Advertisment

ரெட் கார்ட் கொடுக்கப்படுமா? எல்லை மீறும் அபிஷேக் சேட்டைகள்!

Bigg Boss 5 Tamil Day 15 Review Abishek Ciby Iman Annaachi Tamil News என்றாலும், தனிமையாக உணர்ந்துகொண்டிருக்கும் இசைவாணியை தேர்ந்தெடுத்திருக்கலாம். அது அவருக்கு மற்றவர்களோடு இணைந்து பழகுவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கும்.

author-image
priya ghana
Oct 19, 2021 11:54 IST
New Update
Bigg Boss 5 Tamil Day 15 Review Abishek Ciby Iman Annaachi Tamil News

Bigg Boss 5 Tamil Day 15 Review Abishek Ciby Iman Annaachi Tamil News

Bigg Boss 5 Tamil Day 15 Review Abishek Ciby Iman Annaachi Tamil News : திங்கள் என்றாலே பரபரப்பிற்குக் குறைவில்லாமல் நகரும் நாள். அதிலும் பிக் பாஸ் பற்றிக் கேட்கவே வேண்டாம். நாமினேஷன், வீட்டுத் தலைவர் தேர்வு என முழு நாளும் பிஸியாகவே நகரும். அந்த வரிசையில் வீட்டின் புதிய தலைவராக சிபி எப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது முதல் வழக்கம்போல அபிஷேக்கின் மொக்கை அட்ராசிட்டிகள் வரை பதினைந்தாம் நாள் எப்படிக் கடந்தது என்பதைப் பார்ப்போம்.

Advertisment

யாரெல்லாம் சமத்துப் பிள்ளைகளாக ஒவ்வொரு டாஸ்க் பொழுதும் இருந்திருக்கிறார்கள் என்பதன் அடிப்படையில் இசைவாணி, சிபி, பாவனி மற்றும் ராஜு ஆகிய நான்கு பேர் தேர்வு செய்யப்பட, வீட்டில் ஜொலித்தவர் என்கிற பட்டம் வாங்கிய இமான் அண்ணாச்சியும் இவர்களோடு சேர்க்கப்பட்டார். கடந்த சீசனில் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி சிலை போல் நிற்கும் டாஸ்க் போன்று, தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து போட்டியாளர்களுக்குக் கொடுக்கப்பட்டது.

publive-image

இதுதான் நல்ல சான்ஸ் என்று நினைத்த மற்ற போட்டியாளர்கள், தங்களுக்குள் மறைந்திருந்த குரங்கு சேட்டைகளை அவுத்து விட்டனர். முதலாவதாக அண்ணாச்சியை டார்கெட் செய்த ஹவுஸ்மேட்ஸ், அப்படி இப்படிக் கத்தி கூச்சலிட்டு அவரை சிரிக்கவைத்து விட்டனர். அடுத்ததாக, ராஜூவை டார்கெட் செய்தனர். திடீரென இசைக்கு விட்டுக்கொடு என்று கத்திக்கொண்டே இருந்தார் பிரியங்கா. ஆனால், என்னவோ கத்திட்டு போங்க என்றபடி அசையாமல் இருந்தார் ராஜு. பிறகு, பாவனி, சிபி என மற்றவர்களையும் டார்கெட் செய்தனர். ஆனால், பாவனியைப் பற்றிப் பேசும்போது மட்டும் அபிஷேக் கொஞ்சம் பாரபட்சம் பார்த்தது வெட்டவெளிச்சமாகத் தெரிந்தது.

முதல் முயற்சியில் அண்ணாச்சியை மட்டுமே அவுட்டாக முடிந்த போட்டியாளர்கள், இரண்டாவது சுற்றுக்குத் தயாராகினர். இந்நிலையில் அபிஷேக் மற்றும் நிரூப் தேர்ந்தெடுத்த ஆயுதம், பெண் வேடம். மூன்றாம் சீஸனில் விளையாட்டிற்காகக் கவின், ஷெரின் உடையை அணிந்து அட்ராசிட்டி செய்திருப்பார். அது என்னவோ பார்க்க கியூட்டாக இருந்தது. ஆனால், லேடி கெட்டப்பில் அபிஷேக்! நிச்சயம் சிரிப்பு வரவில்லை. ஆனால், நிரூப் பெண் வேடம் போட்டது, எதிர்பார்க்காத ஒன்று.

