Bigg Boss 5 Tamil Day 10 Review Thamarai Varun Abishek Raja Tamil News நிச்சயம் இந்த நிகழ்ச்சியைப் பார்த்திருந்தால், தாமரையின் மகனுக்கு தன் தாயைப் பற்றி இருக்கும் தவறான எண்ணம் நீங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
Bigg Boss 5 Tamil Day 10 Review Thamarai Varun Abishek Raja Tamil News நிச்சயம் இந்த நிகழ்ச்சியைப் பார்த்திருந்தால், தாமரையின் மகனுக்கு தன் தாயைப் பற்றி இருக்கும் தவறான எண்ணம் நீங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
Bigg Boss 5 Tamil Day 10 Review Thamarai Varun Abishek Raja Tamil News
Bigg Boss 5 Tamil Day 10 Review Thamarai Varun Abishek Raja Tamil News : 'பிக் பாஸ் வீட்டில் அரசியல் எப்படி இருக்கு? என்கிற டிஸ்கஷனில் தொடங்கிய நேற்றைய எபிசோடில், அபிஷேக், தாமரை மற்றும் வருண் கடந்த வந்த பாதைகளும் அவர்களுக்காக மற்றவர்கள் துணை நின்ற விதமும் பாசிடிவிட்டையை வீட்டில் மட்டுமல்ல நம்மிடமும் ஸ்ப்ரெட் செய்தது. மற்றபடி விமர்சிக்கும்படியான கன்டென்ட்டுகள் பெரிதாக நேற்றைய எபிசோடில் எதுவுமில்லை.
Advertisment
'ரவுடி பேபி..' பாடலுக்குக் குத்தாட்டம் போட்டபடி தொடங்கியது பத்தாம் நாள். இசைவாணியை எப்போதுமே குறைகூறிக்கொண்டே இருக்கும் அபிஷேக் ராஜா, அவருடன் அமர்ந்து உணர்வுகளை எப்படிக் கட்டுப்படுத்தவேண்டும் என்று பாடம் எடுத்துக்கொண்டிருந்தார். என்னதான் இசைவாணி முன்பு நல்ல விதமாகப் பேசினாலும், அவர் இல்லாத சமயத்தில் புறம் பேசுவதும், அவர் முன்பே அவரைப்பற்றிக் குறிப்பிடும் சில கொச்சையான வார்த்தைகள் அபிஷேக் மீது எதிர்மறை தோற்றத்தையே கொடுக்கிறது.
அதனைத் தொடர்ந்து அபிஷேக் ராஜாவின் கதை தொடங்கியது. அவருக்குக் கொடுக்கப்பட்ட நேரத்தில் தன்னைப் பற்றி பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஏதுமில்லை என்று நினைத்தாரோ என்னவோ, அவர் சொன்ன கதையில் பெரும்பாலான பகுதி தன் அப்பாவை பற்றித்தான் இருந்தது. 'சிறு வயதிலிருந்து நான் ஒரு புலி போல போஸ் கொடுப்பேன்' என்று அபிஷேக் கூறியது சிரிப்பை வரவழைத்தாலும் 'அப்துல் கலாம் ஐயாவின் பிரைவேட் நம்பரிலிருந்து லெட்டர் வந்தது' என்று கூறியதுதான் குபீர் சிரிப்பை வரவழைத்தது. கடிதமா காலா என்று அவரே கன்ஃபியூஸ் ஆகிவிட்டார் போல.
