/tamil-ie/media/media_files/uploads/2020/10/Aajeeth-resized.jpg)
Bigg Boss 4 Tamil Vijay tv Aajeeth
Bigg Boss 4 Tamil Review Day 20: 'சத்தியமா நீ எனக்குத் தேவையில்ல..' (யாரை சொல்லுறீங்க பாஸ்?) என்ற பாடலோடு ஆரம்பமானது இருபதாம் நாள். கமலின் எபிசோட். நிச்சயம் 'போட்டு வாங்குறது' நிறைய இருக்கும் என்கிற எதிர்பார்ப்பிலிருந்தால், நம்மைத்தான் டீலில் விட்டுவிட்டுச் சென்றுவிட்டார் பிக் பாஸ்.
'டாம் அண்ட் ஜெர்ரி' போல் அடித்துக்கொண்டு இருந்த பாலா மற்றும் சனம், மிகவும் நெருங்கிய நண்பர்களாக ஒரே நாளில் மாறிவிட்டனர். (சனம் ஷெட்டி போட்ட அந்த ப்ரொபோஸ் பிளான் ஒர்க் அவுட் ஆகிடுச்சு). 'எனக்கு கேப்டன்சி டாஸ்க்' வேண்டாம் என்று சனம் சொல்வதும், அதற்கு பாலா அட்வைஸ் கொடுப்பதும்.. இப்போவே கண்ணைக் கட்டுதே!
வீட்டில் ஆஜீத் என்று ஒரு நபர் இருப்பது கேபி மற்றும் பாலா மூலமாகத்தான் தெரிகிறது. 'இந்த வீட்டில் இருக்கும் ஒருவரை பாலாவுக்கு பிடிச்சிருக்காம்' என்று ஆஜித்திடம் கேபி கூற, 'ஷிவானி' என்று யாருக்குமே தெரியாத விஷயத்தைக் கண்டுபிடித்தார் ஆஜீத். 'என்னுடைய வயசுல இருக்கிற ரெண்டு பேரு கேபி, ஷிவானி. கேபி என் தங்கச்சி போல' என்றுகூறி கேபியின் மனதை பாலா உடைத்துவிட, 'ஹேய் நான் அப்படியெல்லாம் நினைக்கல. நான் ஃபிரண்டுதான் என்று கேபி வாக்குவாதத்தில் இறங்கினார். 'உங்கள் போதைக்கு நான் உறுகாயா' என்பதுபோல் அப்பாவியாகப் பார்த்து, இல்லை மாட்டிக்கொண்டிருந்தார் ஆஜீத்.
/tamil-ie/media/media_files/uploads/2020/10/Bigg-Boss-Tamil-4-1-300x167.jpg)
அர்ச்சனா, பாலா 'சிறுபிள்ளைத்தனமான' சண்டை இப்போதைக்கு முடிவு வராது போல. தன்னை அனைவரும் சின்ன பையன் என்று நினைத்து, 'வாடா போடா' என்று சகஜமாகக் கூப்பிடுகிறார்கள், குழந்தை என்று வேற சொல்கிறார்கள். 'வாங்க போங்க' என மரியாதையாகக் கூப்பிடச் சொன்னால் அனைவரும் தன்னை ஒரு பெரிய மனுஷன் என்று ஒத்துக்கொள்வார்கள் என பாலாவின் சிந்தனையில் திடீரென்று உதித்திருக்கும்போல. திடீரென்று அனைவரையும் சபைக்கு அழைத்து, தனக்கு மரியாதைக் கொடுக்கும்படி மிரட்டினார். (இதெல்லாம் கேட்டு வாங்கக்கூடாது தலைவரே!) ஆனால், பாலா சொன்னதை யாரும் கேட்ட மாதிரி இல்லை. 'பேசவே மாட்டோம் கவலைப்படாதடா' என்ற தொனியில் அமர்ந்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து வேல், நிஷா தீவிர டிஸ்கஷனில் ஈடுபட, கமலின் என்ட்ரி வந்தது. வழக்கமான அரசியல் 'பன்ச்'சோடு ஆரம்பமானது கமலின் பேச்சு. கடந்து வந்த வாரம் எப்படி இருந்தது என்று கேள்வி கேட்க, ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் தாங்கள் கற்றுக்கொண்ட பாடத்தைப் பற்றிப் பகிர்ந்துகொண்டனர். 'நல்லவனா இருக்கிறதைவிட வல்லவனா இருக்கனும்' என்கிற தத்துவத்தை சொல்லி தான் இனி அட்வைஸ் கொடுக்கப்போவதில்லை என்பதை உறுதிசெய்தார் (சொல்லிக்கவேண்டியதுதான்) ஆரி. ஆனால், எந்த சூழ்நிலையிலும் நேர்மையாய் இருப்பதற்கு என்றைக்குமே மரியாதை உண்டு என்று ஆரிக்கு கவுன்ட்டர் கொடுத்தார் கமல்.
