/tamil-ie/media/media_files/uploads/2021/10/Bbd1.jpg)
Bigg Boss 5 Tamil Day 1 Review Raju Priyanka Akshara Thamarai Tamil news
Bigg Boss 5 Tamil Day 1 Review Raju Priyanka Akshara Thamarai Tamil news : பெயர்கள் மற்றும் முகங்களை ஞாபகம் வைத்துக்கொள்வதில் நமக்கு மட்டும்தான் சிரமம் போல என்று நினைத்துக்கொண்டிருந்தோம். ஆனால், நேற்றைய எபிசோடு பார்த்தபிறகு, உள்ளே இருப்பவர்களுக்கும் அதில் சிக்கல் இருப்பது தெரிகிறது. என்றாலும், முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு, நேற்றைய முதல் நாள் ரீலே மிகவும் பரபரப்பாக இருந்தது. இந்த முறை போட்டியாளர்கள் அனைவரும் போட்டிபோட வரவில்லை, போட்டியாகவே களமிறங்கியுள்ளனர். அதென்னப்பா போட்டி? வாங்கப் பார்க்கலாம்..
எங்கு சென்றாலும் இந்த தண்ணீர் பிரச்சனை ஏதாவதொரு ரூபத்தில் வந்துவிடும் போல. வழக்கம்போல பாத்ரூம் ஏரியாவில் நடந்த டிஸ்கஷனைதான் நமக்கு ஒளிபரப்பினார்கள். 'சுடுதண்ணீர் வருவதற்கு பைப்பை எந்தப் பக்கம் திருப்ப வேண்டும்? வலதுபுறமா? அல்லது இடதுபுறமா?' என்று இமான் அண்ணாச்சியே கன்ஃபியூஸ் ஆகிற அளவிற்கு இசைவாணிக்கு சந்தேகம். இவர்களைத் தொடர்ந்து, 'அக்ஷராவை பார்ப்பதற்கு அமலா போல் இருப்பதாக' ராஜு எடுத்துவிட்டார் ஒரு ரீல். இதைக் கேட்ட அக்ஷராவுக்கு 'அமலாவா அமலா பாலா' என்கிற குழப்பம். இதுமட்டுமா... கேப் கிடைக்கும்போதெல்லாம் ஹெவியான பெர்ஃபாமன்ஸ் கொடுத்து அசத்துகிறார் ராஜு.
/tamil-ie/media/media_files/uploads/2021/10/Bbr.png)
தாமரை செல்வியிடம் இருந்து விபூதி வாங்கி பூசிக்கொண்ட வருண், கொஞ்சம் சாப்பிடவும் செய்தது நிச்சயம் பலரின் பிரதிபலிப்பாகவே இருந்தது. பயபுள்ள சைலன்ட்டா ஸ்கோர் செய்துவிட்டார். பிறகு நாளையிலிருந்து உடற்பயிற்சி செய்யவேண்டும் என்று அக்ஷரா தீவிரமாக டிஸ்கஸ் செய்துகொண்டிருந்தார். இப்படியே அன்றைய இரவு நகர்ந்தது.
நம்ம பிக் பாஸும் வரவர ட்ரெண்டிங்கை பின்பற்ற ஆரம்பித்துவிட்டார். முதல் நாள் அனைவரையும் எந்திரிக்க வைப்பதற்கு அவர் ஒளிபரப்பிய பாடல், தற்போது ரீல்ஸ், ஷார்ட்ஸ் என எல்லாவற்றிலும் ட்ரெண்டிங்கில் இருக்கும் 'பேர் வெச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்..' பாடல்தான். ஆனால், பிக் பாஸ்தான் எழுவதற்கு லேட். நம் போட்டியாளர்கள் அனைவரும் பாடல் ஒலிப்பதற்கு முன்பிருந்தே அரட்டையடித்துக்கொண்டிருந்தனர்.
/tamil-ie/media/media_files/uploads/2021/10/BBr1.png)
சென்ற சீசனில், ரம்யா பாண்டியனை முதல் ஆளாக வீட்டின் கேப்டனாக்க வேண்டும் என்கிற நோக்கில், பிக் பாஸ் டாஸ்க் வைத்தார். அவருடைய கணக்குப்படி எல்லாமே நடந்தது. ஆனால், இம்முறை மக்கள், போட்டியாளர்களோடு பிக் பாஸும் கொஞ்சம் குழப்பத்தில்தான் இருக்கிறார் போல. அதனால்தான் என்னவோ எந்தவிதமான டாஸ்க்கும் வைக்காமல், வீட்டிற்கு கேப்டனாக யாரை வெற்றிபெற வைக்கலாம் என்கிற குழப்பத்தில் இருந்தவர், தானாகவே முன் வரும் தன்னார்வலர்களை அழைத்து, அவர்களையே பொறுப்புகளையும் தேர்ந்தெடுக்கச் சொன்னார் BB. ஆனால், நான்கு அணிகளாகப் பிரிவதற்கு பிக் பாஸ் எதற்கு ஐந்து பேரை கூப்பிட்டார்? ஒருவேளை, சின்னதாகத் தூண்டிவிட்டுப் பார்க்கலாம் என்று நினைத்திருப்பாரோ...!