Advertisment
Advertisements
தன் கண் முன்னே நடமாடிய ஹீரோவின் கதையை மிகவும் அழகாகவே கோர்வையாகக் கொடுத்திருந்தார் அபிஷேக். என்றாலும், அவருக்கு 4 டிஸ்லைக்ஸ் வந்தது. இதனைத் தொடர்ந்து, வீட்டின் தலைவரான தாமரையை கன்ஃபெஷன் அறைக்கு அழைத்த பிக் பாஸ், அவரை மேலும் ஸ்ட்ரிக்ட்டாக இருக்கச் சொன்னார். வெளியே வந்தவர், நான்கைந்து பிட்டை தூக்கலாகப் போட்டு தனக்கான மரியாதையைப் பெற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து தாமரை, தன் கதையைப் பகிர்ந்துகொண்டார். ஏற்கெனவே ப்ரோமோ வெளியானதிலிருந்து, தாமரையின் கதைக்காகப் பலர் காத்திருந்தனர். சிறு வயதில் அரிசி சாதம் என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்தது, வறுமையின் காரணத்திற்காக நாடகத் துரையைத் தேர்ந்தெடுத்தது, இரட்டை வசனங்கள் பேசுபவர்களிடம் இருந்து தன்னை தற்காத்துக் கொண்ட வடுக்கள், திருமணத்தில் ஏற்பட்ட சிக்கல்கள், இரண்டாம் திருமண வாழ்க்கை தோல்வி என ஏராளமான கஷ்டங்களை வெளிப்படையாகவே பகிர்ந்துகொண்ட தாமரை தன்னுடைய மகனின் வருகைக்காகக் காத்திருப்பதையும் அழுத்தமாகப் பதிவு செய்திருந்தார். நிச்சயம் இந்த நிகழ்ச்சியைப் பார்த்திருந்தால், தாமரையின் மகனுக்கு தன் தாயைப் பற்றி இருக்கும் தவறான எண்ணம் நீங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்த உணர்வு நமக்கு மட்டுமல்ல, அங்கிருந்த போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் இருந்தது. இத்தனை நாளில் உண்மையில் தாமரை அப்பாவியா அல்லது அப்பாவி போல நடிக்கிறாரா என்கிற சந்தேகத்தையும் தாண்டி, தடைகளை உடைத்து சாதித்த பெண்மணி என்றே சொல்லத் தோன்றியது. எந்தவித வசதியையும் பெரிதாக அனுபவிக்காத சாமானிய மக்களில் ஒருவரான தாமரை நிச்சயம் பிக் பாஸ் வெற்றியாளராக வரவேண்டும் என்று அபிஷேக் மனதார பாராட்டிய விதம், ஆஸம்.
இதனைத் தொடர்ந்து பாவனி மற்றும் அண்ணாச்சிக்குமான டிஸ்கஷன் உண்மையில் கியூட். பாவனியின் கணவர் இறந்தபிறகு வேறு துணையை தேடிக்கொள்ளவில்லையா என்று அண்ணாச்சி கேட்டதற்கு, வேறொருவர் வந்தார், ஆனால் அந்த உறவு நீடிக்கவில்லை. இனி எந்த புது உறவும் தனக்கு தேவையில்லை. என்றாலும் அவ்வப்போது தான் தனிமையாக உணர்வதாகக் கூறினார். அதற்கு, 'அண்ணன் நான் இருக்கேன்ல' என்று அண்ணாச்சி பதிலளித்ததும், கொஞ்சம் வயதான அண்ணன் என்று பாவனி சிரித்துக்கொண்டே பதிலளித்ததும் அழகிய நொடிகளாகவே இருந்தன.
இறுதியாக வருண் கதை. ஐசரி வேலனின் பேரனும் ஐசரி கணேஷின் உறவினருமான வருண், மற்றவர்களைப் போன்று கஷ்டங்களை அனுபவிக்கவில்லை என்றாலும், தனக்கான பாதையைத் தானே உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால், என்னதான் இருந்தாலும் நிச்சயம் அவருடைய வாழ்வில் தன் தாத்தா மற்றும் மாமாவின் நிழல் உதவில் செய்யாமல் இருந்திருக்குமா என்ன? இவருடைய கதைக்கு 16 டிஸ்லைக்ஸ் வந்தன. அதற்குக் காரணம் வீட்டில் உள்ளவர்களிடம் ஹார்ட்ஸ் மற்றும் லைக்ஸ் எமோஜிக்கள் இல்லை என்றாலும், அதனை சரியான கதைகளுக்குச் சேமித்து வைக்காமல் போனது போட்டியாளர்களின் தவறுதானே!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil