம் வரும் நாள்களில். வெளிப்படையாக இல்லையோ என்கிற சந்தேகமும் இருப்பதனால் 64 மதிப்பெண்கள்.

ரியோ (62) – உள்ளுக்குள்ளே நுழையும்போதே ‘இருக்கிற இடம் தெரியாம இருந்துக்கணும்’ என்று நினைத்து வந்தாரா என்பது தெரியவில்லை. நிஷாவுடன் மட்டும்தான் நன்கு பழகுகிறார். மற்றவர்களிடம் பேசுவதற்கே யோசிக்கிறார் என்பது தெரிகிறது. சரிதான், நேரம் எடுக்கும். நம் எல்லோருக்கும் தெரிந்த ரியோவைவிட இவர் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கிறார். வரும் நாள்களில் எல்லோருடனும் பழகி, அடுத்த சாண்டியாக மாறுவார் என்ற நம்பிக்கையில் 62 மதிப்பெண்கள்.

Bigg Boss 4 Tamil Rio Bigg Boss 4 Tamil Rio

ரமேஷ் (79) – நம்ம ஜித்தன் ரமேஷ்தான். திரைப்படங்கள் மீறி அவரைப் பற்றி எதுவும் நமக்கு அவ்வளவாகத் தெரிந்திருக்கவில்லை. ஆனால், சர்க்கரைத் தடவிய சொற்கள் எதுவும் இல்லாமல், உள்ளதை உள்ளபடி கூறி மிகவும் ஜென்யூனாக இருக்கிறார் என்பதற்கு ஹார்ட் பிரேக்கின்போது அவர் கூறிய காரணமே சாட்சி. அதனால் அவருக்கு 79 மதிப்பெண்கள்.

சுரேஷ் (52) – பொன்னம்பலம், வையாபுரி, சேரன், மோகன் வைத்தியா பட்டியலில் இணைந்திருக்கிறார் சுரேஷ் சக்ரவர்த்தி. வீட்டின் ‘அப்பா’ முகம். எல்லோருடனும் சரிசமமாகப் பழகுவதற்கு முயற்சி செய்கிறார். அதேபோல, இளைஞர்கள் ஏதாவது கலாய்த்துவிட்டால் மோகன் வைத்தியாவைபோல் முகம் வாடுகிறது. ரேகாவைபோல் மிகவும் கடுமையாக இல்லை அதேபோல சாந்தமாகவும் இல்லை. போகப் போக இவர் யார் என்பது தெரிய வரும் என்பதால் 52 மதிப்பெண்கள்.

ரேகா (45) – ஆஜீத், கேபி என அங்கிருக்கும் சிறுவர்களை (பதிஞ்சிடுச்சு) அடக்கி வேலை வாங்குவதுபோல் தெரிகிறது. அவருடைய இயல்பு கடுமையாகப் பேசுவதுதான் என்றால், மற்றவர்களோடு அப்படி நடந்துகொள்வதில்லை. இதனைச் சம்பந்தப்பட்ட இருவரும் குறிப்பிட்டுள்ளனர். அதனால் அவருக்கு 45 மதிப்பெண்கள்.

ரம்யா (70) – ‘குக்கு வித் கோமாளி’ ரம்யாவைதான் இதிலும் பார்க்க முடிகிறது. எல்லோருடனும் பொறுமையாகவும் ஸ்வீட்ட்டாகவும் பழகுகிறார். எப்போதுமே இவர் இப்படிதானா என்கிற சந்தேகமும் எழுகிறது. யாரையும் பகைச்சுக்க கூடாது என்று இருப்பது இவருடைய ஸ்ட்ராடஜியா அல்லது இயல்பா என்பது போகப்போகத் தெரியும் என்பதால் இவருக்கு 70 மதிப்பெண்கள்.

Bigg Boss 4 Tamil Ramya Pandian Bigg Boss 4 Tamil Ramya Pandian

சம்யுக்தா (56) – நேரடியாய் பேசக்கூடியவர் என்பது தெரிகிறது. ஆனாலும், எல்லோருடனும் இணைந்து பேசவில்லை. இன்னும் தெரிந்துகொள்ளவேண்டிய பண்புகள் நிறைய உள்ளன என்பதால் 56 மதிப்பெண்கள்.

ஷிவானி (49) – ‘நாம் இன்ஸ்டாவில் பார்த்த ஷிவானியா’ என்று சொல்கிற அளவிற்கு அப்படியே நேரெதிராக இருக்கிறார். மற்றவர்களோடு மிங்கிளாக நேரம் எடுக்கும் என்று சொல்பவர், அதற்கான முயற்சிகள் எதுவும் எடுத்ததுபோல தெரியவில்லை. மேக்-அப் போடுவதிலேயே நேரத்தைச் செலவிடுகிறார். ‘இதுக்கு ஏன்மா பிக் பாஸ் பக்கம் வரணும்?’ என்றுதான் தோன்றுகிறது. அதிகப்படியான ஹார்ட் பிரேக்ஸ் பார்த்து, இனி நல்ல குழந்தையா சமத்தா இருப்பாங்கன்னு நம்பலாம். என்றாலும், இப்போதைக்கு இவருக்கு 49 மதிப்பெண்கள்.

Bigg Boss 4 Tamil Shivani Bigg Boss 4 Tamil Shivani

அனிதா (74) – ஏற்கெனவே சொன்னதுபோல ஹாசினி கேரக்டரை பார்த்துவிட்டோம். அதுமட்டுமின்றி நேர்மையாகவும் இருக்கிறார். செய்தி வாசிப்பின்போது உணர்ச்சியற்ற பொம்மைபோல் பார்த்த நமக்கு, இவருடைய சுட்டித்தனம் ஸ்வீட் சர்ப்ரைஸ்தான். என்றாலும், இதுதான் உண்மையில் அவருடைய கேரக்டரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். அதனால், 74 மதிப்பெண்கள்.

கேபி (68) – இளம் வயது என்றாலும், நேர்படப் பேசுவது நல்ல பண்பு. இப்போதைக்கு பாலாவை போல ‘வாட்சிங்’ லிஸ்டில் இருக்கிறார். நாளடைவில் இவரைப் பற்றியும் தெரிய வரும் என்ற நம்பிக்கையில் 68 மதிப்பெண்கள்.

நிஷா (55) – நகைச்சுவை கலைஞராக இருந்தாலுமே, தன் தனிப்பட்ட வாழ்விலும் எப்போதுமே நகைச்சுவை மட்டுமே செய்துகொண்டிருப்பர் என்றில்லை. இன்றுவரை நிஷா, ஏதோ ஷோவில் பேசுவதை போன்றுதான் இருக்கிறார். அவரின் உண்மையான முகம் வெளிவரவேண்டும் என்பதனால் 55 மதிப்பெண்கள்.

சனம் (51) – வீட்டிற்குள் வந்ததிலிருந்தே ‘ஹைப்பராக’ இருக்கிறார் சனம். இயல்பாக இருப்பதுபோல தெரியவில்லை. முழுவதும் கேமராக்காகவே செய்வதுபோல் இருக்கிறது. அவருடைய உண்மை முகம் வெளிவரும் என்ற ஹோப்பில் 51 மதிப்பெண்கள்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Bigg boss 4 tamil vijay tv review score

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X