publive-image

ராஜூவை எப்படியாவது அவுட்டாக்கி விட வேண்டும் என்று எண்ணிய சின்னப்பொண்ணு, தனக்கு டிஸ்லைக் கொடுத்த விஷயத்தை உரக்க குரலில் சுட்டித்தனமாகவே கூறினார். வீட்டிலேயே சின்னபொண்ணுவுக்கு க்ளோஸாக இருக்கும் அக்ஷரா, அதனை ரசித்தபடியே பார்த்துக்கொண்டிருந்தார். இப்படி கலகல ஃபன் ஒரு பக்கம் இருக்க, சட்டென கத்தி இசைவாணியை பயப்பட வைத்து அவுட்டாக்கினார் அபிநய். பிறகு, ராஜு, பாவனி மற்றும் சிபி இறுதி போட்டியாளர்களாக இருக்க, யார் வெற்றிபெற வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவருக்கு மாலை அணிவிக்கச் சொன்னார் பிக் பாஸ். அதன்படி, பாவனி மற்றும் ராஜுவிற்கு 5 மாலைகள் விழுந்தன.

என்ன நினைத்தார்களோ தெரியவில்லை, மாலையை மாற்றி அணிவிக்கலாம் என்று அறிவிப்பு வந்ததும், ராஜு கழுத்திலிருந்த மாலைகளைக் கழட்டி சிபிக்கு அணிவித்தனர் சிலர். இறுதியில் அதிக வாக்குகள் பெற்று சிபி இந்த வாரத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒருவழியாக, வீட்டில் காணாமல் போயிருந்த சிபியை முன்னுக்கு வரவைத்து, 'இருக்கேன் பாருங்க' என்று காட்டியது இந்த முடிவு. என்றாலும், தனிமையாக உணர்ந்துகொண்டிருக்கும் இசைவாணியை தேர்ந்தெடுத்திருக்கலாம். அது அவருக்கு மற்றவர்களோடு இணைந்து பழகுவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கும். ஹ்ம்ம்.. அடுத்ததாக நாமினேஷன்தான்.

publive-image

நாம் நினைத்தது போல மோடு முட்டி அபிஷேக் அதிகப்படியான வாக்குகளைப் பெற்று நாமினேஷனில் தவறாமல் இடம் பிடித்துள்ளார். ஒரு தேசிய தொலைக்காட்சி சேனலில் சகப் போட்டியாளரை 'வாடி போடி' என்று கூறுவது, உடல் கேலி செய்வது போன்றவை தவிர்க்கப்படவேண்டிய விஷயம். கடந்த சீசன்களில் சரவணன் வெளியேற்றப்பட்டதற்கு சற்றும் குறைவில்லாமல் இருக்கிறது அபிஷேக் தற்போது வீட்டில் கேலி செய்து சுற்றிக்கொண்டிருப்பது. அதுமட்டுமின்றி, தாங்கள் யாரை நாமினேட் செய்தார்கள் என்பதைப் பற்றிக் கடந்த சீசன்களில் இவ்வளவு வெளிப்படையாக யாரும் டிஸ்கஸ் செய்யவில்லை, செய்யவும் கூடாது என்பதுதான் பிக் பாஸ் ரூல்ஸ். அதனை எடுத்துரைத்து ராஜூவை கம்பெல் செய்துகொண்டிருந்தால் அபிஷேக். இப்படிப் பல நியூசென்ஸ் நிகழ்வுகளை தினமும் அரங்கேற்றி வருகிறார் அபிஷேக். என்றைக்கு ரெட் கார்டு வாங்கிக்கொண்டு வெளியேர போகிறாரோ தெரியவில்லை.

சென்ற வாரம் பாவனியை போன்று இந்த வாரம் எந்த வோட்டும் ராஜுவிற்கு கிடைக்கவில்லை. ஆனால், ப்ரோமோவில் இசைவாணி பங்கமாகத் தாக்கப்படுவது போலவும், அதற்கு இமான் அண்ணாச்சி கோபமடைந்து தட்டி கேட்பது போலவும் வந்ததே அது எங்கேடா என்று பார்த்தால், வழக்கம்போல நம்ம எடிட்டர் கைவண்ணம்தான் அதுவும். அதிலும், இமான் அண்ணாச்சியின் நடுநிலையான வாதத்தைப் பார்த்து சிலிர்த்துபோய் சில்லறைகளைச் சிதறவிட்ட ரசிகர்களை ஏமாற்றும் விதமாக, 'சும்மா பிராங்க் பண்ணினேன்' என்று கூறியது நேற்றைய எபிசோடில் மிகப் பெரிய ஷாக்! என்ன எடிட்டர் சார் நீங்க!

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Bigg Boss Tamil #Vj Priyanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment