உண்மையிலேயே இவர்கள் விளையாடத்தான் வந்தார்களா? – பிக் பாஸ் விமர்சனம்

பாட்டியை சந்தோஷப்படுத்துங்க எனச் சொன்னால், பாட்டியை உச்சபச்ச கோவத்தில் ஆழ்த்தினார் பாலா ப்ரோ.

By: November 12, 2020, 2:03:47 PM

Bigg Boss 4 Tamil Review Day 38 : எத்தனையோ காமெடி நடிகர்களை இந்த பிக் பாஸ் வீட்ல பாத்துருக்கோம், ஆனா சுச்சி போல யாரும் சீரியஸா காமெடி செஞ்சு பார்க்கல. தன் கற்பனைத் திறனையெல்லாம் அவிழ்த்துவிட்டு, நல்லாவே கேம் ஆடுறாங்கப்பா. சிரிக்கிறதா இல்லை சிரிச்சு சிரிச்சு அழுவுறதா என்பதுதான் டவுட். சும்மாவே இந்த சீசன் போட்டியாளர்களுக்கு விளையாட்டு விதிமுறைகள் புரியாது, இதுல ‘திருட்டுபோகும்’ விளையாட்டு வேறு. சரிதான்! அப்படி என்னதான் பிரச்சனை வீட்டுக்குள்ள!? வாங்கப் பார்த்திடலாம்.

முப்பத்து ஏழாம் நாளே அவ்வளவு கன்டென்ட் இருக்கு பாருங்க என நேற்றைய எபிசோடில் பாதி நேரம் முந்தைய நாள் அட்ராசிட்டிகளைத்தான் ஒளிபரப்போனார் பிக் பாஸ். ‘பத்திரம் திருடுபோய்டுச்சு’ என்றதும் ஆள் ஆளுக்கு ஒருவரை ஒருவர் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்த்து வந்தனர். “எனக்குச் சிரிப்பை கன்ட்ரோல் பண்ணவே தெரியாது” என அனிதா நீண்ட உரையின்போது சிரித்ததற்கு விளக்கம் அளித்தவர், இந்த டாஸ்க்கில் திருடியாக இருந்துகொண்டு எப்படிச் சமாளிப்பாரோ என்ற எதிர்பார்ப்பு இருந்தது. பரவாயில்லை, நல்லாவே சமாளிச்சாங்கப்பா! (அவங்க டாஸ்க் ஆச்சே.. பாயின்ட்ஸ் போயிடும்ல!)

பத்திரத்தை யார் திருடுனாங்க என்பதைக் கண்டறிய ஒவ்வொருத்தருடைய இடத்தையும் செக் பண்ணனும் என முடிவு செய்யப்பட்டபோது, கேபி தானாக முன்வந்து அவர் இடத்தை யாரும் தொடக்கூடாது என்று கேட்டுக்கொண்டார். சரிம்மா! நாங்க தொடல, நீயே காட்டு என்றபடி ஒவ்வொருவருடைய இடத்தையும் ஆராய்ந்தனர்.

ஒருபக்கம் ஆராய்ச்சி வேலைகள் போய்க்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் பக்காவாகப் பிளான் போட்டு பத்திரத்தை சோமிடமிருந்து திருடினார் பாலா. மற்றொரு இடத்திலிருந்து பத்திரத்தைத் திருடுவதற்கே கேம் ரூல் இல்லை. இந்த லட்சனத்தில் திருடியதை பகிர்ந்துகொண்டு, அதற்காக கேபி, அர்ச்சனாவிடம் வாதங்கள் வேறு. என்ன பாலா இதெல்லாம்? எத்தனை முறைதான் உங்களுக்கும் வார்னிங் கொடுப்பாங்க! அதுசரி! பாலாவைச் சொல்லி என்ன பயன். ஏற்கெனவே சனம் விஷயத்தில் பாலா செய்த தவருக்கே (கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததற்கு) ‘ரெட் கார்டு’ கொடுக்கப்படவில்லை. கன்டென்ட் வேணும், பாலா வேண்டும் என்று ஒருதலைப்பட்சமாக இருக்கும் பிக் பாஸிடம் மட்டும் எப்படி முடிவு கிடைக்கும்! எல்லாம் பிக் பாஸ் மகிமை.

இத்தனை விஷயங்களுக்கு மத்தியில் தனியாக அமர்ந்து தன் பப்புவைப் பற்றி நினைத்து ஏங்கிக்கொண்டிருந்தார் அனிதா! (கொளுத்திப்போடுவோம் நாமளும்!)

‘யாருடா என் மெத்தைக்கு அடியில பத்திரத்தை வெச்சது?’ என சோம் கொடுத்த ட்விஸ்ட் செம்ம பிளே. ஸ்வீட்டா ஆரம்பமான இந்த விவாதங்கள் ஷிவானிக்கும் கேபிக்கும் அடிதடி (கொளுத்திப்போடுவோம்) வரை நீண்டது. இங்க திடீருனு ‘ஹானஸ்டி’ எப்படி வந்தது என தெரியவில்லை. இதுல சம்பந்தமே இல்லாம ஆஜராகி மூக்கை உடைத்துக்கொண்டார் சுச்சி. அவர் கொளுத்தி போட்டபிறகு கேபியிடம் சண்டைபோட்டுக்கொண்டிருந்தார் பாலா. இந்த ஹானஸ்ட் பத்தி பேசலாம் சுச்சிக்கு என்ன தகுதி இருக்கோ தெரியல. உங்க ஹானஸ்டி பத்திதான் நீதிமன்ற டாஸ்க்லயே பார்த்தோமே. ப்ப்பா.. என்ன ஒரு கோபம்! என்ன ஒரு நடிப்பு!

வழக்கமாக முந்திரி சகோதரிகள்தான் (சனம், அனிதா) வாக்குவாதத்தின்போது தலையாட்டிவிட்டு, சிறிது நேரம் கழித்து வந்து அதே விஷயத்துக்குச் சண்டை போடுவார்கள். இப்போது அந்த லிஸ்டில் பாலாவையும் இணைக்க வேண்டியதுதான். உண்மையிலேயே ரியோ கூறியதுபோல ‘வெல்கம் டூ பிக் பாஸ்’ மோட் போலதான் இருந்தது.

இந்த சண்டைக்கு இடையில சனம் குரலை உயர்த்த, ‘எனக்காகப் பேச எனக்குத் தெரியும், நீங்கக் கொஞ்சம் ‘பீப்’ போறீங்களா’ என்ற பாணியில் பதிலளித்த கேபிக்கு ‘க்ளாப்ஸ்’. இனிமே பாலாவிடமிருந்து தள்ளியே இருக்கனும் என முடிவெடுத்தாரோ என்னவோ சம்யுக்தா ஆளையே காணோம். சுச்சி ட்ரிகர் செய்கிறார் என்பதை வெளிப்படையாகச் சொல்லி ஹின்ட் கொடுத்துச் சென்றார் சாம்.

‘அடிடா நையாண்டி..’ பாடலோடு விடிந்த முப்பத்தி எட்டாம் நாள், வெற்றிலை போட்டுக்கொண்டே பேசும் டாஸ்க்கோடு ஆரம்பமானது. இவர்கள் சாதாரணமாகப் பேசினாலே நமக்குப் புரியாது. இதுல இப்படிப்பட்ட டாஸ்க் வேறயா? நீங்க விளையாடலைனா வீட்டை  அனுப்பிடுவோம்னு பிக் பாஸ் மிரட்டியிருப்பாரு போல, நேற்று சனம் ஷெட்டி விளையாட்டில் ஐக்கியமானார். அவரவர்களின் கேரக்டருக்கு ஏற்ற காஸ்டியூம்களை கொடுத்தார் பிபி. இதெல்லாம் கொடுத்து என்ன பயன்? யாரும் உருப்படியாக விளையாடவில்லையே! ரவா லட்டுவையும், முறுக்கையும் செய்து சாப்பிட்டனர். அதுக்குதான் இவங்க கரெக்ட்!

பாட்டியை சந்தோஷப்படுத்துங்க எனச் சொன்னால், பாட்டியை உச்சபச்ச கோவத்தில் ஆழ்த்தினார் பாலா ப்ரோ. இதெல்லாம் என்ன கணக்கு பிபி? ஒரு நியாயமான தீர்ப்பை இன்னிக்காவது சொல்லுங்க!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Bigg boss 4 tamil vijay tv sanam gaby bala shivani archana day 38 review

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X