என்றாலும், பாவனிக்காக நிரூப் மனமில்லாமல் விட்டுக்கொடுத்தார். 'இதற்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாமே' என்கிற மைண்ட் வாய்ஸ்தான் எழுந்தது. ராஜு, நமீதா, சின்னப்பொண்ணு மற்றும் பாவனி அணிகளின் தலைவராக இருக்க, தங்களின் அணி மெம்பர்களை தேர்ந்தெடுத்து தீவிரமாக டிஸ்கஸ் செய்து கொண்டிருந்தனர். இதுவரையில், யாரும் யாரையும் டாமினேட் செய்வதுபோன்று தெரியவில்லை. எல்லாம், கொஞ்சம் நாள்தான். பார்க்கத்தானே போறோம் இவர்களுடைய ஆட்டத்தை.
/tamil-ie/media/media_files/uploads/2021/10/Bbr2.png)
டாய்லெட் க்ளீனிங் அணியைத் தேர்வு செய்த ராஜு, தன் க்ரூப் மெம்பர்ஸ்களோடு சேர்ந்து க்ளவுஸ், சென்ட் மெழுகுவர்த்திகள் ஆகியவை வேண்டும் என்று பிக் பாஸிடம் கோரிக்கை வைத்தனர். சுத்தம், சுகாதாரம் பற்றிய டிஸ்கஷன் தற்போதைய காலகட்டத்தில் மிகவும் அவசியமான ஒன்றுதான். எந்த ஆங்கிளில் பாவனியை பார்த்தால் 17 வயது போன்று தெரிகிறார் என்பது நமக்குத் தெரியவில்லை. அப்படிதான் தாமரை செல்வி பாவனியிடம் வெள்ளந்தியாக சொல்லிக்கொண்டிருந்தார்.
இதைக் கேட்ட பாவனிக்கு ஒரே சந்தோஷம். சொல்லவே வேண்டாமே! பிறகு தனக்கு 33 வயதாகிறது என்பதைப் பகிர்ந்துகொண்டது மட்டுமல்லாமல், தாமரையையும் அவரைப்போன்று மாடர்ன் ட்ரெஸ் போட்டால் வயது குறைந்துவிடும் என்கிற பிட்டையும் போட்டார். வீட்டைவிட்டு வெளியேறுவதற்குள் இவர்கள் பேசிக்கொண்டது நிச்சயம் ஒருநாள் நடக்கத்தான் போகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2021/10/Bbr3.png)
நம்ம கன்டென்ட் ராணி பிரியங்கா இல்லாத எபிசோடா? ரீல்ஸ் வீடியோவில், ஒரே வார்த்தையை வெவ்வேறு உணர்வுகளில் செய்து காட்டி நம்மைக் கொள்வார்களே. அதைதான் பெண்களின் கூட்டம் பிக் பாஸ் வீட்டிற்குள்ளேயும் செய்துகொண்டிருந்தது. 'நோ' என்கிற வார்த்தையை, சிரித்துக்கொண்டு, கோபத்துடன், பாவத்துடன் என்று பல்வேறு விதமான முகபாவனைகளில் செய்து காட்டினர். இதில் இமான் அண்ணாச்சியையும் இழுத்துக்கொண்டது கூடுதல் ஹயிலைட்.
வீட்டில் எந்த வேலையும் செய்ததில்லை என்று சிபி டீ போட கற்றுக்கொண்டது கியூட். பிறகு, நமது காதல் மன்னன் ராஜு, ஐக்கி மற்றும் சுருதியிடம் கல்யாணம் ஆகிடுச்சா என்று கேட்டார். 'ஆஹா.. வில்லங்கமான ஆளா இருப்பானோ' என்று இரு பெண்களின் மைண்ட் வாய்ஸ் வெளியே கேட்பதற்கு முன்பே சும்மாதான் கேட்டேன் என்றபடி தன்னுடைய லவ் ஸ்டேட்டஸ் சிங்கிள் என்பதையும் பகிர்ந்துகொண்டார். பிறகு, தாமரையை எப்படியாவது பயமுறுத்திவிடவேண்டும் என்று ராஜு எடுத்த முயற்சியில் வெற்றியும் பெற்றார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/10/Bba.png)
மொத்தத்தில், கேமரா கண்களில் அதிகம் தென்படுவது ராஜு. இவரைத் தொடர்ந்து பிரியங்காவின் குரல் ஒலிக்கிறது. சொல்லிக்கொள்ளும் அளவிற்கும் பிரபலம் என்று பெரிதாக யாரும் இல்லாததால், ஒருவருக்கொருவர் பழகுவதில் அவ்வளவாக சிக்கல் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அனைவரும் இயல்பாகவே இருக்கின்றனர். கேமரா முன்பு இருக்கிறோம் என்பது அனைவர்க்கும் தெரிந்தாலும், அவரவர்களுடைய ஆட்டத்தை அவர்கள் மட்டுமே தீர்மானித்து இருப்பதாகத் தெரிகிறது. யார் என்ன தூண்டினாலும், பட்டென ரியாக்ட் செய்யக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளனர்.
நிச்சயம் அக்ஷரா பலரின் மனதை வெல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. சின்னப்பொண்ணு, தான் என்ன செய்கிறோம் என்பதில் மிகவும் தெளிவாக இருக்கிறார். மற்றவர்களின் முகத்திரை பற்றிப் போகப்போகப் பார்க்கலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.