'நாம் எது சொன்னாலும் அது சொல்றவங்களுக்கு மட்டும் புரியக்கூடாது, கேட்கிறவங்களுக்கும் புரிகிற மாதிரி சொல்லணும்ங்குறதை புரிஞ்சுக்கிட்டேன்' என்று பாலா புலம்ப, அர்ச்சனாவின் ரியாக்ஷன் - நோ கமென்ட்ஸ். என்ன இருந்தாலும் தொகுப்பாளர் அர்ச்சனா, இப்போதும் தொகுத்துக்கொண்டே இருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2020/10/Bigg-Boss-Promo-Vijay-TV-Bigg-Boss-tamil-4-Sanam-Shetty-Suresh-Chakravarthy-300x167.jpg)
'இது எப்போடா நடந்துச்சு' என்பதுபோல இருந்தது, சுரேஷிடம் சனம் ஷெட்டி மன்னிப்பு கேட்ட விஷயம். விளையாட்டிற்குச் செய்த தவற்றுக்கு சனம் ஷெட்டியிடம் சுரேஷ் மன்னிப்பு கேட்டுவிட்டார். ஆனால், சனம் மரியாதைக் குறைவாகப் பேசியதற்கு மன்னிப்பு கேட்கவில்லை என்று ஏற்கெனவே நாம் டிஸ்கஸ் செய்திருந்தோம். அதிலும், இது ஏற்கெனவே உள்ளுக்குள் இருக்கும் வெறித்தனத்தின் வெளிப்பாடு என்பதையும் சொல்லியிருந்தோம். அதை வேல்முருகன் வாயால் வெளியே வர, சனம் ஷெட்டியும் நேற்று ஒப்புக்கொண்டார். ஆனால், நமக்குத் தெரியாமல் ஏகப்பட்ட சம்பவங்கள் பிக் பாஸ் வீட்டினுள் நடந்துகொண்டு இருக்கிறது. ஏதோ தினமும் காலையில் ஷிவானிக்கு கடிதம் வருகிறது என்கிறார்கள். இதுபற்றியும் நமக்கு எந்த தெளிவும் இல்லை. ஆகமொத்தம் இந்த பிக் பாஸ் சீசன் பல 'கட்டிங்கோடு' நகர்ந்துகொண்டிருக்கிறது.
ஒருதலை பட்சமாக ஏன் அனைவரும் சுரேஷை மட்டும் டார்கெட் செய்து அவரை மட்டும் மன்னிப்புக் கேட்கச் சொன்னார்கள் என்றதற்கு அனைவரின் முகத்திலும் ஆச்சரியக்குறி. என்ன நடந்தது என்பதை விசாரிக்காமல் எந்த ஒரு முடிவையும் எடுக்கக்கூடாது என்பதை உணர்த்தியது இந்த நிகழ்வு. பெண்களுக்கு ஆண்கள் செய்யும் வன்முறை தொலைக்காட்சிகளிலாவது தவிர்த்திருக்கலாம் என்று கமல் கூறிய பாயின்ட் குறிப்பிடத்தக்கது.
/tamil-ie/media/media_files/uploads/2020/10/Shivani-1-268x300.jpg)
சோம், சம்யுக்தா, ரமேஷ், ஆஜீத் ஆகியவர்கள் இருக்கும் இடமே தெரியவில்லை என்று கொளுத்திப்போட்டுவிட்டுச் சென்றுவிட்டார் கமல். இனிமேலாவது இவர்களுடைய ஆட்டம் தொடங்கும் என்று எதிர்பார்க்கலாம். வீட்டை விட்டு வெளியேறவேண்டும் என்று பாலாவிற்கும், வீட்டில் இருக்கவேண்டும் என்று சுரேஷுக்கும் அதிகப்படியான வாக்குகள் கிடைத்தன. 'சண்டை போடுவாங்களோ' என்கிற பயத்திலேயே அனிதாவிற்கு வோட் போட்டார் சோம். (பாவம்பா நீ).
இறுதியாக பாலா இந்த வார எவிக்ஷனிலிருந்து காப்பாற்றிவிடப்பட, கமல் விடைபெற்றார். ஆனால், அதனைத் தொடர்ந்து வந்த சனம், ஆஜீத்தின் கலந்துரையாடலில் தலையும் இல்லை வாலும் இல்லை. கொஞ்சம் தெளிவாகச் சொல்ல்லுங்க பிபி.
இந்த வாரம் ஆஜித்தின் எவிக்ஷன் பாஸுக்கு வேலை இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். யாரும் இந்த வாரம் வெளியேற மாட்டார்கள் என்பதுதான் நம் கணிப்பு. பார்ப்போம் இன்று என்ன நடக்கிறது என்று. உங்களுடைய கருத்துக்களையும் எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.