வலுவான குட்டி அன்பு கேங்.. இதுதானா பிரியங்காவின் உண்மை முகம்?

Bigg Boss 5 Tamil Day 17 Review Priyanka Akshara Abishek அக்ஷரா காப்பாற்றப்படக்கூடாது என்பதே அவருடைய மெயின் நோக்கமாக உள்ளது. அதற்காக அவர் எடுக்கும் முயற்சிகள் யாவும் வேற லெவல்.

Bigg Boss 5 Tamil Day 17 Review Priyanka Akshara Abishek
Bigg Boss 5 Tamil Day 17 Review Priyanka Akshara Abishek

Bigg Boss 5 Tamil Day 17 Review Priyanka Akshara Abishek : இதுவரை தனிக்காட்டு ராஜாவாக நின்று நம்மை கடுப்பேற்றிக்கொண்டவரின் பட்டியலில் புதிய முகங்கள் இணைந்துள்ளனர். உங்கள் கணிப்பு சரிதான். அபிஷேக் ராஜாவேதான் அது. அவரோடு கடுப்பேத்தும் சிகாமணிகளாக பிரியங்கா, பாவனி மற்றும் சுருதி ஆகியோர் இணைந்துள்ளனர். பரபரப்பாக கேம் ஒரு பக்கம் நகர்ந்துகொண்டிருந்தாலும், உள்ளே என்னதான் நடக்கிறது என்றபடி ஆடியன்ஸையும் பெரிய கேள்விக்குறியோடு அமர வைத்திருக்கிறார் பிக் பாஸ். வரவர இந்த ரியாலிட்டி நிகழ்ச்சியும் சீரியலை போன்று எடிட் செய்யப்பட்டு வருகிறது. என்னதான் ஆச்சு? அலாசுவோம்..

‘யாருடா அது என்கிட்டே இருந்த நாணயத்தைத் திருடுவது. உங்களுடையதை நான் திருடினேனா? ஏண்டா என்னை மட்டும் இப்படி பண்ணுறீங்க? போங்கடா நான் யாருகிட்டேயும் திருட மாட்டேன்’ என்றபடி நாள் முழுவதும் தனிமையில் புலம்பிக்கொண்டிருந்தார் ஐக்கி பெரி. பார்க்க பாவமாகதான் இருக்கிறது. ஆனால், அது யாரு எடுத்தது என்று நமக்கும் எடிட் செய்து காட்டவில்லை நம்ம எடிட்டர். இருக்கட்டும் இருக்கட்டும்!

பாதாள சிறையில் மாட்டிக்கொண்ட நிரூப், தன்னிடமிருந்த நாணயத்தை ப்ரியங்காவிடம் கொடுக்கும்போது வசமாக மாட்டிக்கொண்டார். ஏன்பா .. அதான் ஒருமுறை மாட்டி ஜெயிலுக்கும் போயாச்சுல்ல. அப்போதாவது கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கவேண்டாமா? ஒருவேளை தனியா சிறையில் இருப்பது கடுப்பாக இருப்பதனால், வேண்டுமென்றே பிரியங்காவை மாட்டவைக்கும் திட்டமாக இருக்குமோ! சரி எது எப்படியோ! பிரியங்கா மட்டுமல்ல கூடவே சுருதியும் சிறையில் அடைக்கப்பட்டார்.

இப்படி தன்னுடைய கேங் மேட்டுகள் இருவரும் சிறையில் இருக்க, அபிஷேக் அதே இடத்தில் அமர்ந்து காவல் காத்துக்கொண்டிருந்தார். அப்போதும் அபிஷேக் வாய் அடங்கவில்லை. ராஜூவை சம்பந்தமே இல்லாமல் சிவகார்த்திகேயனோடு ஒப்பிட்டுப் பேசினார். உடனே, ‘வாயை மூடு. ராஜு பற்றிப் பேசாதே’ என்றபடி பிரியங்கா கொதித்தார். அது என்னவோ தெரியவில்லை என்ன மாயமோ புரியவில்லை.. இந்த ராஜு மற்றும் அக்ஷராவை பார்த்தாலே பிரியங்கா கேங்கிற்கு பிடிக்கவில்லை. எங்கு சென்று முடியுமோ!

இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று ஸ்கெட்ச் போட்டு வைத்தபடி அக்ஷராவை வம்புக்கு இழுத்தார் பாவனி. ‘எதுனாலும் மூஞ்சிக்கு நேரா பேசுங்க’ என்று பாவனி அக்ஷராவை பார்த்து சொல்வதெல்லாம் சரிதான். அது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால், பிறரைக் கூறுவதற்கு முன்பு நாம் அப்படிச் செய்யாமல் இருக்கவேண்டும் அல்லவா? அப்போதுதானே நம் பாயின்ட்டுக்கு ஒரு மரியாதை. அபிநய் இல்லாத நேரத்தில் அவரைப்பற்றி அபிஷேக் மற்றும் மதுவிடம் பேசியது எல்லாம் சரியா? என்னம்மா பாவனி இப்படி பண்ணுறீங்களேமா!

