Bigg Boss 4 Tamil Review : 'என்னடா இந்த சீசன் ரொம்ப மொக்கையா போகுது' என புலம்பிக்கொண்டிருக்கையில், 'இந்தாங்கப்பா கன்டென்ட் வெச்சுக்கோங்க' என்றபடி இந்த வாரத்தின் முதல் இரண்டு நாள்கள் அனல் பறக்கும் விவாதங்களோடு நகர்ந்தது. யாரு வெச்ச கண்ணோ தெரியல, கடந்த இரண்டு நாள்களாக படுமொக்கையாக நகர்ந்துகொண்டிருக்கிறது. டாஸ்க்கு மேல டாஸ்க்கு கொடுத்துத் திணறடித்துக்கொண்டிருந்த (ஆஹான்) பிக் பாஸுக்கே பெரும் டாஸ்கைக் கொடுத்திருக்கிறது இயற்கை.
நிவர் புயல் காரணமாக பிக் பாஸ் வீடு முழுவதும் தண்ணீர் புகுந்த காரணத்தினால், கன்டென்ட் இல்லாமல் தவித்துக்கொண்டிருக்கிறார் நம்ம பிபி. பரபரப்பாக நகர்ந்து கொண்டிருந்த கால் சென்டர் டாஸ்க் இடையே கடும் மழை பெய்தது. நீர் நிலை அதிகரித்து செம்பரம்பாக்கம் ஏறித் திறந்துவிடப்பட்ட நிலையில், ஏரியிலிருந்து சில கிலோமீட்டர் அருகே உள்ள பிக் பாஸ் வீட்டிலிருப்பவர்கள் பயணத்தில் உறைந்துள்ளனர். தங்களை எப்படியாவது வீட்டை விட்டு வெளியேற்றுமாறு கேட்டுக்கொண்டதால், போட்டியாளர்கள் அனைவரும் அருகிலுள்ள 5 ஸ்டார் ஹோட்டலுக்கு ஷிஃப்ட் செய்யப்பட்டனர். இதனால், இரண்டு நாள்களுக்கு எபிசோடே இல்லாமல் திண்டாடி வருகிறார் பிக் பாஸ். (என்னடா இது பிக் பாஸுக்கு வந்த சோதனை)
Bigg boss 4 tamil contestants and Nivar cyclone Rainfall
ஐம்பத்து இரண்டாம் நாளிலேயே இரண்டு நாள்களாக டிராவல் செய்துகொண்டிருக்கிறோம். கால் சென்டர் டாஸ்க்கில் நேற்று ரியோ ஆஜீத்துக்கு அழைப்பு விடுத்தார். பாலாவிடம் கேட்கப்படவேண்டிய கேள்விகளை அப்பாவி ஆஜீத்திடம் கேட்டார் ரியோ. சும்மா சொல்லக்கூடாது, ஆஜீத்தை பாட்டு பாட வைத்து, பாடலின் மீது தனக்கு இருக்கும் காதலைப் பொய் என்று சொன்னால் எப்படி இருக்கும் என்கிற உதாரணத்தை முன்வைத்து அவ்வளவு அழகாக லாக் செய்தார் ரியோ (என்ன ஒரு வில்லத்தனம்!)
ரியோவின் கேள்விகள் ஆஜீத்திற்காக இல்லையென்றாலும் ஆஜீத்தின் பதில்கள் உண்மையில் 'கியூட்'. இதனைத் தொடர்ந்து சனம் மற்றும் அனிதா தங்களின் தேவையில்லாத ஆணியை எடுத்துக்கொண்டிருந்தனர். சனம் ஷெட்டியின் கேள்விகள் அனைத்தும் நியாயமானதாக இருந்தாலும் வழக்கம் போல ஃபினிஷிங் சரியில்லை. அதேபோல, கேட்கும் கேள்விகளைச் சத்தம் போடாமல் கேட்டிருந்தால் ரியோவின் பதில்கள் புரிந்திருக்கக்கூடும். எதுவும் புரியாமல் திண்டாடிச் சண்டைபோட்டுக்கொண்டிருந்தார் சனம்.
Bigg Boss Tamil 4 Archana Sanam Rio
சனம் ஷெட்டியை பாலா இழிவாகப் பேசியதற்காக, வெளியே மக்கள் மத்தியில் அவ்வளவு ஆர்ப்பாட்டங்கள் போய்க்கொண்டிருக்கின்றது. ஆனால், அதற்குச் சம்பந்தப்பட்ட சனம் இன்னும் பாலாவின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருப்பது, எங்குக் கொண்டுபோய் முடியுமோ! இத்தனை அட்ராசிட்டிக்கு மத்தியில், என்ன கலவரம் நடந்தால் என்ன என்கிற போக்கில், சின்சியராக உறங்கிக்கொண்டிருந்தார் ரமேஷ். ஜி எதுக்கு ஜி அங்க இருந்துட்டு. வெளில வந்து எங்ககூட சேர்ந்து பாருங்க வாங்க.
ஒரு வழியாகத் தான் ஒரு 'லேட் பிக் அப்' என்று ஒத்துக்கொண்டார் அர்ச்சனா. ஆஜீத்தின் பதிலைக் கேட்டுதான் எத்தனை சந்தோஷம் இந்த லவ் பெட் கேங்கிற்கு! மழையினால் தடைப்பட்டிருக்கும் சண்டைகளும் வாதங்களும் மீண்டும் பழையபடியே தொடருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். பார்ப்போம்!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"