பாலாவுக்கு இல்லையா ஒரு எண்டு கார்டு? இதெல்லாம் சரியில்ல பிக் பாஸ்!

Bigg Boss 4 Tamil நாளுக்கு நாள் சனம் மீதான வெறுப்பை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்திக்கொண்டு வருகின்றனர் ஹவுஸ்மேட்ஸ்.

Bigg Boss 4 Tamil Vijay Tv Sanam Bala Aari Archana Nisha Anita review Day 60
Bigg Boss 4 Tamil Vijay Tv Bala

Bigg Boss 4 Tamil Review Day 60 : முந்தைய நாளின் ப்ரோமோ கன்டென்ட்டின் மெயின் பிக்ச்சரோடு ஆரம்பமான நேற்றைய எபிசோட் மனசாட்சியற்ற விருதுகளுடன் நிறைவடைந்தது. ‘இவங்களே அடிச்சுப்பாங்களாம், இவங்களே விருது கொடுத்துப்பாங்களாம்; ரேஞ்சில் நகர்ந்தது நேற்றைய தினம். பாவம் இந்த சனம் ஷெட்டி. எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்குறாங்க. உண்மையிலேயே பிக் பாஸ் டைட்டில்லாம் இவங்களுக்கு போதாது. அவ்வளவு பொறுமை. ஆனா நமக்குதான் அப்போப்போ அவங்களால அந்த பொறுமை இருக்க மாட்டிங்குது. சரி வாங்க நாமளும் ரேட்டிங் கொடுக்கலாம்.

கால் சென்டர் டாஸ்க்கில் ரேட்டிங் கொடுத்துக்கொள்ளவேண்டும் என பிக் பாஸ் சொன்னதும் போதும் அவ்வளவு பெரிய விவாதம். நம்ம பயபுள்ளைகளுக்கு ரூல்ஸ் ஃப்ரேம் பண்ணுறதுலயும் எப்போதும் குழப்பம்தான். கேப்டன் ரமேஷ் கடந்த இரண்டு நாள்களாக வாய் திறந்து பேசுகிறார். என்ன ஒரு அதிசயம். பேசுவது குறைவாக இருந்தாலும், பாயின்ட்டாகப் பேசுகிறார். வீட்டில் சண்டை நடக்கும்போதும் பாலாவின் அத்துமீறல்கள் அதிகரிக்கும்போதும் ஒரு ஓரமாய் தூங்கிக்கொண்டிருக்காமல் குரல் கொடுத்திருந்தால் நிச்சயம் அதிகப்படியான ரசிகர்களைப் பெற்றிருப்பர் ரமேஷ். அட என்ன ப்ரோ நீங்க!

Bigg Boss 4 Tamil Vijay Tv Kamala Hassan Bala Aari Suchi Day 49 review
Bigg Boss 4 Tamil Vijay Tv Jithan Ramesh

சம்யுக்தாவின் வெளியேற்றத்தால்  கால் சென்டர் டாஸ்க்கில் சனம் ஷெட்டிக்கு அழைப்பு வரவில்லை. என்னதான் பிக் பாஸே சதி பண்ணியிருந்தாலும், முதல் இடம் என்பது கொஞ்சம் ஓவர்தான். ஆனால், இரண்டாவது மூன்றாவது இடத்தைப் பிடிப்பதில் தவறெதுவும் இல்லை. அதற்காவது மற்ற போட்டியாளர்கள் கொஞ்சம் யோசிச்சிருக்கலாம். அவர்களுடைய முதன்மை நோக்கம், சனம் ஷெட்டியை எதிர்ப்பதில்தான் இருந்தது. சனம் ஷெட்டிக்காக ஆரி பேசினாலும், இன்னும் கொஞ்சம் பக்கபலமாக நின்றிருக்கலாம். சனமுக்கு ஆதரவாகப் பேசினால் எங்கே தனக்குக் கொடுக்கப்பட்ட முதலிடம் பறிபோய்விடுமோ என்கிற பயமோ என்னவோ! ஆனால், அதனை அதன் பிறகு வந்த விருதுகள் விழாவில் ‘அக்கறையுடையவர்’ என்ற பட்டத்தை சனம் ஷெட்டிக்கு கொடுத்து பாவக்கடனை அடைந்துவிட்டார் ஆரி.

சனம் ஷெட்டிக்கு யாரும் ஆதரவு கொடுக்காத நிலையில், தன்னிலையை எடுத்து வைத்துக்கொண்டிருக்கும் போது,  வழக்கம்போல அர்ச்சனா மற்றும் நிஷா ஒரு ஓரத்தில் அமர்ந்து ‘இந்த வீட்டுல யாருக்கும் விட்டுக்கொடுக்கத் தெரியாதா?’ என்று டிஸ்கஸ் செய்தது நமக்கும் கடுப்பையே ஏற்படுத்தியது. விட்டுக்கொடுப்பதற்கா பிக் பாஸ் வந்தீங்க அர்ச்சனா? சரி அவங்க பாயின்ட்டுக்கே வருவோம். அப்படியே விட்டுக்கொடுத்தாலும், பாலா ஏன் விட்டுக்கொடுக்கக்கூடாது! ஆளாளுக்கு ஒரு நியாயமா? என்ன கொடுமை சார் இது! ஆனால், இவ்வளவு கலவரத்துக்கு இடையிலும் நமக்கு என்ன என்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் ஃபைனலிஸ்ட் ஷிவானி.

Bigg Boss 4 Tamil Vijay Tv Shivani Ramya Archana Nisha Anita review Day 59
Bigg Boss 4 Tamil Vijay Tv Shivani

எவ்வளவுதான் சண்டை வரட்டுமே, அதற்காகக் கால்களைத் தூக்கிக் காட்டுவதும், செருப்பைக் கழட்டி அடித்துக்கொள்வதும் என்ன மேனரிஸம்? அத்தகைய மோசமான செயல்களை செய்யும் பாலாவுக்கு ஒரு வார்னிங் கூட கொடுக்காமல், மீண்டும் மீண்டும் தேசிய ஊடகத்தில் இதுபோன்ற வன்முறை காட்சிகளைப் பதிவு செய்துகொண்டே இருப்பது சரியானதாக இல்லை. இதுக்குலாம் எப்போ விடிவு காலம் வருமோ! ஏம்மா இந்த மாதர் சங்கமெல்லாம் எங்கே போனீங்க? கண்டிப்பா இதைப்பற்றி கமல் கேட்பார் என்கிற நம்பிக்கை துளியும் இல்லை. அவ்வளவு ஏன், பாலா செய்த தவற்றைப் பெரிதாக ஏன் வீட்டிலிருப்பவர்களே எடுத்துக்கொள்ள மாட்டுகிறார்கள் என்பதும் தெரியவில்லை.

இதற்கிடையில் அனிதாவின் அலப்பறை வேறு. ‘நான் போட்டியாளரே இல்லப்பா போங்க’ என்று ஒரு நாடகம். ‘என்னம்மா இப்படி பண்ணுறீங்களேமா..’ பாடலோடு ஆரம்பமான அறுபதாம் நாள், அனிதாவின் மதிப்பீடு காட்சியில் தொடங்கியது. நிச்சயம் சனம், பாலா ப்ரோமோல வந்திருப்பாங்க என அவ்வளவு கச்சிதமா கணிச்சுட்டாங்கப்பா. ஆனா, குறை மட்டும் மத்தவங்கள சொல்லவேண்டியது. என்னம்மா இப்படி பண்ணுறீங்களேமா!

Bigg Boss 4 Tamil Vijay Tv Shivani Ramya Archana Nisha Anita review Day 59
Bigg Boss 4 Tamil Vijay Tv Anita

யார் யாருக்கு என்ன விருது கொடுக்குறதுனு குழம்பிபோய்ட்டாங்க போல போட்டியாளர்கள். இத்தனை நாள் அன்பு அன்பு என்று அன்பின் பின்னால் சென்றுகொண்டிருந்த அர்ச்சனாவுக்கு ‘அன்பின் உருவம்’ விருது. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் அர்ச்சனாகுமாரி! ப்ப்பா என்ன ஒரு சந்தோஷம்! ஆனால், இதன் அடிப்படையில் பாலாவுக்கு ‘எப்போதும் நேர்மையானவர்’ விருது கொடுத்தார்கள்? நேர்மைக்கு வந்த சோதனை!

நாளுக்கு நாள் சனம் மீதான வெறுப்பை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்திக்கொண்டு வருகின்றனர் ஹவுஸ்மேட்ஸ். முதல் நாமினேஷனிலிருந்து தொடர்ந்து மக்களைச் சந்தித்துப் போராடிக்கொண்டிருக்கிறார் சனம். இன்னும் எவ்வளவு அடிகளைத் தாங்குகிறார் என்பதைப் பார்ப்போம்!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss 4 tamil vijay tv sanam bala aari archana nisha anita review day 60

Next Story
விவசாயிகளின் குரலுக்கு செவி சாய்க்க வேண்டும் – நடிகர் கார்த்திfarmer protest, actor karthi support to delhi farmers protest, டெல்லி விவசாயிகள் போராட்டம், பேச்சுவார்த்தை தோல்வி, farmers protest in delhi, farmers protest in punjab, farmer protest in haryana, நடிகர் கார்த்தி அறிக்கை, actor karthi statement, வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம், farmer protest today, farmer protest latest news, farmers protest, farmers protest today
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com