scorecardresearch

வீட்டிற்குள் வில்லன் வெளியே ஹீரோ.. அப்படி என்னதான் செய்தார் ஆரி?

Bigg Boss 4 Title Winner Aari ‘குறைகூறி விளையாடுபவர்’ என்கிற பெயர்தான் பரிசாய் கிடைத்தது.

வீட்டிற்குள் வில்லன் வெளியே ஹீரோ.. அப்படி என்னதான் செய்தார் ஆரி?
Bigg Boss 4 Title Winner Journey of Aari

Bigg Boss 4 Tamil Winner Aari : ஒருவழியாக மக்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியடைந்துவிட்டது. நீண்ட நாள் போராட்டத்தைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 4-ன் டைட்டில் வின்னராக மகுடம் சூட்டப்பட்டிருக்கிறார் ஆரி அர்ஜுனன். அதுமட்டுமின்றி 50 லட்சம் ரொக்கப் பரிசையும் தன் வசமாக்கியுள்ளார். இந்த நிகழ்ச்சியினால் கிடைத்த பெயர், புகழ் மற்றும் பணத்தை நிச்சயம் நன்முறையில் ஆரி உபயோகிப்பார் என்கிற நம்பிக்கை மக்களிடத்தில் உள்ளது. முன்பு எப்போதுமில்லாத அளவிற்கு பிக் பாஸ் மூலம் மக்களிடத்தில் மாஸ் ரீச் எப்படி ஆரிக்குக் கிடைத்தது? பார்ப்போம்!

இந்த சீசனில் பிரபலங்களின் தேர்வு சற்று வித்தியாசமாகவே இருந்தது. அதிலும் இந்த சீசனில் இளைய வட்டாரங்கள் அதிகம். மாடலிங், ஆங்கரிங் என ஒரே துறையைச் சார்ந்த பலர் வீட்டிற்குள் உலா வந்தபடி இருந்தனர். சுவாரசியமான தேர்வு என்றாலும், மீடியாவைச் சார்ந்த ஏராளமானவர்கள் இருந்ததால் கேமரா கான்ஷியசோடு இருந்தனர். இதுவே நிகழ்ச்சியின் சுவாரசியத்தைக் குறைத்தது.

Bigg Boss 4 Title Winner Aari Tamil Vijay Tv Journey of Aari
Bigg Boss 4 Tamil Ramesh Archana Nisha

ஏற்கெனவே தங்களுக்கு இருக்கும் நற்பெயர் போய்விடக்கூடாது என்கிற பயத்தில் நிஷா, ரியோ உள்ளிட்ட சிலர் இருந்தனர். ஷிவானி, ஆஜீத், கேபிரியல்லா, சோம் சேகர் உள்ளிட்ட சில போட்டியாளர்கள் அவப்பெயர் எதுவும் வந்துவிடக்கூடாது என்கிற நோக்கத்தில் பெரிதாக எந்தவித கன்டென்ட்டும் கொடுக்காமல் வீட்டிற்குள் இருந்தனர். ஆனால், ஆரி, பாலா, அர்ச்சனா, சனம் ஷெட்டி, சுரேஷ் சக்ரவர்த்தி, அனிதா சம்பத் உள்ளிட்டவர்கள்  எதைப்பற்றியும் கவலைப்படாமல் தங்களின் கருத்துக்களைத் தைரியமாக முன்வைத்தனர். அதிலும் ஆரி, சமூக நலனையும் மனதில் வைத்து ஒவ்வொரு செயலையும் செய்தது மற்ற போட்டியாளர்களைவிடத் தனித்துத் தெரியக் காரணமாக அமைந்தது.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது முன்னிலையில் களமிறங்கிப் போராடியது, ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுவைத்து கின்னஸ் சாதனை படைத்தது என சமூக நலனில் அக்கறையுள்ள ஆரி, பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றதிலிருந்து கிடைக்கும் இடத்திலெல்லாம் சமூகம் சார்ந்த தன் கருத்துகளை முன்வைத்தார். அதுமட்டுமின்றி, வீட்டில் இருப்பவர்களின் நல்லொழுக்கத்தையும் முன்னிலைப்படுத்த நினைத்தார். இதுதான் ஆரிக்கு எதிராக சக போட்டியாளர்கள் திரும்புவதற்கான காரணமாய் அமைந்தது. மற்றவர்கள் செய்யும் தவற்றைத் திருத்தவேண்டும் என்று நினைத்தவருக்கு, ‘குறைகூறி விளையாடுபவர்’ என்கிற பெயர்தான் பரிசாய் கிடைத்தது. வீட்டினுள் இருப்பவர்கள் எந்த அளவிற்கு ஆரி மீது கடுப்பானார்களோ அதைவிடப் பன்மடங்கு அன்பு வீட்டிற்கு வெளியே மக்களிடத்தில் பெருகியது.

Bigg Boss 4 Title Winner Aari Tamil Vijay Tv Journey of Aari
Bigg Boss 4 Title Winner Aari Runner up Balaji

வெளியே ஆயிரம் செடிகளை நட்டு கின்னஸ் சாதனை புரிந்தவர் வீட்டிற்குள் கொடுக்கப்பட்ட ஒற்றை செடியைப் பாதுகாக்காமல் போனது, ஒருமுறை சாப்பாட்டை வீணாக்கியது என ஆரி மீதும் குறைகூற ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், மற்றவர்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் ஆரியிடம் குறை என்பது மிகவும் குறைவே. நீண்ட நேரம் பேசுகிறார் என்கிற குற்றச்சாட்டு இருந்தாலும், தன் நோக்கத்தை எப்படியாவது தெளிவுபடுத்தவே அவ்வளவு சிரத்தையை மேற்கொண்டார். இது மக்களுக்கு புரிந்தாலும், சுவாரசியமான என்டெர்டெயின்மென்ட் என்பது மிக மிகக் குறைவாகவே ஆரியிடம் இருந்தது.

தான் யார், எதற்காக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தோம், மற்றவர்களை சிறிதளவும் புண்படுத்தக்கூடாது என்கிற நோக்கம், தான் செய்த ஏதோ ஒரு விஷயம் தவறு என்று புரிந்துவிட்டால் நேரம், காலம், ஆள் என எதையும் பாராமல் மன்னிப்பு கேட்கும் பண்பு முதலிய அனைத்திலும் தெளிவான பார்வை ஆரியிடம் இருந்தது. குறிப்பாக பாலாஜி முருகதாஸின் வன்முறைக்கு அமைதியாகவும் தெளிவாகவும் தகுந்த பதிலடி கொடுத்த விதம் அனைவரையும் வியக்கச் செய்தது. இதுவே பெரும்பாலான மக்களின் மனதில் இடம் பிடித்ததற்கான காரணம். ஒன்றல்ல இரண்டல்ல கிட்டத்தட்ட 10 கோடி வாக்கு வித்தியாசத்தில் ஆரி வெற்றி பெற்றிருக்கிறார். அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிவாகை சூடிய முதல் பிக் பாஸ் கன்டெஸ்டென்ட் ஆரி.

மக்கள் ஆதரவை வெள்ளம் போல் பெற்றிருக்கும் ஆரி மீது இப்போது எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இதனை எப்படிக் கையாளப்போகிறார் என்பதிலும் மக்களின் எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்து வருகிறது. இப்படி ஏராளமான எதிர்பார்ப்புகளை நல்ல விதத்தில் ஆரி பூர்த்தி செய்வாரா?

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Bigg boss 4 title winner aari tamil vijay tv journey of aari

Best of Express