Bigg Boss 5 Tamil Akshara Pavani Isaivani Annachi Tamil News : ‘எங்கே தேடுவேன் கன்டென்ட்டை எங்கே தேடுவேன்’ என்று குழம்பி இருந்திருப்பார் போல நம்ம பிக் பாஸ் எடிட்டர். அபிஷேக்கின் வெளியேற்றம் நாம் நினைத்தது போல கன்டென்ட் பஞ்சத்தை உருவாகியுள்ளது. இன்னும் சிறுபிள்ளைகள் போலவே அக்ஷராவும் பாவனியும் சண்டைபோட்டுக்கொள்கின்றனர். ‘வீட்டில் என்ன செய்கிறார் என்பது தெரியவில்லை என்று மதுமிதா ஐக்கியை சொன்னது.. உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்ச் செய்துகொண்டோம் மக்களே… சரி வாங்க இருக்கிற கன்டென்ட்டில் என்னவெல்லாம் நடந்தது என்று பார்க்கலாம்.
‘நெருப்பு கூத்தடிக்குது..’ பாடலோடு தொடங்கிய 22-ம் நாள், அந்த வாரம் முழுவதும் நெருப்பு நாணயம் வைத்திருப்பவரின் ராஜ்ஜியம் என்பதை சிம்பாலிக்காக சொன்னாராமா. அந்த வரிசையில் நெருப்பு நாணயம் இசைவாணியிடம் இருப்பதனாலும் அவர் சமையலறையை ஏற்கெனவே கட்டப்பாட்டுக்குள் வைத்திருந்ததாலும், கூடுதல் பொறுப்புகளைக் கொடுத்தார் பிக் பாஸ். இதனைத் தொடர்ந்து, ‘இந்த வாரம் இசைவாணியின் ஆட்டம் கொஞ்சம் ஓவராகதான் இருக்கும். செக் செய்து பார்க்கலாமா’ என்றபடி அண்ணாச்சி சகப்போட்டியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்.

அண்ணாச்சி சொன்னதுபோல இசைவாணிக்கு அதிகாரம் வந்ததும் போதும், எண்ணெய் வைத்துக்கொண்டே நேற்றைய பொழுதை கழித்தார். நமக்கே எண்ணெய்யை கேட்டுக் கேட்டு திகட்டிவிட்டது. பிறகு வித்தியாசமாக கேப்டன்சி டாஸ்க் வைக்கிறேன் என்கிற பெயரில் சிறுவயது விளையாட்டை அறிமுகம் படுத்தினார் பிக் பாஸ். ‘ஸ்க்விட் கேம்’ பார்த்திருப்பாரு போல நம்ம பிபி. வீட்டில் இருக்கும் அனைவருமே பங்குபெறுவது போல அமைக்கப்பட்டிருந்த இந்த விளையாட்டில் மது மற்றும் பிரியங்கா இறுதி வரை வந்தனர்.
பிறகு இருவருக்குமான போட்டியில், மதுமிதா வெற்றிபெற்று வீட்டின் புதிய தலைவரானார். அவ்வளவுதான், இந்த வாரம் நாமினேஷனிலிருந்து எஸ்கிப் ஆனார் மது. அதுமட்டுமின்றி, ஏற்கெனவே நாணயங்களை வைத்திருப்பவர்கள், மதுவிடம் கொடுத்து வீட்டின் தலைவராகலாம் என்கிற ஓர் மாபெரும் ஆஃபரை முன்வைக்க, அதனை நாணயங்கள் வைத்திருப்பவர்கள் நிராகரித்துவிட்டனர். பிறகு நாமினேஷன் ப்ராசஸ் தொடங்கியது.

சின்னப்பொண்ணு, அக்ஷ்ரா, பாவனி, சுருதி, இசைவாணி, அபிநய், அண்ணாச்சி, வருண் மற்றும் பிரியங்கா இந்த வாரம் நாமினேட் செய்யப்பட, இப்போதும் நாணயங்கள் வைத்திருப்பவர்களுக்கு ஒரு ஆஃபரை வழங்கினார் பிக் பாஸ். தங்களிடம் இருக்கும் நாணயத்தைப் பயன்படுத்தி நாமினேஷனிலிருந்து தப்பித்துக்கொள்வதுதான் அந்த சலுகை. ஆனால், இதையும் அனைத்து நாணயக்காரர்களும் நிராகரித்துவிட்டனர்.
மற்ற எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு, இந்த சீசனில் யார் யாரை நாமினேட் செய்தனர் என்பதை பகிர்ந்துகொள்கின்றனர். இதெல்லாம் விதிமீறல்கள் இல்லையா பிக் பாஸ்? ஏற்கெனவே இதை பேசியிருந்தாலும், கமல் இதைப்பற்றிக் கேட்க மறந்துபோய்விட்டார் போல. அதெல்லாம் இருக்கட்டும், இந்த நாமினேஷன் நேரத்தில் அக்ஷரா, பாவனி மீதுள்ள கோபத்தையும், பாவனி அக்ஷரா மீதுள்ள வெறுப்பையும் வெளிப்படுத்தி சிறுபிள்ளைபோல் சண்டைபோட்டுக்கொண்டனர். எப்போதுதான் வளருவீங்க மாடல்ஸ்?அதைவிட , ஐக்கி பெரி என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பது தெரியவில்லை என்கிற காரணத்திற்காக அவரை நாமினேட் செய்த மதுமிதா உண்மையில் என்ன செய்துகொண்டிருக்கிறார். இதெல்லாம் கேட்க ஆளே இல்லையா!

கூடவே இருந்தாலும், நடுநிலையை நின்று பாவனி மற்றும் சுருதியை நாமினேட் செய்தது ஐக்கி மட்டுமே. மற்றவர்கள் ஏதோ ஒரு காரணத்தைத்தான் சொன்னார்கள். என்னதான் ராஜு, பாவனியை பிடிக்கவில்லை என்று கூறியிருந்தாலும், அந்த கோபத்தை நாமினேஷனில் அவர் காட்டவில்லை. எந்த கன்டென்ட்டை காட்டுவது என்று தெரியாமல் புரியாமல் இருந்த எடிட்டருக்கு, இப்படிப் புரியாத சில கன்டென்ட்டுகள் சிக்கின. இன்னிக்காவது கன்டென்ட் சிக்குமா என்று பார்ப்போம்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil