/tamil-ie/media/media_files/uploads/2020/11/Saravanan-and-Bala-updated.jpg)
Bigg Boss 4 Tamil Vijay Tv Bala
Bigg Boss 4 Tamil Review Day 30: வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து ஒருவரை மட்டும் 'கார்னர்' செய்வதற்கான ஆதாரமாகவே இருந்தது நேற்றைய எபிசோட். பாலாவின் தந்திரம், ரம்யாவின் நேர்மை, சுச்சியின் சூழ்ச்சி என ஒரே ஒரு கோர்ட் சீனில் அத்தனை பேருடைய முகத்திரையும் கிழிந்தது. இறுதியில் சனம் ஷெட்டி 'டெப்ரேஷனுக்கு' ஆளாக்கப்பட்டதுதான் மிச்சம் (இதற்கு அவர் வெளியேவே இருந்திருக்கலாமோ!). சரி வாங்க முப்பதாம் நாளின் வாதங்களை அலாசுவோம்!
'ஹே வெற்றிவேலா..' பாடலோடு தொடங்கிய நாள், ஷிவானியின் 'நவரச' வகுப்போடு பயணித்தது. சும்மா சொல்லக்கூடாது, ஆரி மற்றும் சுரேஷ் தாத்தாவின் நடிப்பு ஆஹா! ஓஹோ! ரகம்தான். நடிகர்களாயிற்றே.. சும்மாவா பாஸ்! இதனைத் தொடர்ந்து சுரேஷ் தாத்தாவிடம் சமாதானம் பேசச் சொல்லி சம்யுக்தா பாலாவை வலியுறுத்திக்கொண்டிருந்தார். ஸ்டார்டிங்லாம் நல்லாதான் இருக்கு ஆனா, ஃபினிஷிங் சரியில்லையேப்பா! வெள்ளைக்கொடி காட்டினார்களா என்பது நமக்குக் காட்டப்படவில்லை. அப்படி நடந்திருக்கவும் நடந்திருக்காது என்பது நம் கணிப்பு! (என்ன சொல்லுறீங்க!)
/tamil-ie/media/media_files/uploads/2020/11/Sanam-and-Bala-updated-300x167.jpg)
நேற்றைய லக்ஜூரி பட்ஜெட் டாஸ்க், நீதிமன்றம் செட்டப்பில் நடைபெற்றது. (கொஞ்சமும் சம்பந்தமே இல்லையே பாஸு). அதிலும் அதற்கு நீதியாக சுச்சியை போட்டதெல்லாம் பிக் பாஸ் அட்ராசிட்டியின் உச்சம். என்ன செய்ய! இந்த டாஸ்க்கே சுச்சிக்காகதானே ஏற்பாடு செய்யப்பட்டது. கஷ்டகாலம்!
கன்டென்ட் கிடைக்காமல் வறுமையில் வாடிக்கொண்டிருந்த பிக் பாஸ், முன்பு நடந்த சண்டைகளை விவாதம் செய்து முடிந்தால் தீர்த்துக்கொள்ளுங்கள், இல்லையென்றால் அதை வைத்து இப்போதாவது நல்ல கன்டென்ட் கொடுங்கள் என்றிருப்பார் போல. ஒரே அறைதான், கன்டென்ட் கொடுப்பதில் நீ நான் என்று போட்டி. என்னதான் சொல்லுங்க, அவ்வளவு ரணகளத்துலயும் ரமேஷ், நிஷா, ஆஜீத், சோம் இவர்களெல்லாம் இளைப்பாறிக்கொண்டிருந்தது வேற லெவல் (இதுக்கு நீங்க எங்ககூட உட்கார்ந்து டிவில வேடிக்கை பார்த்திருக்கலாம் ப்ரோஸ்!)
/tamil-ie/media/media_files/uploads/2020/10/Aajeeth-resized-300x167.jpg)
'அய்யயோ அவசரப்பட்டு சனம், பாலாவின் புகார் கடிதத்தை ஜூம் செய்து கட்டிவிட்டோமோ!' என்கிற பதற்றத்தில் நேற்றைய முதல் ப்ரோமோவின் காணொளியை வேரோடு அழித்துவிட்டார் பிக் பாஸ். ஆனால், நம்ம பசங்க சும்மா விடுவார்களா. ஸ்க்ரீன்ஷாட் எடுத்து சமுக வலைத்தளங்களைப் பரபரப்பாக்கிவிட்டார்களே! என்னதான் இருந்தாலும், பாலா சனம் பற்றி அதுபோன்ற விமர்சனம் வைத்தது கண்டிக்கத்தக்கது. அப்படியென்றால் மூன்றாம் சீசனில் சரவணனை வலுக்கட்டாயமாக வீட்டைவிட்டு வெளியேற்றியதும் இதேபோன்ற ஓர் காரணத்திற்காகத்தானே? அவர் என்றைக்கோ செய்த தவறை சபை முன்பு ஒத்துக்கொண்டார். அதைத் தவறும் என்றும் மன்னிப்புக் கேட்டார் சரவணன். அதை சேனல் தரப்பும் 'கட்' செய்யாமல் அப்படியே ஒளிபரப்பியது. ஆனால், பாலா தற்போது வீட்டினுள் இருக்கும் சக போட்டியாளரைத் தவறாகப் பேசியிருக்கிறார். ஏன் பாலாவிடம் மட்டும் இந்த பாரபட்சம்? இதற்கு ஹவுஸ்மேட்ஸ் யாரும் எதுவும் சொல்லாமல் இருப்பது, தவறுக்குத் துணை போவதுபோலத்தான் இருக்கிறது.
பி.கு: சனம் ஷெட்டி 'மிஸ் சவுத் இந்தியா' பட்டம் பெற்றது சில 'அட்ஜஸ்ட்மென்ட்' செய்ததால்தான் என்று வீட்டினுள் அனைவரிடமும் பகிர்ந்து இருக்கிறார் பாலா. இதுவே தன் புகார் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் சனம். ஆனால், இந்தக் காட்சி தொலைக்காட்சி தரப்பிலிருந்து ஒளிபரப்படவில்லை. ப்ரோமோவில் இருந்த கன்டென்ட்டையும் நீக்கிவிட்டனர்.
இந்த வாதங்கள் வளர்ந்து, நீதிமன்றம் வெளியே வரை நீண்டது. அனைவரும் சேர்ந்து ஒரு ஆளைக் குறிவைத்து டார்கெட் பண்ணுவதெல்லாம் ஒருதலைபட்சத்தின் உச்சம். சனம் ஷெட்டிக்கு ஆதரவாகப் பேசியவர்களின் வாயடைக்கப்பட்டதும் டூ மச். பாலாவின் வார்த்தைகளில் வன்முறை இருப்பதுத் தெரிந்தும் சம்யுக்தா முதல் அர்ச்சனா வரை எதற்காக அனைவரும் சப்போர்ட் செய்கிறார்கள். ச்சே! இந்த இடத்தில் வனிதா இல்லாமல் போய்விட்டாரே! சும்மா புகுந்து விளையாடிருப்பாங்க! (ஆமா, மதுவுக்கு நடந்ததும் மறக்கவில்லை)
/tamil-ie/media/media_files/uploads/2020/11/vanitha-vijayakumar1-300x167.jpg)
சுச்சியின் தீர்ப்பில் சூழ்ச்சி மட்டுமே இருந்தது. சனம் ஷெட்டியின் புகாரில் பெண்ணுக்கு நடந்திருக்கும் அநீதி குறிப்பிடப்பட்டிருந்தும், அதற்கு எதிராகத் தீர்ப்பு வழங்கியது, பாலாவோடு கூட்டுச் சேரும் நோக்கம் மட்டுமே இருந்ததது தவிர, நீதி இல்லை. அதேபோல சனம் ஷெட்டியா சுரேஷா என்கிற ஆப்ஷன் வந்தபோது, தயக்கமின்றி சனம் ஷெட்டியைத் தேர்ந்தெடுத்தார் சுச்சி. பற்றாததுக்கு அப்போது சனம் ஷெட்டி பக்கம் பாலா ஆதரவாளராக ஆஜராகியிருந்தார். சொல்லவா வேண்டும்? ஆக! அனைவரும் தங்களுடைய விளையாட்டைச் சிறப்பாகவே விளையாடிக்கொண்டிருக்கின்றனர். (நடக்கட்டும் நடக்கட்டும்)
சனம் ஷெட்டி பக்கம் பாலா நின்றது, சனம் ஷெட்டியை வெற்றிபெற வைக்கவே என்கிற பாலாவின் அந்த கான்ஃபிடன்ஸ் சாரி சாரி ஓவர்கான்ஃபிடன்ஸ், உண்மையில் கொஞ்சம் ஓவர்தான். ஆனால், அது நிதர்சனமும்கூட. எப்போது ஆரி பேசினாலும், ஹவுஸ்மேட்ஸ் காதுகள் மூடிக்கொள்ளும். ஆனால், இம்முறை ரம்யாவின் நெற்றியடி பாயின்ட்டுகள் அனைத்தும், தரம்!
ஒருதலைபட்ச தீர்ப்பு, க்ரூப்பிஸம் எனப் பரபரப்பாக நகர ஆரம்பித்திருக்கும் இந்தத் தருணத்திலும், சிலர் மிக்ஸர் சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றனர். அதில் ஒருவர் இந்த வாரம் நாமினேட் வேறு ஆகியிருக்கிறார் (சோம்தான்). அவர்களும் களத்தில் இறங்கி விளையாட ஆரம்பித்தால், சனம் ஷெட்டியின் மீது இருக்கும் பார்வை மாறுபடலாம். பார்ப்போம் (அதுக்கு எதுவும் வாய்ப்பு இருப்பதுபோல தெரியவில்லை)!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.