இரவெல்லாம் யாரும் தூங்குகின்ற பிளானில் இல்லை. விடிய விடிய ஆங்காங்கே க்ரூப் மீட்டிங் நடந்துகொண்டுதான் இருந்தது. அப்போது இமான் அண்ணாச்சி, பிரியங்கவிடம் அவர் பயன்படுத்தும் வார்த்தைகளை நல்ல விதமாக பேசுங்க என்றதற்கு ‘நீங்க இரட்டை வேஷம் போடுகிறதை நிறுத்துங்க’ என்றபடி நீண்ட விளக்கம் ஒன்ரேய் கொடுத்துவிட்டு இடத்தை காலி செய்தார் பிரியங்கா. என்னதான் இருந்தாலும் இவ்வளவு பிரியங்கவிடம் இருந்து இப்படிப்பட்ட ஒரு பதிலை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

நேற்றைய எபிசோடை பொறுத்தவரையில், பிரியங்கா, நிரூப் மற்றும் அபிஷேக் கேங்கிடம் 3 நாணயங்கள் உள்ளன. மற்ற இரண்டில் ஒன்று அக்ஷராவிடம் இருக்கிறது, அதனை எப்படியாவது எடுத்துவிடவேண்டும் என்பதற்காக பிரியங்கா கேங் போராடுகிறது. வீட்டில் மற்ற யாரிடம் அந்த நாணயம் இருந்தாலும் பிரியங்காவிற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், அக்ஷராவிடம் மட்டும் இருக்கக்கூடாது. அவர் காப்பாற்றப்படக்கூடாது என்பதே அவருடைய மெயின் நோக்கமாக உள்ளது. அதற்காக அவர் எடுக்கும் முயற்சிகள் யாவும் வேற லெவல்.

அக்ஷராவும் சின்னப்பொண்ணும் நெருக்கமானவர்கள் என்பதால், சின்னப்பொண்ணை தனியே அழைத்துச் சென்று அவரை சோதனை செய்தது, பிரியங்காவின் வேறொரு பரிமாணத்தைக் காட்டியது. மேலும், அக்ஷராவிடம் க்ளோஸாக இருக்கும் ராஜுவிடம் அமர்ந்து மணிக்கணக்காக பேசி அவரை மூளை சலவை செய்ய முயற்சி செய்ததெல்லாம், இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே டெம்ப்லேட்தான். என்னதான் பேசுங்க, என்னிடமிருந்து எதுவும் வேலைக்காகாது என்றபடி ராஜு அமர்ந்திருந்தது, அபிஷேக்கை கடுப்பேற்றியிருக்கும் போல. ஒருகட்டத்தில் ராஜுவிடம் பொங்கி எழுந்தார். அப்போது நடுவில் மூக்கை நுழைத்த அண்ணாச்சியையும் வழக்கம்போல தரக்குறைவாகப் பேசினார் அபிஷேக். இதெல்லாம் கமல் கேட்பாரா மாட்டாரா?

எவ்வளவு அடியைத்தான் அக்ஷராவும் தாங்குவார். ஆனால், தான் குறிவைக்கப்பட்டதை மிகச் சரியாக கணித்து தாமரை மற்றும் சின்னபொண்ணுவிடம் கூறி கண் கலங்கினார் அக்ஷரா. வீட்டுக்கு போகணும் என்கிற அளவிற்கு மனஉளைச்சலுக்கு தள்ளப்பட்டிருக்கிறார். அப்படி என்னதான் இவர் மீது பிரியங்காவிற்குக் கடுப்போ தெரியவில்லை. இதில் சப்போட்டிற்கு அபிஷேக் வேறு. அதிலும், ‘ராஜூவையும் அக்ஷராவையும் பிரித்துக் காட்ட தன்னால் முடியும்’ என்று அபிஷேக் கூறியதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. எப்படியெல்லாம் ஒரு மனிதன் இருக்கக்கூடாது, எதுபோன்ற சிந்தனைகள் எல்லாம் எழவே கூடாது என்பதற்கான சிறந்த உதாரணம் அபிஷேக்.

இதெல்லாம் சரிதான். ஆனால், அந்த நாணயங்கள் யார் யாரிடம் இருக்கிறது என்பதெல்லாம் நமக்கே ஒளிபரப்ப மாட்டிங்குறாங்களே அதுதான் வருத்தமா இருக்கு. நிச்சயம் அபிஷேக்கிடம் ஒரு நாணயம் இருக்கும். அதை அவருக்காக அவரே பயன்படுத்த மிகவும் பத்திரமாகக் காப்பாற்றி வைத்திருக்கிறார். இதைத் தவிர அபிஷேக் கேங்கிடம் 2 நாணயங்கள் உள்ளன என்பது நம்முடைய கணிப்புதான். மற்ற 2 ராஜு மற்றும் சிபியிடம் இருக்கலாம். சீரியலில் வரும் ட்விஸ்ட் மற்றும் ஒன்றுமில்லாததை நீண்டு இழுத்துக் காட்டப்படுவதைப்போல இருக்கிறது இந்த வார பிக் பாஸ் எபிசோட்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss 5 tamil day 17 review priyanka akshara abishek

Next Story
Tamil Serial Rating : அடுத்த பிரச்சனை ரெடி… பழைபடி மாறும் மீனா? பரிதாபமான பாண்டியன் ஸ்டோர்ஸ்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com